guntur catering - Catering Service - Ads Khan Buy Sell Anything
guntur catering - Catering Service - Ads Khan Buy Sell Anything: guntur catering in Catering Service on Ads Khan Buy Sell Anything
catering in vijayawada - Catering Service - Ads Khan Buy Sell Anything
catering in vijayawada - Catering Service - Ads Khan Buy Sell Anything: catering in vijayawada in Catering Service on Ads Khan Buy Sell Anything
தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!
தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!
Ads Khan Buy Sell Anything
Ads Khan Buy Sell Anything: Real estate Agents Broker House And Land Plot Buying And Selling.Used Car Catering service all Type House Hold Products And Jobs
தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!
தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!
Agriculture Land For Sale iN Periyapalaiyam - Land Plot (Real Estate
Agriculture Land For Sale iN Periyapalaiyam - Land Plot (Real Estate: Agriculture Land For Sale iN Periyapalaiyam in Land Plot on Ads Khan Buy Sell Anything
Catering Service In Guntur - Home category - Ads Khan Buy Sell
Catering Service In Guntur - Home category - Ads Khan Buy Sell: Catering Service In Guntur in Home category on Ads Khan Buy Sell Anything
Real Estate Broker In Gummidipoondi - Real Estate Agents Brokers (Real
Real Estate Broker In Gummidipoondi - Real Estate Agents Brokers (Real: Real Estate Broker In Gummidipoondi in Real Estate Agents Brokers on Ads Khan Buy Sell Anything
Bank Actoin Property For Sale In Chennai - House (Real Estate
Bank Actoin Property For Sale In Chennai - House (Real Estate: Bank Actoin Property For Sale In Chennai in House on Ads Khan Buy Sell Anything
தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!
தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!
Namma Veedu Real Estate Agents In Redhills - Real Estate Agents
Namma Veedu Real Estate Agents In Redhills - Real Estate Agents: Namma Veedu Real Estate Agents In Redhills in Real Estate Agents Brokers on Ads Khan Buy Sell Anything
Businesses Loan Without Collateral - Home category - Ads Khan Buy Sell
Businesses Loan Without Collateral - Home category - Ads Khan Buy Sell: Businesses Loan Without Collateral in Home category on Ads Khan Buy Sell Anything
தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!
தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!
House For Sale In Red hills Urgent - House (Real Estate Properties For
House For Sale In Red hills Urgent - House (Real Estate Properties For: House For Sale In Red hills Urgent in House on Ads Khan Buy Sell Anything
Real Estate land பங்குதாரர்கள் தேவை - House (Real Estate Properties
Real Estate land பங்குதாரர்கள் தேவை - House (Real Estate Properties: Real Estate land பங்குதாரர்கள் தேவை in House on Ads Khan Buy Sell Anything
Land Broker In Redhills - Real Estate Agents Brokers (Real Estate
Land Broker In Redhills - Real Estate Agents Brokers (Real Estate: Land Broker In Redhills in Real Estate Agents Brokers on Ads Khan Buy Sell Anything
தாகித்தவர் இவுலகில்
தண்ணீரை தேடுகின்றனர்!
தண்ணீரும் தேடுகின்றது
தாகம் கொண்டவர்களை!!
வளர்ச்சி அடைந்து வரும் மாதவரம்
வளர்ச்சி அடைந்து வரும் மாதவரம்
பதிவு செய்த நாள் : Apr 19 | 12:00 am
சென்னை புறநகர் பகுதிகளை நோக்கி குடியிருப்புகள் விரிவாக்கம் அடையத் தொடங்கியதில் இருந்து அந்த பகுதிகள் படிப்படியாக வளர்ச்சி பாதையை நோக்கி அடிஎடுத்து வைத்து வருகின்றன. அப்படிப்பட்ட பகுதிகளுள் ஒன்றாக விளங்குகிறது மாதவரம். புறநகர் பகுதியில் அமைந்து இருந்தாலும் வளர்ச்சி அடைந்து வரும் பகுதிகளுள் ஒன்றாக இருக்கும் பெரம்பூரின் வடபகுதியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்குள் அமைந்திருக்கிறது.
சாலை வசதி மேம்பாடு
பெரம்பூர் பகுதியை ஒப்பிடும்போது சமூக கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்தாலும் தற்போது படிப்படியாக மேம்பாடு அடைந்து வருகிறது. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உணவு விடுதிகள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்பு வசதிகள் மாதவரம் பகுதியை சூழ்ந்து இருக்கின்றன. மாதவரம்–செங்குன்றம் சாலை பகுதி சில முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் செல்வதால் அந்த பகுதிகளில் கட்டிடங்கள் பெருகிய வண்ணம் இருக்கின்றன.
அது தவிர நகரின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் சாலை வசதிகளும் மேம்பட்டு வருகின்றன. அதனால் மாதவரம் வழியாக முக்கிய பகுதிகளை சென்றடையும் இணைப்பு சாலைகள் அமைந்திருக்கும் பகுதிகளை கட்டிடங்கள் ஆக்கிரமித்த வண்ணம் உள்ளன. வர்த்தக ரீதியான கட்டிடங்கள் சாலைப்பகுதிகளில் அமைந்திருக்க, உட்புற பகுதிகளில் குடியிருப்புகள் பெருகிய வண்ணம் இருக்கின்றன.
சொத்து விலை குறைவு
பெரம்பூர் பகுதியை ஒப்பிடும்போது இங்கு சொத்து மதிப்பு விலை குறைவாக இருக்கிறது. அதாவது பெரம்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றின் விலை ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்றால் அதே சதுர அடி அளவு கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடு மாதவரம் பகுதியில் ரூ.40 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரையில் கிடைக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் பெரம்பூர் பகுதிக்கு இணையாக மாதவரம் பகுதியில் சொத்து மதிப்பு உயர்வடையவில்லை என்றாலும் பெருகி வரும் சமூக கட்டமைப்பு வசதிகள் வருங்காலத்தில் விலை மதிப்பை உயர்த்தும் என்பது ரியல் எஸ்டேட் நிபுணர் களின் கருத்தாக உள்ளது. ஏனெனில் மாதவரம் பகுதியை நோக்கி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதன் மதிப்பை உயர்த்தும் வகையில் இருக்கிறது.
வாங்குவதற்கு ஆர்வம்
அதற்கு ஏற்ப ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கட்டுமான திட்டங்கள் இருக்கின்றன. மாதவரம் பகுதியில் ஆங்காங்கே அடுக்குமாடி குடியிருப்புகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் புதிய கட்டுமானங்களை அமைக்க ஆயத்தமாகி வருகின்றன. அவை பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று படுக்கை அறை வீடுகளை கொண்டவைகளாக இருக்கும் விதத்தில் திட்ட மதிப்பீடு இருக்கிறது.
வீடுகளின் சதுர அடி மதிப்பு ரூ.3,750 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது இடத்தை பொறுத்து மாறுபடுகிறது. முக்கிய பகுதிகளில் சதுர அடி மதிப்பு ரூ.4,500 வரையிலும் நீளுகிறது. மற்ற பகுதிகளை விட சொத்து மதிப்பு குறைவாக இருப்பதால் பெரம்பூர் பகுதிக்கு அருகில் வசிக்கும் பலரும் மாதவரம் பகுதியில் சொத்து வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
முதலீடு நோக்கம்
அதிலும் பலர் எதிர்பார்க்கும் பட்ஜெட்டில் சொத்து வாங்குவதற்கு ஏற்ற பகுதியாக மாதவரம் இருக்கும் என்பது ரியல் எஸ்டேட் ஆலோசகர்களின் கருத்தாக இருக்கிறது. மேலும் நீண்ட கால முதலீடு நோக்கத்தில் சொத்து வாங்க நினைப்பவர்களுக்கும் மாதவரம் பகுதி சாதகமாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள். அதற்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகள் பெருகிவரும் பகுதியாக மாதவரம் தென்படுகிறது. உடனே வீடு கட்டி குடியேற முடியாதவர்கள் பார்வை ஆங்காங்கே காலியாக கிடக்கும் வீட்டுமனைகள் பக்கம் திரும்பி இருக்கிறது.
அனைத்து வசதிகளும் சூழ்ந்த பகுதியில் அமைந்திருக்கும் வீட்டுமனைகளை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். அவைகள் குறைந்த அளவிலேயே இருப்பதால் விலை மதிப்பு ஏறுமுகமாக இருக்கிறது. ஆகையால் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு முதலீடு நோக்கத்தில் சொத்து வாங்குவதற்கு ஏற்ற பகுதிகளுள் ஒன்றாக மாதவரம் விளங்குகிறது
தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!
முதியவர்கள் அறயை ஒழுங்குபடுத்துங்கள்!
முதியவர்கள் அறயை ஒழுங்குபடுத்துங்கள்!



-A+A
பதிவு செய்த நாள் : Apr 19 | 12:00 am

வீட்டின் அறைகளை விதவிதமான அலங்கார பொருட்களை கொண்டு அழகுபடுத்தினாலும் வீட்டில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் இருக்க வேண்டும். குறிப்பாக வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்களுக்கு ஏற்ப அறை வடிவமைக்கப்பட வேண்டியது அவசியம்.
தரையில் கவனம்
அவர்களுக்கு தனியாக அறை இருக்கும் பட்சத்தில் அவர்கள் பயன்படுத்துவதற்கு சவுகரியமாக இருக்குமாறு அறையை மாற்றி அமைக்கலாம். முக்கியமாக தரைத்தளத்தை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். அறையை அழகுபடுத்துவதில் டைல்ஸ்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்றாலும் அவை முதியவர்கள் நடப்பதற்கு ஏதுவாக இருக்க வேண்டும்.
அதனால் வழுக்கும் தன்மை கொண்ட பளபளப்பு டைல்ஸ்களை முதியவர்கள் அறையில் பதிப்பதை தவிர்த்து விட வேண்டும். அத்தகைய டைல்ஸ்கள் முதியவர்கள் நடப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். காலிலோ, தரையிலோ ஈரப்பதம் படிந்திருக்கும்போது நடந்தால் வழுக்கி விழுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அது அவர் களின் உடல் ஆரோக்கியத்திற்கு பங்கம் விளைவிக்க செய்துவிடும்.
சொரசொரப்பு தன்மை
ஆகையால் டைல்ஸ் பதிப்பதாக இருந்தால் சொரசொரப்பு தன்மை கொண்ட டைல்ஸ்களையே முதியவர்கள் பயன்படுத்தும் அறைகளில் பதிக்க வேண்டும். அதுபோல் குளியல் அறையிலும் சொரசொரப்பு தன்மை கொண்ட டைல்ஸ்களையே இடம்பெற செய்ய வேண்டும். அங்கு ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் வழவழப்பு தன்மை கொண்ட டைல்ஸ்களை பதிக்கக்கூடாது. நடக்கும் போது கால்களுக்கு பிடிப்பு தன்மையை கொடுக்கும் வகையில் டைல்ஸ்கள் தேர்வு இருக்க வேண்டும்.
மேலும் குளியல் அறையை முதியவர்கள் எளிதாக பயன் படுத்தும்படி வடிவமைக்க வேண்டும். தண்ணீர் குழாய்கள் அவர்கள் சிரமப்படாமல் திறந்து மூடுவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். அவர்கள் சிரமமின்றி நடந்து செல்வதற்கு ஏதுவாக கைபிடிகளை அமைக்க வேண்டும். கழிவறையிலும் மேற்கத்திய பாணி (வெஸ்டன் டாய்லட்) கழிப்பிடங்களை அமைப்பது நல்லது.
அலமாரியில் மாற்றம்
முதியவர்கள் பயன்படுத்தும் அறைகளில் அலமாரிகள் அதிக உயரத்தில் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். அவர்கள் பொருட்களை எடுப்பதற்கு சிரமமில்லாத வகையில் இருக்க வேண்டும். அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களை தனியாக அலமாரியின் கீழ்பகுதியில் வைப்பதற்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அல்லது மேஜையுடன் இணைந்த டிராயர்களை முதியவர்கள் பயன்படுத்தும்படி மாற்றி அமைக்கலாம். அவை பொருட்களை எடுத்து பரிமாறுவதற்கு சவுகரியமாக இருக்கும்.
மாடிப்படிக்கட்டுகளையும் அதிக உயரத்தில் அமைக்கக்கூடாது. ஒரு படிக்கட்டுக்கும், அடுத்த படிக்கட்டுக்கும் இடையே உள்ள உயரம் அவர்கள் எளிதாக ஏறி, இறங்குவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். படிக்கட்டு சுவர்களில் அமைக்கப்படும் கைப்பிடிகள் வழுக்கும் தன்மை கொண்டவையாக இருக்கக்கூடாது. படிக்கட்டு தரையிலும் டைல்ஸ் பதிப்பதை தவிர்க்க வேண்டும்.
தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!
வீ ட்டை அழகுபடுத்துகிறீர்களா?.. இதைப்படிங்க..
வீ ட்டை அழகுபடுத்துகிறீர்களா?.. இதைப்படிங்க..
பதிவு செய்த நாள் : Apr 26 | 01:00 am
வீட்டை அழகாக வைத்திருக்க அலங்கார பொருட்களை அடுக்கி வைத்து அலங்கரிப்பதற்கு தனிக்கவனம் செலுத்துபவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அலங்கார பொருட்கள் வீட்டை அழகாக தோற்ற செய்யும் என்ற எண்ணமே அதற்கு காரணமாக இருக்கும். எத்தகைய அழகியலை வெளிப்படுத்தும் அலங்கார பொருட்களாக இருந்தாலும் அவை இருக்கும் இடத்தை பொறுத்து தான் அதன் அழகு வெளிப்படும். அதற்கு எந்த பொருட்களை எங்கு வைத்தால் அழகுடன் ஆடம்பர தோற்றத்தை வெளிப்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அழகு பொருட்களாக இருந்தாலும் அதை ஒரே இடத்தில் குவித்து வைத்தால் அதன் தனித்துவ அழகை ரசிக்க முடியாமல் போய்விடும். அந்த அலங்கார பொருட்களை சூழ்ந்து மற்ற பொருட்களை அடுக்கி வைத்தால் அறையே அலங்கோலமாக காட்சி அளிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே பொருட்களை சரியாக ஒழுங்குபடுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தேவையில்லாத பொருட்கள் இடத்தை அடைத்து கொண்டு இருக்க கூடாது. அவை எப்போதாவது தான் தேவைப்படும் என்றால் அறைக்குள் சிறிய குடோனை ஏற்படுத்திவிட வேண்டும். அடிக்கடி தேவைப்படாத பொருட்களை குடோனின் மூலைப்பகுதியிலும், மற்ற பொருட்களை அதன் பயன்பாட்டை பொறுத்து முன்வரிசையிலும் அடுக்கி வைக்க வேண்டும்.
அப்படி ஒழுங்குபடுத்தினால் தேவைப்படும் போது பொருட்களை எடுப்பதற்கு சுலபமாக இருக்கும். அதேபோல் அறையின் மற்ற பகுதிகளிலும் பொருட்களை ஒழுங்குபடுத்தி வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதற்கு சில டிப்ஸ்களை பார்ப்போம்.
* வீட்டின் வரவேற்பறையில் அலமாரி இருந்தால் அதில் அழகு பொருட்களை அடுக்கி வைப்பதற்கு மட்டும் ஆர்வம் காட்டக்கூடாது. சில பொருட்கள் தனித்து இருந்தால் தான் அதன் அழகியலை ரசிக்க முடியும். ஆகவே வரிசையாக பொருட்களை அடுக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். பொருட்களுக்கு இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும். எங்கிருந்து பார்த்தாலும் ஒழுங்கற்று தெரியாது அழகுடன் பளிச்சிடும் வகையில் அலங்கரித்து வைக்க வேண்டும்.
* வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களை கவரும் பொருட்களை வைப்பதற்கு அலமாரியில் தனி வரிசையை ஒதுக்கி விட வேண்டும். அது குழந்தைகளை குஷிப்படுத்துவதோடு பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் காட்சி தரும். குழந்தைகள் பள்ளிகளில் போட்டியில் வென்று பரிசு பொருட்களை வாங்கி வந்தால் அவைகள் தனியாக தெரியும்படி வரிசைப்படுத்தி வைக்க வேண்டும்.
* பர்னிச்சர்களையும் அறைக் குள் அடைத்துவிடக்கூடாது. அறைக்குள் விசாலமான இடம் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பர்னிச்சர்களை இடம்பெற செய்ய வேண்டும். வரவேற்பறையில் குறைந்த அளவிலான பர்னிச்சர்கள் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவற்றை எந்த இடத்தில் வைத்தால் அறையுடன் ஒன்றி அழகுற தோன்றும் என்பதை கவனித்து அலங்கரிக்க வேண்டும்.
* சமையல் அறை அலமாரிகளையும் ஒரே மாதிரியான பொருட்களை கொண்டு அலங்கரிக்க வேண்டும். முக்கியமாக மசாலா பொருட்களை ஒரே அளவிலான பாட்டில்களில் நிரப்பி அடுக்கி வைக்க வேண்டும். அப்போது தான் ஒழுங்குடன் தெரியும். பொருட்களை எடுத்து பயன்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும்.
* அறையில் மேஜை இருந்தால் அவற்றில் இடம் இருக்கும் அளவிற்கு டிராயர்களை அமைத்து விட வேண்டும். அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களை அதில் அடுக்கி வைத்து பயன்படுத்தலாம். இதனால் பொருட்கள் தேவையில்லாமல் அறைக்குள் ஒழுங்கற்று கிடப்பது தவிர்க்கப்படும். அறையும் அழகுடன் காட்சி அளிக்கும்.
* கட்டிலுடன் இணைந்த டிராயர்களை வாங்க வேண்டும். இல்லாவிட்டால் கட்டிலுக்கு அடியில் சிறிய டிராயரை வைத்துக்கொள்ள வேண்டும். அதில் தலையணை, போர்வைகளை மடித்து வைத்துக்கொள்ளலாம். இதனால் கட்டிலில் பொருட்கள் குவிந்து கிடக்காது. படுக்கை அறையும் அழகுடன் மிளிரும்.
* அறைக் குள் அதிக அளவில் பொருட்கள் இல்லாமல் இருந்தாலே போதும். அறையின் அழகை பற்றி கவலைப்பட தேவையில்லை. பொருட்களை மீண்டும் எடுத்த இடத்தில் ஒழுங்காக அடுக்கி வைத்தாலே அழகுடன் மிளிரும்
தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!
சுவர்களுக்கு வலிமை சேர்க்கும் கற்கள்
சுவர்களுக்கு வலிமை சேர்க்கும் கற்கள்
பதிவு செய்த நாள் : Apr 26 | 01:00 am
கட்டுமானத்தின் முக்கிய அம்சமாக விளங்குபவை சுவர் கள். மழை, வெயில் என எத்தகைய பருவ காலத்துக்கும் ஈடுகொடுத்து கட்டிடங்களை வலிமையாக எழுந்து நிற்கச்செய்கின்றன.
தொழில்நுட்ப முறைகளால் கட்டுமானத் துறை பல மாற்றங்களை சந்தித்து வரும் நிலையில் புதிதாக அறிமுகமாகி உள்ளது ‘ஆட்டோகிளேவிட் கான்கிரீட் கற்கள்’. கான்கிரீட் கற்களை போன்றே இவையும் நீடித்து உழைக்கும் தன்மைக் கொண்டவை. காற்று நிரம்பிய கற்களாக காட்சியளிக்கும் இதனை எளிதாக உடைக்கவும், நெருக்கவும் முடியும்.
எடை குறைவு
இந்த தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்படும் கட்டிடங்களில் தண்ணீர், வேர், பூஞ்சை போன்றவை உட்புகுவது தடுக்கப்படுகிறது. மேலும் இவ்வகையான கற்கள் எடையில் மிகவும் லேசானதாக உள்ளன. இவற்றை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களில் எளிதாக துளையிட்டு வயரிங், தண்ணீர் இணைப்புகள் போன்றவற்றை இணைத்திட முடியும். மேலும் இதனை எளிமையான முறைகளிலே உடைத்தும் பின்னர் பிரத்தியேக கலவைகளை கொண்டு இணைத்தும் விடலாம்.
இவை எடையில் லேசானதாக இருந்தாலும், கடினத்தன்மையில் சிறந்து விளங்கும் வகையிலே உள்ளன. கற்களின் கடினத்தன்மையை விளக்கும் ஆர்–வேல்யூவ், மற்ற கற்களை விடவும் இந்த தொழில்நுட்பத்தில் அதீத அளவில் உள்ளன. இதனால் கட்டிடத்தின் தாங்கு தன்மை அதிகமாகவே இருக்கும். இக்கான்கிரீட் கற்கள் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. இதனால் தேவைக்கேற்ப பல வடிவங்களிலான கற்களை பயன்படுத்தி வீடுகளை அமைத்துக் கொள்ளலாம்.
சுவரின் தாங்குதன்மை
இந்த தொழில்நுட்பத்தில் முக்கிய அம்சமாக காற்று குமிழ்கள் உள்ளன. கற்களின் நடுநடுவே சிறு அளவிலான காற்று குமிழ்கள் அமைந்திருப்பதால் இவை தண்ணீர் பாங்கான பகுதிகளிலும் தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டவை. தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் கட்டப்படும் வீடுகளின் சுவர் களில் பெரும்பாலும் ஈரம் படர்ந்து இருக்கும்.
சுவர்களில் ஈரம் படர்வதால் சுவரின் தாங்கு தன்மையும், உறுதி தன்மையும் பாதிக்கப்படுகின்றன. ஆனால் இக் கற்களில் இம்மாதிரியான பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. மேலும் இயற்கை காரணிகளாக விளங்கும் மழை, கடும் வெப்பம் போன்ற தட்பவெட்ப பிரச்சினைகளை ஆட்டோகிளேவிட் தொழில்நுட்பம் தடுக்கிறது. இதனால் இவை வெயில் மற்றும் மழைக் காலங்களுக்கு ஏற்றவை.
எளிதாக வீடுகள் அமைக்கலாம்
ஆட்டோகிளேவிட் கான் கிரீட் கற்கள் பெரிய கற்களை அடுக்கி வைத்து வீடுகளை அமைத்துக் கொள்ளும் பேனல் வடிவிலும் கிடைக்கின்றன. இதனால் நான்கு, ஐந்து பேனல்களை கொண்டு எளிதாக வீடுகளை அமைத்திடலாம். இந்த வகையான கற்கள் நீரில் மிதக்க வல்லவை. மேலும் வெயில் காலம், குளிர்காலங்களில் சுவர்களின் மூலம் உள்நுழையும் வெயில் மற்றும் தண்ணீர் ஊடுறுவல் போன்ற பிரச்சினைகள் இந்த தொழில்நுட்பத்தில் தவிர்க்கப்படுகின்றன.
இதுதவிர மின்சார இணைப்பு, தண்ணீர் இணைப்பு போன்ற பணிகளுக்கு ஆட்டோகிளேவுட் கற்கள் மிகவும் எளிமையானவையாக அமையும். இவற்றில் கற்களுக்கு நடுவில் சிறுசிறு காற்று குமிழ்கள் இருப்பதால் கற்களை எளிதாக உடைக்கவும் முடியும். உடைந்த கற்களை சிமெண்டு கலவைகளைக் கொண்டு இணைத்திடலாம். இக்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட வீடுகளில் பொதுவாக விரிசல்கள் ஏற்படுவதில்லை.
செலவு குறைவு
இந்த ஆட்டோகிளேவிட் கான்கிரீட் தொழில்நுட்பத்தை பின்பற்றி பல நாடுகளில் பலவகையான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் சில நாடுகளில் பாலங்களையும் இந்த தொழில்நுட்பத்தால் உருவான கற்களே தாங்கி நிற்கின்றன. இதில் சுண்ணாம்பு சத்து பொருட்கள் குறைந்த அளவிலே சேர்க்கப்பட்டிருப்பதால் மற்ற கற்களை போன்று நீர் கசிவு, நீர் பூத்துபோதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதில்லை.
குறுகிய காலங்களில் முடிக்க வேண்டிய கட்டுமான வேலைகளுக்கு இவ்வகையான கற்கள் சிறந்த கட்டுமான பொருட்களாக இருக்க கூடியவை. இவற்றை எளிதாக அடுக்கி வைத்து சிறிதளவு சிமெண்டு கலவைகள் கொண்டு கட்டிடங்களைகட்டி முடித்து விடலாம். மற்ற கட்டுமான பொருட்களுக்கு ஆகும் செலவை விட இதற்கு ஆகும் செலவுகள் மிகவும் குறைந்தளவிலே இருக்கின்றன.
தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!
சுவர்களில் புகுந்து வரும் புதுமை
சுவர்களில் புகுந்து வரும் புதுமை
பதிவு செய்த நாள் : Apr 19 | 12:00 am
கட்டுமானத்தின் முக்கிய அங்கமாக விளங்குபவை சுவர்கள். திறந்தவெளிகளை வேலியாக, காம்பவுண்டாக மாற்றவும், வீட்டின் உட்பகுதியினை அறைகளாக பிரிக்கவும் சுவர்கள் பயன்படுகின்றன. மறைப்பு திரையாக பயன்படுத்தப்பட்ட சுவர்கள் தற்சமயம் அழகியலிலும் பங்கெடுத்துக்கொள்கின்றன.
சமையல் அறை மற்றும் சாப்பிடும் டைனிங் ஹால் பகுதிக்கு இடைப்பட்ட சுவர்கள் பெரும்பாலும் பாதி சுவர்களா கவே இருக்கும். இவை சமையல் அறையில் சமைப்பவர்களையும், டைனிங் ஹால் பகுதியில் இருப்பவர்களையும் இணைக்கும் வண்ணம் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு நம் தேவைக்கு ஏற்ப சுவர்களை வடிவமைத்துக் கொள்ளலாம்.
டி–வடிவ சுவர்கள்
சுவர்கள் அழகிற்காக அமைத்தாலும், அறைத் தடுப்பிற்காக அமைத்தாலும் அவை கட்டுமான பணியில் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. கட்டுமான வேலைகளில் இரண்டாம் கட்ட பணிகள் என்று கருதப்படும் சுவர்கள் கட்டுமானத்தை எளிமையாக அமைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. டி–வடிவ சுவர்கள் என்று அழைக்கப்படும் இப்புதுமையான தொழில்நுட்பம் சுவர்கட்டுமான முறைகளை எளிமைப்படுத்துகின்றன.
இத்தொழில்நுட்பத்தில் சுவர்கள் ரெடிமேட் முறைகளில் கிடைக்கின்றன. இந்த ரெடிமேட் சுவரின் அடிப்பகுதியில் சுவர்களை நிலையாக நிறுத்தும் வகையில் டி–வடிவில் தட்டையான பகுதி உள்ளது. இது டி–வடிவ சுவர்களின் அடித்தளமாக விளங்குகிறது. இந்த சுவர்களை கொண்டு வீடுகளை அமைக்க அடித்தள பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அடிப்பரப்பு சமமாக இருக்கும் பட்சத்தில் டி–வடிவ சுவர்களை நிறுவி வீடுகளை அமைத்திடலாம்.
எளிமையாக அமைக்கலாம்
நிலையான அடித்தளம் அமைய பெறாமல் இருந்தாலும் சுவர்களை ஜே.சி.பி.கிரைன் போன்ற இயந்திரங்களை கொண்டு உயரத்தில் இருந்து வைப்பதன் மூலம் சமமான அடித்தளங்கள் அமைந்து விடுகின்றன. இந்த டி–வடிவ சுவர்களை கொண்டு எளிமையான நிரந்தர குடியிருப்புகளை அமைத்திட முடியும். இதனை தரை பகுதியோடு நிலையாக இருக்க செய்ய கான்கிரீட் கலவைகளை பயன்படுத்துகின்றனர். தரை மற்றும் சுவர்களை இணைக்க குறைந்த அளவிலான கான்கிரீட் கலவைகளே தேவைப்படுகின்றன.
டி–வடிவ சுவர்கள் முழு நீள சுவர்களாகவும், அழகுப்படுத்தும் வகையில் பாதி அளவுகள் கொண்ட சுவர்களாகவும் சந்தையில் கிடைக்கின்றன. சிறிய வீடுகளின் உள்பகுதியில் பயன்படுத்தப்படும் குறைந்த தடிமனிலான சுவர்களும் இத்தொழில்நுட்பத்தில் கிடைக்கின்றன. மேலும் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டவும் இந்த சுவர்களை பயன்படுத்தலாம்.
நேரம் குறையும்
அடுக்குமாடி குடியிருப்பு சுவர்கள் லீகோ விளையாட்டு கற்கள் முறையில் இருக்கும். இதில் ஒன்றை மற்றொன்றுடன் இணைக்கும் வகையில் மேல் கீழ் பகுதிகளில் பிரத்தியேகமான அமைப்பு அமைக்கப்பட்டிருக்கும். இதனை கொண்டு ஒன்றின் மேல் மற்ற சுவர்களை வைத்து எளிமையாக சில மணி நேரங்களில் கட்டுமான பணிகளை முடித்து விடலாம்.
இதனால் கட்டிடங்கள் அமைப்பதற்கு ஆகும் நேரம் குறைகிறது. மேலும் டி–வடிவ சுவர்களை பயன்படுத்தி மேலை நாடுகளில் பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கட்டிடங்களுக்கு மேல் சாதாரணமாக அமைக்கப்படும் கான்கிரீட் தளங்கள் மற்றும் அழகுப்படுத்தும் கூம்பு வடிவ கோபுரங்கள் போன்ற அமைப்பு முறைகளை அமைத்துக் கொள்ளலாம்.
தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!
கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்
கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்
பதிவு செய்த நாள் : Apr 26 | 01:00 am
மணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப்பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத்தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது.
கட்டுமானப் பொருள் விலை
சிமெண்டு
50 கிலோ பை (மொத்த விலை, குறைந்தது 300 பைகள்)* ரூ.300
50 கிலோ பை (சில்லரை விற்பனை)* ரூ.310
இரும்பு
டி.எம்.டி. 8 மி.மீ விட்டம்* ரூ.49,100
டி.எம்.டி. 10–25 மி.மீ விட்டம் * ரூ.47,600
வி.எஸ்.பி./செயில் 10 மி.மீ. விட்டம்* ரூ.49,600
ரெடிமேடு ஸ்டீல் * ரூ.49,000
ரெடிமேடு ஸ்டிர்அப்ஸ் * ரூ.50,000
செங்கல்–மணல்
செங்கல் 3000 எண்ணிக்கை* ரூ.17,000
ஆற்று மணல் (ஒரு கன அடி) ரூ.48 முதல் ரூ.50 வரை
ஜல்லிக்கல் (ஒரு கன அடி)
12 மி.மீ. ரூ.20 முதல் 22 வரை
20 மி.மீ. ரூ.28 முதல் 30 வரை
40 மி.மீ. ரூ.26 முதல் 28 வரை
இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் தார் (பிடுமன்) விலை
கிரேடு 80/100 (வி.ஜி.10) ரூ.50,023
கிரேடு 60/70 (வி.ஜி.30) ரூ.50,984
கூலி விவரம் (ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு)
கொத்தனார் ரூ.550 முதல் 650 வரை
சித்தாள் ஆண் ரூ.400 முதல் 450 வரை
சித்தாள் பெண் ரூ.300 முதல் 350 வரை
பெயிண்டர்/பிளம்பர் ரூ.500 முதல் 550 வரை
கார்பெண்டர் ரூ.550 முதல் 650 வரை
(*குறியிட்ட பொருட்களுக்கு வரிகள், சுமை கூலி,போக்குவரத்து செலவுகள் தனி. மேற்கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் 23–4–2014 நிலவரப்படி தொகுக்கப்பட்டுள்ளது.)
தகவல்: அகில இந்திய கட்டுனர் சங்கம், தென்னக மையம், சென்னை.
தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!
Redhils Real Estate Agency Buying Ad Selling Land Plot Chenai Redhils வீடு மனை வாங்க விற்க ,,,,,
வீடு மனை வாங்க விற்க ,,,,,
எங்ககிட்ட ,,வங்க ,,,,
'
சென்னை ரெட்ஹில்ஸ் ,, எடபாளயம் ,அலமாதி ,,, சோழவரம் ...
காந்தி நகர் ,,, திருவள்ளூர் ஹை ரோடு ... மற்றும் ... வடசென்னை ...
பகுதி ..லக்ச்மி புரம் ..பொத்தூர் ,,ஆவடி திருமுல்லை வாயால் ..
மற்றும் சுற்றுவட்டார ,,பகுதி இல் ...
வீடு மனை ,,நிலம் பட்டா ..நிலம் ..approved நிலம் ..கமர்சியல் ..நிலம் .....
விவசாய ,நிலம் ... வங்க விற்க ....
அணுகவும் .... நன்றி ....
அபுதாகிர் ..சென்னை ரெட்ஹில்ஸ் 9884342786///9551994407
எங்ககிட்ட ,,வங்க ,,,,
'
சென்னை ரெட்ஹில்ஸ் ,, எடபாளயம் ,அலமாதி ,,, சோழவரம் ...
காந்தி நகர் ,,, திருவள்ளூர் ஹை ரோடு ... மற்றும் ... வடசென்னை ...
பகுதி ..லக்ச்மி புரம் ..பொத்தூர் ,,ஆவடி திருமுல்லை வாயால் ..
மற்றும் சுற்றுவட்டார ,,பகுதி இல் ...
வீடு மனை ,,நிலம் பட்டா ..நிலம் ..approved நிலம் ..கமர்சியல் ..நிலம் .....
விவசாய ,நிலம் ... வங்க விற்க ....
அணுகவும் .... நன்றி ....
அபுதாகிர் ..சென்னை ரெட்ஹில்ஸ் 9884342786///9551994407
இனிது இனிது காதல் இனிது!
இனிது இனிது காதல் இனிது!
டி.அருள் எழிலன்
காதலர் தினத்தை இப்படியும் கொண்டாடலாம்’ எனப் பிரமிப்பூட்டுகிறார்கள் டெல்லியைச் சேர்ந்த அலோக் தீட்சித்-லட்சுமி ஜோடி! எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆசிட் வீச்சு ஒன்றில் முகம் சிதைக்கப்பட்ட லட்சுமியும் சமூக சேவகர் அலோக் தீட்சித்தும் இணைந்து வாழ்வதோடு, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழிகாட்டும் அமைப்பு ஒன்றை நடத்துகிறார்கள்! 'STOP ACID ATTACKS’ எனும் அந்த அமைப்புக்கு பெண்களிடையே ஏக வரவேற்பு.
டெல்லியில் இருந்த அலோக் தீட்சித் திடம் அவரது காதல் மற்றும் அமைப்பு குறித்துப் பேசினேன்...
''சமூகம் சார்ந்து இயங்க வேண்டும் என்ற எண்ணம் வந்த போது, நான் பார்த்து வந்த விமானப் பணியை உதறிவிட்டு ஊடகவியலாளர் ஆனேன். 2012-ல் இந்தியா முழுக்க அரசியல்வாதிகளை விமர்சித்து இணையங்களில் எழுதிய, கார்ட்டூன் வெளியிட்ட பலரும் கைது செய்யப்பட்டார்கள். ஊழலுக்கு எதிராக வெகு வீரியமான கார்ட்டூன்களைப் பதிவுசெய்து, தேசம் முழுக்க பரபரப்பு கிளப்பிய அசீம் திரிவேதி என் நண்பர். இந்திய அரசியல்வாதிகள், தேசியச் சின்னங்களை அவமதிப்பது போல கார்ட்டூன் வரைகிறார் என்று கைது செய்யப்பட்டாரே... அவரேதான்! கருத்துச் சுதந்திரம் அடக்கப்படுவதற்கு எதிராக நானும் அவரும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராடினோம். அருந்ததி ராய் தொடங்கி அரவிந்த் கெஜ்ரிவால் வரை அப்போது எங்கள் போராட்டத்தை ஆதரித்தார்கள். நாட்டின் கௌரவத்தைச் சீர்குலைத்ததாகச் சொல்லி, எங்களைக் கைதுசெய்து அப்புறப்படுத்தினார்கள். அரசாங்கம் எளியவர்களைக் கிள்ளுக்கீரையாக நடத்தும் அந்த அராஜகம்தான் நலிவுற்றவர்களுக்காக என்னை முழுமூச்சாகப் போராடச் செய்தது!
அப்படி நான் இயங்கிக்கொண்டிருந்தபோதுதான், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்திக்க நேர்ந்தது. நம் இந்திய சமூக அமைப்பினால் பாதிக்கப்பட்டோரில் மிகவும் பரிதாபமானவர்கள் அவர்கள்தான் என உணர்ந்தேன். அவர்களின் வேதனையை வெறுமனே எழுதிக்கொண்டிருக்கக் கூடாது என்று முடிவெடுத்தேன். அவர்களுக்கு வழிகாட்டவும் ஆலோசனைகள் அளிக்கவும், Stop Acid Attacks’ அமைப்பைத் தொடங்கினோம். அமைப்பின் பிரசார நடவடிக்கைகளுக்காகப் பல இடங்களுக்குச் சென்றபோது லட்சுமியைப் பற்றி சொன்னார்கள். ஆசிட் வீச்சின் துணிச்சலான சாட்சியமாக இருந்ததால், அவரை எனது இயக்கத்தில் இணைக்க விரும்பித் தேடினேன். ஒருநாள் அந்தச் சந்திப்பு நடந்தது!'' சின்ன இடைவெளி கொடுத்துத் தொடர்கிறார் அலோக்.
''ஆசிட் தாக்குதலுக்கு ஆளான பல பெண்கள் சிதைந்த தங்களின் முகத்தை மூடியபடி கூனிக் குறுகி நடக்கும்போது, லட்சுமி முகத்தை மறைக்காமல் நேரான பார்வையுடன் என்னைச் சந்தித்தார். அந்த மனத் திடம் முதல் சொடுக்கிலேயே என்னை ஈர்த்தது. அநேகமாக அவர் மீதான என் காதலின் தொடக்கப் புள்ளி அதுவாகத்தான் இருக்க வேண்டும்!
நாங்கள் காதலித்தோம். இணைந்து வாழ முடிவெடுத்தோம். திருமணம் என்ற சடங்கின் பெயரால் கூட்டம் கூட்டி லட்சுமியின் கழுத்தில் தாலி கட்ட நான் விரும்பவில்லை. காரணம், அங்கு வரும் அனைவரும் லட்சுமியின் அழகு பற்றி பேசுவார்கள். பண்பாட்டின் பெயரால் நடைபெறும் உடல் வன்முறையாகத் திருமணம் மாறிவிடக் கூடாது என்பதால், திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ முடிவெடுத்தோம்; வாழ்ந்து வருகிறோம். 'இரக்கத்தின் பேரில் உருவான காதலா இது?’ என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். நிச்சயமாக இல்லை. இரக்கத்தின் பேரில் வரும் எந்த உணர்வும் நிலைக்காது. அது தன் அகங்காரத்தை வளர்த்து, ஒரு கட்டத்தில் தான் நேசிக்கும் ஜீவன்களை முடக்கிவிடும். இது மிக இயற்கையான உறவு!'' என்று மென்மையாகச் சிரிக்கிறார் அலோக் தீட்சித்.
''ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான பெண்களுக்கு உங்கள் பிரதான ஆலோசனை என்ன?''
''ஆசிட் வீச்சில் சிதைந்த உங்கள் முகத்தை மறைக்க வேண்டாம். அந்தப் பாதிப்பை இந்தச் சமூகம் தெரிந்துகொள்ளட்டும் என்றுதான் முதலில் அவர்களிடம் எடுத்துச் சொல்வோம். ஏனென்றால், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான அக்கறை சமூகத்தில் இல்லை. ஆசிட் வீசியவன் சிறைக்குச் சென்று சில மாதங்கள் கழித்து ஜாமீனில் வெளிவருகிறான். பல ஆண்டுகள் வழக்கு நடைபெற்று, போதிய சாட்சிகள் இல்லாமல் விடுதலையாகிறான். இடையில் அவனுக்கு தனது மகளையோ, சகோதரியையோ திருமணம் செய்துவைக்கிறது இந்தச் சமூகம்!
'ஒரு பெண்ணின் முகத்தை, எதிர்காலத்தைச் சிதைத்தவனாயிற்றே’ என்ற கூச்சம் கொஞ்சமும் இன்றி எப்படி அவனுக்கு தங்கள் வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்துவைக்கிறார்கள்? 'நம் பெண்ணை இவன் பத்திரமாகப் பார்த்துக்கொள்வான்’ என்று எதன் அடிப்படையில் நம்புகிறார்கள்? ஆக, நாங்கள் மாற்றத்தை உண்டாக்க வேண்டியது சமூகத்தின் ஆதார நம்பிக்கையில்தான் என்று தீர்மானித்தோம். அதை நோக்கியே முன்னேறுகிறோம்.
ஆசிட் வீச்சுக்குள்ளான பெண்களின் அவஸ்தையை நம்மால் துளியும் உணரமுடியாது. மரணம் வரை அவர்களுக்குத் தனிமையே துணை. சமூகமும் குடும்பமும் அவர்களை ஏற்றுக்கொள்வது இல்லை. லட்சுமியுடன் நான் இருந்த முதல் 24 மணி நேரத்தின் ஒவ்வொரு நிமிடமும் இன்னமும் என் மனதில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. அதுதான் என்னை இன்னும் இன்னும் வீரியமாக இயங்கச் சொல்கிறது!''
''உங்கள் அமைப்பின் சேவை டெல்லியோடு மட்டும் முடங்குவது சரியா?''
''ஆசிட் வீச்சைப் பொறுத்தவரை நாடு முழுக்க நடைபெறும் வன்முறை வெளியில் தெரிவதில்லை. தமிழகத்திலேயே கடந்த ஆண்டு கொல்லப்பட்ட வினோதினியின் மரணம் பரபரப்பான அளவுக்கு, வித்யாவின் மரணம் விவாதிக்கப்படவில்லை. இந்த இருவரின் மரணம் பேசப்பட்ட அளவுக்கு பீகார், ராஜஸ்தான், உ.பி. போன்ற மாநிலங்களில் நடைபெறும் பெண்
கொடுமைகள், ஆசிட் வீச்சு சம்பவங்கள் பற்றி வெளியில் தெரிவதே இல்லை. டெல்லி தவிர்த்த பிற மாநிலங்களில் நிலைமை இப்படித்தான் உள்ளது. தற்சமயம் எங்கள் இயக்கம் இந்தியாவின் ஒன்பது நகரங்களில் விரிவடைந்திருக்கிறது. விரைவில் தமிழகத்திலும் எங்கள் நடவடிக்கைகள் தொடங்கும்!''
என்ன சொல்கிறார் லட்சுமி?
''ஆசிட் வீச்சுக்கு ஆளான நாளில் இருந்து எட்டு வருடங்களாக என் வீட்டில்தான் முடங்கிக்கிடந்தேன். ஆசிட் வீச்சின் கொடுமை ஒரு பக்கம், சமூகமும் உறவுகளும் என்னைப் புறக்கணித்தது மறு பக்கம் எனத் தனிமைத் துயரால் சபிக்கப்பட்டிருந்தேன். எந்த வேலைக்கும் என்னால் செல்ல முடியவில்லை. எதிரில் வருகிறவர்கள் முகம் சுழித்து அருவருப்பாக ஒதுங்கிச் சென்றபோது, இனி எனக்கு ஒரு வாழ்வு இல்லை என்றே நம்பினேன். ஆனால், அதெல்லாம் வாழ்வின் கறுப்புப் பக்கங்கள். அதிலிருந்து மீண்டு அலோக்கைச் சந்தித்த பிறகு, வாழ்க்கையின் புதிய அத்தியாயம் பிறந்தது! இப்போது எங்கள் இல்லறத்தையே ஓர் இயக்கமாக்கி இருக்கிறோம். ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்களே... உங்கள் மீது ஆசிட் வீசியவர்களிடம் நீங்கள் சொல்லுங்கள்.. 'என் முகத்தை மாற்ற முடிந்த உன்னால், என் மனதை மாற்ற முடியவில்லையே. அதனால் நீ தோல்வியடைந்தவன்தான்’ என்று!''
ப்ளாட் பத்திரப் பதிவு... சந்தேகங்கள்... தீர்வுகள்!
சி.சரவணன்
புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு (ஃப்ளாட்) வாங்கும் பலருக்கு அதற்கான பத்திரம் பதிவு செய்யும் விஷயத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. ஃப்ளாட்டுக்கான பத்திரத்தை எப்போது பதிவு செய்யவேண்டும்? கட்டுமான ஒப்பந்தத்தை எப்போது பதிவு செய்ய வேண்டும்? அதற்கான கட்டணங்கள் எவ்வளவு? என்கிற விவரம் ஃப்ளாட் வாங்கும் பலருக்கும் தெரிவதில்லை. இவற்றுக்கான விளக்கத்தைச் சென்னையைச் சேர்ந்த சொத்து ஆலோசகர் டி.பார்த்தசாரதியிடம் கேட்டோம்.
''தமிழக அரசு அண்மையில் கட்டுமான ஒப்பந்தத்தையும் (கன்ஸ்ட்ரக்ஷன் அக்ரிமென்ட்) பதிவு செய்யவேண்டும் எனச் சட்டம் கொண்டு வந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும்போது, அதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை 2013, அக்டோபர் 1-ம் தேதி முதல் பதிவு செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறது. கட்டுமானச் செலவில் 2 சதவிகிதத்தை இதற்கான கட்டணமாகச் செலுத்த வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புக்கான பிரிக்கப்படாத மனையை (யூ.டி.எஸ்) பதிவு செய்யும்போதே, இந்தக் கட்டுமான ஒப்பந்தத்தையும் பதிவு செய்துவிட வேண்டும். யூ.டி.எஸ். பதிவுக்கு மொத்தம் எத்தனை சதுர அடி யூ.டி.எஸ். இருக்கிறதோ, அதற்கான அரசு கைடுலைன் மதிப்பில் 7 சதவிகிதத்தை முத்திரைத்தாள் கட்டணமாகவும், 1 சதவிகிதத்தைப் பதிவுக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
எனினும், ஏற்கெனவே ஃப்ளாட் வாங்க முன்பணம் அல்லது பகுதிப் பணம் கொடுத்து அல்லது முழுப் பணம் கொடுத்து யூ.டி.எஸ் பதிவு செய்திருப்பவர்கள், கட்டுமான ஒப்பந்தத்தைப் பதிவு செய்யத் தேவை இல்லை. அதற்கான கட்டணத்தைப் பில்டர் கேட்டால், கொடுக்கத் தேவை இல்லை. இது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டும்தான். தனி வீடு மற்றும் வரிசை வீடுகளுக்குப் பொருந்தாது'' என்று விளக்கம் சொன்னவர், கட்டுமான ஒப்பந்தத்தைப் பதிவு செய்வதால் என்ன நன்மை என்பதை விளக்கி சொன்னார்.
''அடுக்குமாடி கட்டுமான ஒப்பந்தத்தைப் பதிவு செய்ய வேண்டும் என அரசாங்கம் சொல்வது வரவேற்கத்தக்கதுதான். சில புரமோட்டர்கள், அதிகமாக யூ.டி.எஸ். பதிவு செய்வது இதன் மூலம் தடுக்கப்படுகிறது. கட்டுமான ஒப்பந்தப் பத்திரத்தில் ஃப்ளாட் நம்பர் பதிவு செய்யப்படுவதால், ஒரே ஃப்ளாட் ஒன்றுக்குமேற்பட்டவர்களுக்கு ஒதுக்கப்படுவது அல்லது விற்கப்படுவது தடுக்கப்படுகிறது. கட்டுமான ஒப்பந்தம் பதிவு செய்யப்படாத காலத்தில், ஏற்கெனவே சொன்ன வீட்டுக்குப் பதிலாக வேறு
ஏதாவது ஒரு வீட்டை ஒதுக்கித் தருவது நடந்திருக்கிறது. இனி அப்படிச் செய்ய முடியாது. இந்த ஒப்பந்தத்தில் எந்த பிளாக், எந்தத் தளம், ஃப்ளாட் எண், சூப்பர் பில்ட்-அப் ஏரியா எல்லாம் பதிவு செய்யப்படுகிறது. இதனால், பில்டர் வேறு வீட்டை மாற்றிக்கொடுக்க முடியாது என்பதால் 2% கட்டணம் கூடுதலாகச் செலுத்தினாலும் வீடு வாங்குபவர்களுக்குப் பாதுகாப்பான அம்சமாக இது இருக்கிறது'' என்றவரிடம், 'கட்டுமான ஒப்பந்தத்துக்கான 2 சதவிகிதக் கட்டணம் எப்படி கணக்கிடப் படுகிறது?’ என்று கேட்டோம்.
''இதை ஓ உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். ஃப்ளாட் ஒன்றின் விலை ரூ.50 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். இதில் யூ.டி.எஸ். சதுர அடிக்கான அரசு வழிகாட்டி மதிப்பு ரூ.16 லட்சம் எனில், கட்டுமானச் செலவு 34 லட்சம் ரூபாய். இங்கே ரூ.16 லட்சத்துக்கு 8%, அதாவது, ரூ.1,28,000 முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணமாகச் செலுத்த வேண்டும். ரூ.34 லட்சத்துக்கு 2%, அதாவது, ரூ.68,000 கட்டுமான ஒப்பந்த பதிவு கட்டணமாகச் செலுத்த வேண்டும்'' என்றவர் சற்று நிறுத்தி, புதிய அடுக்குமாடி வீட்டை பதிவு செய்யும்போது கட்டவேண்டிய வேறு சில கட்டணங்கள் பற்றியும் விளக்கிச் சொன்னார்.
''ஃப்ளாட் வாங்குபவர்கள் சேவை வரி (சர்வீஸ் டாக்ஸ்) மற்றும் மதிப்புகூட்டு வரி அல்லது விற்பனை வரி (வாட்) கட்டவேண்டி வரும். கட்டுமானச் செலவில் 30% கட்டுமானக் கூலியாக இருக்கிறது. இந்தக் கட்டுமானக் கூலியில் 12.36% சேவை வரியாகக் கட்டவேண்டும். அடுத்து, கட்டுமானச் செலவில் 70% கட்டுமானப் பொருட்களுக்கான செலவாக இருக்கிறது. இந்த 70 சதவிகித தொகையில் 4% மதிப்புக்கூட்டு வரியாகக் கட்ட வேண்டும்.
இந்தக் கட்டணங்களை மேலே குறிப்பிட்ட உதாரணத்தில் பொருத்தி பார்த்தால் சுலபமாக விளங்கும். கட்டுமானச் செலவு ரூ.34 லட்சத்தில் 30% என்பது ரூ.10,20,000. இதில் 12.36%, அதாவது, ரூ.1,26,072 சேவை வரியாகக் கட்ட வேண்டும். கட்டுமான செலவு ரூ.34 லட்சத்தில் 70% என்பது ரூ.23,80,000. இதில் 4%, அதாவது, ரூ.95,200 விற்பனை வரியாகக் கட்ட வேண்டும்'' என்றவரிடம், பழைய ஃப்ளாட் பதிவு செய்ய என்ன நடைமுறை? என்று கேட்டோம்.
''புதிய ஃப்ளாட்டுக்கு இருப்பதுபோல் பழைய ஃப்ளாட்டுக்கு அதிகக் கட்டணங்கள் இல்லை. மனை மற்றும் வீட்டின் மதிப்பில் 7% முத்திரைத்தாள் கட்டணமாகவும், 1% பதிவுக்
கட்டணமாகவும் செலுத்தினால் போதும். அதாவது, மனை மற்றும் வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சம் எனில், அதில் 8%, அதாவது ரூ.4 லட்சம் முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணமாகச் செலுத்தவேண்டும். மனையின் மதிப்பு அரசு கைடுலைன் அடிப்படையிலும் வீட்டின் மதிப்பு, சிறிய வீடாக இருந்தால் சார் பதிவாளர் மூலமும் பெரிய வீடாக இருந்தால் பொதுப்பணித்துறை பொறியாளர் மூலமும் மதிப்பீடு செய்யப்படும். இதன் அடிப்படையில் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்'' என்றார்.
இனி ஃப்ளாட் பத்திரப் பதிவு செய்யும்போது விதிக்கப்படும் கட்டணங்கள் குறித்துத் தெளிவாக இருப்பீர்கள்தானே!
படம்: ப.சரவணகுமார்
'குஜராத் வளர்ந்திருக்கிறது என்று சொன்னால், குஜராத் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதை அளந்து சொல்ல,
குஜராத்தில் ஜூ.வி.!
தொழிற்சாலைகள், துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், மின்சாரம், எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகள் ஆகியவற்றைப் பற்றி பேசும்போது மோடியிடம் வெளிப்படும் எழுச்சி... கல்வி, சுகாதாரம், மக்கள் வாழ்க்கை பற்றி பேசும்போது வெளிப்படுவது இல்லை. கல்வி மற்றும் மருத்துவம் குறித்து பேசும்போது ஒரு விதமான தயக்கத்துடனும் கடந்த காலத்துக்குப் பின்னால் மறைந்துகொண்டும்தான் அவர் பேசுகிறார். மோடிக்குப் பொருந்துவது அவருடைய அதிகாரிகளுக்கும் பொருந்துகிறது.
'குஜராத் வளர்ந்திருக்கிறது என்று சொன்னால், குஜராத் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதை அளந்து சொல்ல, தனிநபர் வருமானம், மாநில மொத்த உற்பத்தி குறியீடு... என்று ஏராளமான அளவுகோள்கள் இருக்கின்றன. ஆனால், அந்த மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் வளம் அனைத்து தரப்பு மக்களுக்கும் சரிசமமாகச் சென்று சேர்ந்திருக்கிறதா? 'சரிசமமாக’ என்று சொன்னால்... குறைந்தபட்சம் அங்கே அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவ வசதி, சுகாதார வசதி, கல்விக்கூடங்கள் ஆகியவை தேவைக்கு ஏற்ற வகையில் பெருகி இருக்கிறதா... என்பது போன்ற கேள்விகளுக்கு விடை காண அந்த மாநிலத்தில் பரவலாக அறியப்பட்ட பொருளாதாரத் துறை நிபுணரான பேராசிரியர் ஹேமந்த குமாரிடம் பேசினோம்.
கந்தல் நிலையில் கல்வி:
''நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஐ.ஐ.எம். (அகமதாபாத்), என்.ஐ.டி. (நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன்), ஐ.ஆர்.எம்.ஏ. (இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரூரல் மேனேஜ்மென்ட் - ஆனந்த்) போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் குஜராத்தில் செயல்பட்டு வருகின்றன. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இங்கே புதிதாக 30 பல்கலைக்கழகங்கள் வந்திருக்கின்றன. ஆனால், இவை அனைத்துமே தனியார் பல்கலைக்கழகங்கள். இவற்றில் கட்டணங்கள் அதிகம். அதேபோல தனியார் பள்ளிகள் தங்களின் விருப்பம்போல கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம் என்பதால் பிள்ளைகளைப் பெற்றவர்களின் பாடு இங்கே திண்டாட்டம்தான்.
தனியார் கல்வி நிறுவனங்களின் நிலையைவிட அரசு கல்விக்கூடங்களின் நிலைமை படுமோசம். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் கல்விக்காக நிதியை ஒதுக்குவதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு என்ற வரிசையில் 13 மாநிலங்களுக்கு அடுத்தப்படியாகத்தான் குஜராத் இருக்கிறது. முறையான முழு நேர ஆசிரியர்களை கல்விக்கூடங்களுக்கு நியமிப்பதற்கு பதிலாக, வித்யா சஹாயக்ஸ், சிக்ஷான் சஹாயக்ஸ், அத்யாபக் சஹாயக்ஸ் என்ற பெயர்களில் அடிமாட்டு சம்பளத்துக்கு ஒப்பந்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்துகிறது அரசு. அரசே இப்படி சகாய விலைக்கு ஆசிரியர்களை நியமித்தால், அரசு உதவிபெறும் பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் தங்களின் ஆசிரியர்களை எப்படி நடத்தும் என்பதை சுலபமாக யூகித்துவிட முடியும்.
இன்றைய நிலையில் 270 கல்லூரிகளில், கல்லூரி முதல்வர் பதவி நிரப்பப்படாமல் இருக்கிறது. 45 சதவிகித பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கான இடங்கள் காலியாக இருக்கின்றன. அதனால் பல கல்லூரிகளில் ஒரே வகுப்பில் நூறு, இருநூறு... என மாணவர்கள் ஆடு மாடுகள் மாதிரி அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, குஜராத் பல்கலைக்கழகத்துக்குச் சென்று பாருங்கள். அங்கே இதழியல் துறையில் இருக்கும் 12 பாடங்களைச் சொல்லிக்கொடுக்க ஒரே ஒரு உதவி பேராசிரியர் மட்டுமே இருக்கிறார். இந்த மாநிலத்தில் பள்ளிக்கூடங்களின் நிலையும் இதேபோலத்தான். 47 ஆயிரம் ஆசிரியர் பதவிகள் இங்கே காலியாக இருக்கின்றன. பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை.
10-ம் வகுப்பை எட்டுவதற்குள் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறிவிடுகிறார்கள். உதாரணத்துக்கு, 2003-ம் ஆண்டு இந்த மாநிலத்தில் 1-ம் வகுப்பில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 80 ஆயிரம். ஆனால், 2013-ம் ஆண்டு 10-ம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை வெறும் 10 லட்சத்து 30 ஆயிரம். அதாவது, 10-ம் வகுப்பை எட்டுவதற்குள் 7 லட்சத்துக்கு 50 ஆயிரம் மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டார்கள். ஆரம்பக் கல்வியின் நிலை இதைவிட மோசம். இந்த மாநிலத்தில் நூற்றுக்கு இருபது பேர் இன்னமும் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
'கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர் தற்கொலை’ என்ற செய்தியும், 'சம்பளம் கிடைக்காததால் கல்லூரி உதவி பேராசிரியர் தற்கொலை’ என்ற செய்தியும் அடுத்தடுத்து வருகின்ற நிலைமையில்தான் குஜராத்தில் கல்வி இருக்கிறது.
மருத்துவம்:
ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பதைப்போல, அரசு மருத்துவமனைகளுக்கு டாக்டர்களையும் ஒப்பந்த அடிப்படையில் வெறும் 10,000 ரூபாய் சம்பளத்துக்கு நியமிக்கிறது. இப்படி இருந்தும்கூட 40 சதவிகித ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்து மாத்திரைகள்... என்று எதுவும் இல்லாமல்தான் இருக்கின்றன. பெரிய மருத்துவமனை என்று அழைக்கப்படும் அகமதாபாத் அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெறும் 26 படுக்கைகள் மட்டுமே அதிகம் ஆகி இருக்கின்றன. அதேபோல அகமதாபாத் முனிசிபல் மருத்துவமனையில் கடந்த ஐந்து வருடங்களில் வெறும் 27 படுக்கைகள்தான் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், இந்தக் காலகட்டத்தில் 158 தனியார் மருத்துவமனைகள் முளைத்திருக்கின்றன. பணத்தை உறிஞ்சி எடுக்கும் தனியார் மருத்துவமனைகளிடம் ஏழைகள் எப்படி சிகிச்சை பெற முடியும்?
'ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 1,000 குழந்தைகளுக்கு எத்தனை குழந்தைகள் இறக்கிறது’ என்பதை அளவுகோளாகக் கொண்டு பார்த்ததில், இந்தியாவில் 50 மாவட்டங்களை மிகச்சிறந்த மாவட்டங்கள் என்று புகழ்பெற்ற சர்வதேச மருத்துவ இதழான லான்செட் அறிவித்தது. இந்த 50 மாவட்டங்களில் ஒன்றுகூட குஜராத்தில் இல்லை (இதில் 15 மாவட்டங்கள் தமிழகத்திலும் 10 மாவட்டங்கள் கேரளாவிலும் இருக்கின்றன). ஆனால், லான்செட் வெளியிட்டிருக்கும் மோசமான மாவட்டங்களின் பட்டியலில் குஜராத்தின் ஆறு மாவட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
மக்களின் உடல்நலத்துக்கு உலைவைக்கக் கூடிய மிகப்பெரிய பிரச்னை கனன்று கொண்டு இருக்கிறது. மற்ற பல மாநிலங்களைக் காட்டிலும் சத்துக்குறைபாடு கொண்டவர்கள் குஜராத்தில் மிக அதிகமாக இருக்கிறார்கள். 'குஜராத் பெண்கள் எல்லாம் அழகுணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதால், அவர்கள் பால் போன்ற சத்துமிக்க உணவுகளை சாப்பிடுவதில்லை’ என்று ஒருமுறை மோடி சொன்னார். ஆனால், மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்கூட 'ஸ்டைல்’ கருதிதான் பால் குடிப்பதில்லையா? இந்த மாநிலத்தில் மூன்று வயதுக்கு உட்பட்ட 41 சதவிகித குழந்தைகள் இருக்க வேண்டிய எடையைவிட குறைவான எடை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அதேபோல 15 வயதில் இருந்து 45 வயது கொண்ட பெண்களில் 55.3 சதவிகிதத்தினர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
அதேபோல,National Nutrition Monitoring Bureau (NNMB) ஆய்வின்படி குஜராத்தில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் நூற்றுக்கு 53 பேர் உயரம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள். இதற்கெல்லாம் மூல காரணம் இங்கே உணவுப் பொருள் பங்கீட்டுத் துறை படு மோசமாக செயல்படுவதுதான். 'நாள் ஒன்றுக்கு 11 ரூபாய் வருமானம் கிடைத்தாலே அந்த நபர் வறுமைக்கோட்டுக்கு மேலே’ என்ற அடிப்படையில் ஏழைகளைக் கணக்கிட்டு ரேஷன் பொருள்களை வழங்கிவருவதுதான் (அதாவது, வழங்காமல் இருப்பதுதான்) இந்தப் பிரச்னை அனைத்துக்கும் ஆணி வேர். இப்படி குஜராத்தின் மக்கள் வளர்ச்சி மட்டமாக இருக்கிறது'' என்று ஆதாரங்களுடன் அடுக்குகிறார் ஹேமந்த் குமார்.
சிறப்பு பல்கலைக்கழகங்கள்!
காந்திநகரில் இருக்கும் கல்வி மற்றும் சுகாதாரத் துறையை சேர்ந்த அதிகாரிகளிடம் பேசினோம். ''குஜராத் இன்று பல்கலைக்கழகங்களுக்குப் புகழ்பெற்ற மாநிலமாக உருவாகி இருக்கிறது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு குஜராத்தில் 15 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், இப்போது இங்கே 45 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. நிர்மா பல்கலைக்கழகம், ரிலையன்ஸின் பெட்ரோலியத்துக்கான பல்கலைக்கழகம் தொடங்கி, விவசாயம், ஆயுர்வேதம்... ஏன் தடய அறிவியலுக்குக்கூட தனி பல்கலைக்கழகத்தை இங்கு உருவாக்கி இருக்கிறோம். இப்படி சிறப்பு பல்கலைக்கழகங்கள் வேறு எந்த மாநிலத்திலும் இருக்காது. இப்போது எங்கள் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 45 ஆயிரம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர முடியும். அதேபோல 13 ஆயிரம் மாணவர்கள் எம்.பி.ஏ. படிக்க முடியும். 5 ஆயிரம் பேர் ஃபார்மா படிப்பு படிக்க முடியும்.
ஒரு ஆண் கல்வி கற்றால், அவன் மட்டுமே பயனடைவான். ஆனால், ஒரு பெண் கல்வி கற்றால், ஒரு குடும்பமே பலன் அடையும் என்பார்கள். அப்படிப்பட்ட பெண் கல்வியின் முக்கியத்துவத்தை எங்கள் அரசு நன்கு உணர்ந்து பெண் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்களுக்கு 1,000 ரூபாய் கொடுக்கும், 'வித்யா லக்ஷ்மி திட்டம்’ நல்ல பலன் கொடுத்திருக்கிறது. இதன் பலனாகப் பாதியிலேயே படிப்பை நிறுத்தும் பெண்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க அளவு குறைந்திருக்கிறது. பசித்த வயிரோடு படிக்க முடியாது என்பதை உணர்ந்த எங்கள் அரசு சுமார் 7,600 ஆரம்பப் பள்ளிக்கூடங்களில் மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்துகிறது. தவிர, நலிவுற்ற மாணவர்களுக்காக இலவசமாகப் பாடப்புத்தங்களையும் வழங்குகிறோம். எங்கள் அரசு எடுத்துவரும் இந்த நடவடிக்கைகளின் பலனாக 79 சதவிகித மக்கள் எழுத்தறிவு பெற்றிருக்கிறார்கள். 'பள்ளிக்கு செல்லும் குழந்தைகளில் ஒரு குழந்தைகூட பாக்கி இல்லாமல், அனைத்துக் குழந்தைகளும் பள்ளியில் சேர வேண்டும். ஒரே ஒரு குழந்தைகூட பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தக் கூடாது’ இதுதான் எங்கள் முதலமைச்சர் நிர்ணயித்திருக்கும் இலக்கு. இந்த இலக்கை விரைவில் எட்டுவோம்'' என்றார்கள்.
நகரின் வசதி கிராமத்தில்!
சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் பேசினோம். ''நகரில் இருக்கும் வசதிகள் அனைத்துமே கிராமங்களிலும் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் முதலமைச்சரின் முழக்கம். குஜராத்தில், அரசு மருத்துவமனைகளை யாரும் நாடுவதில்லை என்று ஒரு தரப்பினர் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது உண்மை இல்லை. எங்கள் மாநிலத்தில் ஆறு பெரிய மருத்துவமனைகள், 24 மாவட்ட மருத்துவமனைகள் என்று தொடங்கி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையங்கள், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் பேர் உள்நோயாளிகளாக மட்டும் சிகிச்சை பெறுகிறார்கள். ஆண் - பெண் விகிதம் சமமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெண் குழந்தைகளைக் காப்பாற்றும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். குழந்தைகள் எவரும் சத்து குறைந்தவர்களாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் கர்ப்பிணிகளுக்கும் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் பலவிதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்'' என்று சொல்கிறார்கள்.
குஜராத் என்றாலே சிறுபான்மையினர் சிக்கல்தானே பிரதானமானது. அந்த மக்கள் என்ன சொல்கிறார்கள்? அவர்களது வாழ்க்கை நிலைமை எப்படி இருக்கிறது?
THE RED MARKET: மனித உடல் உறுப்புகளின் சந்தை!
THE RED MARKET: மனித உடல் உறுப்புகளின் சந்தை!
in அமெரிக்கா, அறிவியல்-தொழில்நுட்பம், ஐரோப்பா, நூல் அறிமுகம், புதிய கலாச்சாரம், மக்கள்நலம்,மருத்துவம் April 30, 2012redhilsrealestateagency.wordpress.com
மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, ஏழை நாடுகளின் மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது The Red Market
உலக அளவில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்குமளவு மருத்துவத் துறை முன்னேறி இருக்கின்றது. ஆனால் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மாற்று உறுப்புகள் வேண்டுமே? அது தான் இன்றைய விற்பனைப் பொருள். சந்தையில் பல பில்லியன்கள் இலாபம் தரும் நல்ல சரக்கு. உலகம் முழுவதும் மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வாழும் ஏழை மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் இதயம் இல்லா பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது “”The Red Market” .
மாற்று உறுப்புகளை யார் விற்பார்கள்? ஏழைகள் தான். ’அமெரிக்காவில் உள்ள ஒரு பணக்காரர் தன் பழுதடைந்த உறுப்புக்கு மாற்று வேண்டும் என்று விளம்பரம் செய்தால் அமெரிக்காவில் இருக்கும் ஒரு ஏழையிடம் இருந்தா அது கிடைத்து விடப் போகிறது? மிக எளிதாகவும், சட்டப்படியும் தெரியும் இந்த வியாபாரத்தின் “சிவப்புப் பக்கங்களை (இது உடல் உறுப்பு சார்ந்த ரத்தமும், தசையுமான கதை என்பதால் சிவப்புச் சந்தை என்று புத்தகத்திற்கு பெயரிடப்பட்டிருக்கிறது) தோலுரித்துக் காட்டுகிறார் அமெரிக்கப் பத்திரிகையாளாரான ஸ்கார்ட் கார்னி.
உலகம் முழுவதும் பல பணக்கார நாடுகளின் உடற் தேவைகளை அதாவது ரத்தம் முதல் எலும்பு, தசை, கிட்னி, கண், பெண்ணின் கரு முட்டை, தலைமுடி வரை தேவைப்படும் அனைத்தையும் ஈடு செய்வது மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் தான், குறிப்பாக இந்தியா. அதோடு இலவசச் சேவையாக பல பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு சோதனை எலிகளாகவும் இருக்கிறார்கள் இந்திய மக்கள். ஏன்?
’தேவைப்படுபவர் வாங்குகிறார், இருப்பவர் விற்கிறார்’ என்ற சராசரி சந்தைப் பொருளாக நம் உடல் உறுப்புக்களைப் பார்க்க முடியாது. உயிருக்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பு உடல் உறுப்புகளுக்கும் கொடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு நாட்டின் காகிதச் சட்டமும் இந்த உடல் உறுப்பு தானத்தை மிக உன்னதமாகக் கருதி, பாதுகாப்பாகவும், சட்டப்பூர்வமாகவும் தானம் செய்ய மக்களை அனுமதிக்கின்றது.
படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்
அல்லது ரைட் கிளிக் செய்து சேவ் செய்யவும்
அல்லது ரைட் கிளிக் செய்து சேவ் செய்யவும்
ஆனால் ஸ்கார்ட் கார்னி இந்தப் புத்தகத்தினூடே பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, அந்தந்த நாடுகளில் உடல் உறுப்பு சம்பந்தமான திருட்டு, விற்பனை, அதில் கொள்ளை இலாபம் பார்க்கும் ஏஜெண்டுகள், கண்டுகொள்ளாமல் விடும் அரசுகள் என சகல கருப்புப் பக்கங்களையும் போட்டு உடைக்கிறார்.
பணத்தின் முன் ஒரு ஏழையின் உடல் என்பது ரத்தமும் தசையுமான விற்பனைப் பண்டம். எப்படி? கொஞ்சம் இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டு மேலே தொடருங்கள்.
நூலுக்கான டிரைலர்
எலும்புத் தொழிற்சாலை:
அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயிலத் தேவைப்படும் மனித எலும்பு மாதிரிகள் முழுக்கவும் இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் எலும்பு மாதிரிகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அதை எப்படிச் செய்கின்றது?
முதலில் கம்பெனியில் இருக்கும் 4 தொழிலாளிகள் நோட்டம் விட்டு தங்கள் ஊரைச் சுற்றியுள்ள சுடுகாடுகளில் பிணங்கள் வருகிறதா எனத் தெரிந்து கொள்வார்கள். புதைக்கப்பட்ட பிணம் என்றால் அப்படியே அலேக், எரிக்கப்படும் பிணம் என்றால் சொந்தக்காரர்கள் திரும்பிப் பார்க்காமல் சென்ற பின், வெட்டியானிடம் பேசி வைத்துப் பாதி எரியும் போதே தூக்கி விடுவார்கள்.
தூக்கிய பிணத்திலிருந்து பதப்படுத்தி எலும்புகளை மட்டும் எடுப்பார்கள். அந்த பதப்படுத்தும் முறை கொடூரமாக இருக்கும். பின்பு எலும்புகளை சுத்தமாக பாலிஷ் செய்து பேக்கிங் செய்து விடுவார்கள். ஆன்மாவுக்கு சொர்க்கமோ நரகமோ, அடுத்த பிறவியோ, என்ன கருமமோ, யாருக்குத் தெரியும்? உயிர் கடவுளுக்கு, உடல் அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்கு.
மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும், புர்பஸ்தலி எனும் ஊரில் உள்ள “யங் ப்ரதர்ஸ் (Young Brothers)” என்ற ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தும் முக்தி பிஸ்வாஸுக்கு குடும்பத் தொழில் இது தான். அந்த யங் ப்ரதர்ஸ் நிறுவனம் என்பது ஒரு எலும்புத் தொழிற்சாலை. 150 ஆண்டு காலப் பாரம்பரியம் உடையது. கொள்ளுத் தாத்தாவுக்குத் தாத்தா காலத்தில் இருந்து இப்பொழுது முக்தி பிஸ்வாஸின் மகன் வரை செய்யும் ஒரே குடும்பத் தொழில். நல்ல இலாபம். அவர்களின் கம்பெனியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள எலும்புகளின் மதிப்பு மாத்திரம் 70,000 அமெரிக்க டாலர்கள்.
ஏன் அமெரிக்காவில் கிடைக்காத எலும்புகளா அல்லது அங்கு சாகாத மக்களா? என்று ஒரு கேள்வி எழும். நல்ல கேள்வி! முன்னர் அமெரிக்கா, இங்கிலாந்து முழுவதும் கூட பிணத்திருடிகள் (Grave Robbers) உண்டு. அவர்கள் பிணத்தைத் திருடிப் போனபிறகு அதனை மீட்க பிணைப்பணம் கேட்பார்கள். இது போல் சார்லி சாப்ளினின் பிணத்தையும் திருடி, அதனை மீட்ட கதையெல்லாம் கூட உண்டு. பின்பு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கடுமையான சட்டங்கள் வந்து விட்டன. அங்கு உடல் உறுப்பு சம்பந்தப்பட்ட வியாபாரம் என்றால் ’சட்டம் தன் கடமையைச் செய்யும்’!
அமெரிக்காவில் தான் இந்தச் சட்டம் கடுமையானது, அதே அமெரிக்க அரசு இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் மனித உறுப்புகளைக் கண்டுகொள்வதில்லை. ஒரு பக்கம், ’ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்யும் தொண்டு’ என்று சால்ஜாப்பு. இன்னொரு பக்கம், பணத்தின் மூலம் சட்டத்தை வளைத்து விடுவது. இந்த எலும்புத் தொழிற்சாலைகள் நேர்த்தியான கார்ப்பரேட்டுகளாக இயங்குகின்றன.
குஜராத்தில் ஒரு வாடகைத்தாய் நிலையம். ஒன்பது மாதங்களும் இவர்களை கைதி போல பாதுகாக்கின்றனர். வெளிநாட்டினர் தரும் 14,000 டாலர்களில் இவர்களுக்கு 4000 டாலர் வருமானம் கிடைக்கிறது
மூன்றாம் உலக நாடுகள், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் இந்த உடல் உறுப்புச் சந்தையான சிவப்புச் சந்தை பல பில்லியன் டாலர்கள் புழங்குகின்ற ஒரு துறை. சட்டப்படி இதைச் செய்தால் அதிக செலவு பிடிக்கும். அப்படியே சட்டத்துக்குப் புறம்பாகச் செய்தால் நல்ல கமிஷன் கிடைக்கும். கிட்னி சந்தையைப் பார்ப்போம், அப்பொழுது புரியும்.
கிட்னிவாக்கம்:
ஓராண்டுக்கு முன்னர் 1000 டாலர்கள் பெற்று கிட்னியை விற்ற கலா இன்னமும் சரிவர வேலை செய்யவியலாமல் தவிக்கிறார். கிட்னியின் சந்தை விலை சுமார் 15,000 டாலர் முதல் 250,000 டாலர் வரை
சென்னை மணலிக்கு அருகில் இருக்கும், சுனாமியில் அடிபட்ட ஒரு குப்பத்தின் பெயர் கிட்னிவாக்கம். அங்கு கிட்னி விற்காதவர்கள் பிறந்த குழந்தைகள் மாத்திரம் தான்.
சுனாமி நகரில் வாழும் மக்கள் கடற்கரையோரம் வாழ்ந்து, சுனாமியால் வாழ்க்கையை இழந்து, அரசால் மறு-குடியமர்த்தப்பட்டவர்கள். இவர்களைப் பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டு, நலம் விசாரிக்க ஜப்பானின் ஜாக்கிசான் முதல் அமெரிக்காவின் மைக்கல் ஜாக்ஸன் வரை வருவார்கள், நடுநடுவே கிளின்டன், நம்ம ஊர் விஜயகாந்த் கூட வருவார். இத்தகைய மேன்மக்களுக்குக் காட்சிப் பொருளாக இருக்கும் இம்மக்களது வாழ்க்கை நிலைமை மிகவும் மோசம்.
கலா எனும் பெண்மணியின் கணவர் சுனாமியில் இறந்து விட்டார். அவர்களுடைய தொழிலும் போயிற்று. வரதட்சணை கொடுக்க முடியவில்வில்லை என்பதால் மகள் வாழாவெட்டியாகத் திரும்ப வந்து விட்டாள். அருகில் இருந்த சில கிட்னி ஏஜெண்டுகள் மூலம் தன் கிட்னியை விற்க கலா ஒப்புக்கொண்டார். 50 ஆயிரம் வரும்; பெண்ணுக்கு வரதட்சணை 30,000 போக, மீந்த பணத்தில் இட்லிக் கடை வைத்து சம்பாதித்து விடலாம் என்பது அவரது யோசனை. இப்பொழுது செய்யும் சித்தாள் வேலையை விட்டுவிடலாம். மதுரையில் ஆபரேஷன், முடிந்தவுடன் காசு.
மதுரைக்குச் சென்றார் கலா, ஆபரேஷனில் ஏதோ சிறு தவறு. காயம் ஆற ஒரு மாதம் ஆகும் எனச் சொல்லிவிட்டார்கள், சரி பணம்? ஏஜெண்ட் கமிஷன் போக 40 ஆயிரம் ரூபாய் கைக்கு வந்தது. கிட்னி எடுக்கும் ஆபரேஷன் வரை தான் மருத்துவச் செலவு அவர்களுடையது, அதன் பின் கலா தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கலா அந்தத் தனியார் மருத்துவமனைக்குக் கட்டணம் கட்ட முடியாமல் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். உடலைக் காப்பாற்ற 15 ஆயிரம் செலவானது. 25,000 வரதட்சணைக்குக் கொடுத்து விட்டார். ஆபரேஷனுக்குப் பின், முன் போல சித்தாள் வேலையும் பார்க்க முடியவில்லை. சரி காவல்துறையிடம் புகார் கொடுக்கலாம் என்று போனார். ஏட்டு சட்டத்தை எளிமையாக அவரிடம் எடுத்துச் சொல்லிவிட்டார். “இந்திய சட்டப்படி உங்கள் உடல் உறுப்பைத் தானம் தான் கொடுக்க வேண்டும், விற்பனை செய்தால் விற்றவர் கடுமையான தண்டனை பெற வேண்டும்”.
சென்னை மருத்துவமனை ஒன்றில் சிறுநீரகத்தை நீக்கும் நெப்ரெக்டொமி அறுவை சிகிச்சை. 2006-2007 ஆண்டுகளில் கிட்னிவாக்கம் என்றழைக்கப்படும் சுனாமி முகாமில் கிட்டத்தட்ட அனைத்து பெண்களும் தனது கிட்னிகளில் ஒன்றை விற்றுள்ளனர்.
ஏழையால் வேலை செய்து வாழ முடியாத சமுக அவலம், அந்த சமுக அவலத்தைப் பணமாக்கிக் கொள்ளும் இன்னொரு அவலம். இந்த சமூக அவலத்தில் இந்தியாவில் கிட்னி திருட்டும் வியாபாரமும் தழைத்தோங்குகிறது. GDP சேர்த்தால் பல புள்ளிகள் அள்ளலாம். விவசாயிகள் முதல், நெசவாளிகள், மீனவர்கள், மலை வாழ் மக்கள் என பல இலட்சம் பேர் கிட்னி விற்பனை செய்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் ’பங்காற்றுகின்றனர்’.
ஆசிரியருடன் பி.பி.எஸ். நேர்காணல்
இரத்த தானம்?
சென்னை தெருக்களிலிருந்து 1999ல் காணாமல் போன தனது மகன் சுபாஷின் புகைப்படத்துடன் சிவகம்மா - நாகேஷ்வர் ராவ். தற்சமயம் சுபாஷ் அமெரிக்காவில் ஒரு கிறுத்தவ குடும்பத்தில் வளர்வதாக சென்னை போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலே பார்த்தோம் அல்லவா ? இந்திய சட்டப்படி இரத்த ‘தானம்’ தான் செய்ய வேண்டும் விற்கக் கூடாது. ஆனால் அப்படித் தானமாகப் பெறப்பட்ட இரத்தத்தை உடம்பில் ஏற்ற பணம் கொடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் ஆபரேஷன் பில்லில் இதர செலவுகளுடன் உங்களுக்கு ஏற்றப்பட்ட ரத்தத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கும். இரத்தம் தானமாகக் கிடைத்திருந்தாலும் காசை வசூலித்து விடுவார்கள்.
அதாவது உடல் உறுப்புகள் கொடுப்பது இலவசம், ஆனால் அந்த உறுப்பைப் பொருத்த நீங்கள் பணம் கொடுக்க வேண்டும். இதில் முதலில் இலாபம் அடைபவர்கள் தனியார் மருத்துவமனைகள். அவர்கள் இன்று இந்த உறுப்புகளுக்கான சந்தையை ஊட்டி வளர்க்கிறார்கள்.
இதே உறுப்புகளுக்கு மாற்று உறுப்பைப் பெறுபவரிடம் பல இலட்சங்கள் வாங்கப்படுகிறது. கலாவிடமிருந்து எடுத்த கிட்னி இந்தியாவில் 4 இலட்சம், அமெரிக்காவிலோ 13 இலட்சத்திற்கு விலை போகும். இடையில் புழங்கிய பணம் மருத்துவமனை, ஏஜெண்டுகளின் பையில் அடைந்து கொள்ளும். இதில் ஏஜெண்டுகளாக பல மருத்துவர்களே உள்ளனர். அரசு மருத்துவமனைகள் முதல் தனியார் மருத்துவமனைகள் வரை கொள்ளை இலாபம் புரளும் தொழில் இது.
இன்னொரு புறம் இரத்தத் தட்டுப்பாடு இருக்கும் இடங்களில் இரத்தம் கொடுக்க பணம் சட்டப்பூர்வமாகவே வசூல் செய்யலாம். நல்ல விஷயம் தான், ஆனால் அது என்ன விபரீதத்தைக் கொண்டு வந்தது தெரியுமா?
கோரக்பூரில் ஒருவன் நான்கு பேரைக் கடத்தி வைத்துக்கொண்டு அவர்களைச் சங்கிலியால் கட்டிப் போட்டு விட்டு, அவர்களுடைய இரத்தத்தை எடுத்து விற்பனை செய்து கொண்டிருந்தான். பிடிபட்டவுடன் நல்ல வேளையாக அவன் இந்தியாவில் இருந்ததால் சட்டம் அவனைக் காப்பாற்றி விட்டது. என்ன ! பணம் கொஞ்சம் செலவாகியிருக்கும்!
இந்தப் புத்தகம் முழுவதும் அதன் ஆசிரியர் ஸ்கார்ட் கார்னியின் உழைப்பை நாம் மதிக்கத் தக்கதாகவே உள்ளது, ஏதோ புத்தகம் எழுதுகிறோம் என்பதோடு நில்லாமல். நாடு நாடாக, பல ஊர்கள் சுற்றி உடல் உறுப்புகள் பற்றிய சந்தையைப் பற்றி தகவல்கள் திரட்டி நெற்றிப்பொட்டில் அடிப்பது போல் முன்வைக்கிறார்.
அவர் மிகச் சுருக்கமாகக் குறிப்பிடுவது “மூன்றாம் உலக நாடுகளின் உயிர்கள் எப்பொழுதும் மலிவானவை. இதுதான் காலனியச் சிந்தனை”. அதை நிரூபிக்கும் அனைத்து ஆதாரங்களையும் தன் புத்தகத்தில் அனைவருக்கும் எளிதாகப் புரியும் வண்ணம் விளக்கியுள்ளார். நாம் மேலே பார்த்ததெல்லாம் அக்கடலில் ஒரு துளிதான்.
தனது மகள் சபீனை ஒன்பதாண்டுகளாக தேடிய முயற்ச்சியில் திவாலாகிப்போன பாத்திமாவின் குடும்பம் தற்போது வண்ணாரப்பேட்டையில் வாழ்கிறது
உடல் விற்பனை என்பது, குழந்தைகள் கடத்தல், பெண்கள் விற்பனை, பெண்களின் கரு முட்டை விற்பனை, இரத்தம், கிட்னி, இதயம் உள்ளிட்ட இதர உடல் உறுப்புக்கள், இறந்தவர்களின் தோல், எலும்பு, வாடகைத் தாய் முதல் நம்மூர் திருப்பதியில் இருந்து ஏற்றுமதி ஆகும் தலை முடி வரை எனப் புத்தகம் முழுவதும் அவரின் ஆய்வு விரவிக் கிடக்கின்றது.
ஆமாம் திருப்பதியில் ஆண்கள் தலை முடி பேக்கரியில் பயன்படுத்தும் ஏதோ ஒரு ரசாயனப் பொருள் செய்யப் பயன்படுகிறதாம். பெண்களின் தலைமுடி பல பில்லியன் டாலர் புழங்கும் ‘விக்’ வணிகமாம். ஏலு கொண்டல வாடா! நீ எப்படி கோடீசுவரக் கடவுளாக இருக்கிறாய் என்பது இப்போதுதான் புரிகிறது.
மனிதன் எனும் சோதனை எலி
இதனுடன் இந்த புத்தகம் முடிவடையவில்லை. இதன் இன்னொரு பரிமாணம் என்பது மனித உடல்களைச் சோதனை எலிகளாகப் பயன்படுத்துவது எனும் ஆபத்து பற்றியது. நீங்கள் தமிழில் ஈ என்று படம் பார்த்திருக்கிறீர்களா? சரி அது வேண்டாம். அதன் மூல ஆங்கிலத் திரைப்படமான தெ கான்ஸ்டண்ட் கார்டனர் பார்த்திருக்கிறீர்களா? இந்தப் புத்தகத்தின் 8 ஆம் அத்தியாயம் அந்த அதிர்ச்சியான செய்தியைப் பற்றி தான் பேசுகிறது. பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் சோதனைக்கூடம் ஏழைகளின் உடல் தான்.
ஆப்ரிக்கா முதல் இந்தியா வரை வாழும் மூன்றாம் உலக, ஏழை நாடுகளின் மக்கள் தான் சோதனைச்சாலையின் எலிகள். நிறுவனம் புதிதாகத் தயாரிக்கும் மருந்தைச் சந்தைக்குக் கொண்டு வர, தரச் சான்றிதழ் பெற, அதற்கு முன்னரே சோதனை நிலையில் பலர் மேல் அம்மருந்து பிரயோகிக்கப்படுகிறது. கொடுமை என்னவென்றால் அது யார் மீது பிரயோகிக்கப்படுகிறதோ அம்மக்களுக்கே தெரிவதில்லை.
கோமதி கருவற்றவேளையில் சைக்லோபமைன் (Cyclopamine) என்ற மருந்து அவர் மீது சோதிக்கப்பட்டதன் விளைவாக குழந்தை இப்படிப் ஊனமாக பிறந்ததாக கஸ்தூர்பா காந்தி மருத்துமனை ஊழியர்களால். சந்தேகிக்கப்படுகிறது. அம்மருந்து தற்போது அமெரிக்காவில் புற்றுநோய் சிகிச்சைக்காக சோதிக்கப்பட்டு வருகிறது. இப்படம் எடுப்பதற்கு ஓராண்டு முன்பாக மருந்து கம்பெனிகள் முறையற்ற வகையில் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை நூற்றுக்கணக்கான பெண்களின் மீது சோதித்த்தாக தெரியவருகிறது. தற்போது இந்தியாவில் சைக்லோபமைன் விற்பனைக்கு கிடைத்தாலும், எந்த நிறுவனமும் அம்மருந்தை இங்கு சோதித்த்தாக ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.
இது ஏதோ ஒரு நிறுவனம், ஒரு நபர் சார்ந்த திருட்டு நடவடிக்கை அல்ல. சில நேரங்களில் அந்த நிறுவனங்கள் அந்த நாட்டின் சுகாதாரத் துறையையே விலைக்கு வாங்கி விடுகின்றன. இந்தக் குற்றம் ஒரு குறிப்பிட்ட அமைச்சரின் தனிப்பட்ட ஒழுக்க நெறி சம்பந்தப்பட்டதல்ல. அந்தந்த மருந்து நிறுவனங்களின் இலாப வெறியும், சந்தைப் போட்டியும் தான் இவற்றுக்கு அடிப்படை.
பன்னாட்டு மருந்து கம்பெனிகள் இலாபம் ஒன்றை மாத்திரமே மையமாகக் கொண்டு இயங்கும் வைரஸ்கள், ஒன்றில்லை என்றால் இன்னொன்றைப் பிடித்துக் கொள்கின்றன. ஆனால் இது மனித வைரஸ். கொஞ்சம் புத்திசாலித்தனமானது. தனக்கான அரசையே கூட சில ஆப்பிரிக்க நாடுகளில் அது உருவாக்கி விடுகின்றது.
பெரும்பான்மை மக்களின் மருத்துவம் போன்ற துறையில் தனியார் மயம் என்பது தெரிந்தே வைரஸை செலுத்திக் கொண்டது போன்றதுதான். எப்படி புற்றுநோயின் வளர்ச்சி மனிதனை அழிக்கின்றதோ அதே போல்தான் இந்தத் தனியார்மய வளர்ச்சியும் சமூகத்தை அழிக்கிறது. இது கண்ணுக்குப் பருண்மையாகத் தெரிகின்றது. நாம் தான் கண்ணை மூடிக்கொண்டு வளர்ச்சி வளர்ச்சி என்கிறோம். எது வளார்ச்சி என்று சரி பார்த்துக் கொள்வது நல்லது.
யோசித்துப் பாருங்கள், நோய் குணமாகும் என்கிற நம்பிக்கையில் மருத்துவமனைக்குச் சென்று பணத்தை அள்ளி இறைத்த பின் ’நீங்கள் ஒரு சோதனை எலி, உங்கள் உடலில் ஒரு மருந்து சோதனைக்காகச் செலுத்தப்பட்டிருக்கிறது. அதனால் உயிர் இழந்தாலும் உங்கள் குடும்பத்தினருக்கு ஒன்றுமே தெரியாது’ என்ற அவல நிலையை?
முதலாளித்துவம் மனிதனிடத்தில் இருக்கும் உணர்ச்சிகள் அனைத்தையும் பிடுங்கி ஒரு பண்டமாக மாற்றிவிடும் என்று மார்க்ஸ் சொன்னது எவ்வளவு உண்மை? !
படங்கள் : தி ஒயர்ட் மேகசின், ரெட்மார்கெட்
Subscribe to:
Posts (Atom)

Follow Us
Were this world an endless plain, and by sailing eastward we could for ever reach new distances