read the tamil Special news and tips on Experts. Archive for 04/14/14
 .நம்ம வீடு.காம் தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

மலிவு விலை மருந்து







மலிவு விலை மருந்து அதாவது உங்கடாக்டர்  எழுதி தரும் மருந்து தான் ..
அனால் மலிவாக எப்படி....... டாக்டர் காய்ச்சலுக்கு எழுதி தரும் மருந்து XXXx  என்று வைத்துகொள்ளுங்கள்  அதில் இருப்பது peracitamal  எனும் மருந்து தான்  ஆனால்  அதை தயாரிக்கும் கம்பனியை பொறுத்து  அதன் விலை மாரும்  10 ரூபாய் விக்க கூடிய மருந்தை 100 ரூபாய் விற்கும் கம்பனியும் உண்டு 40 ரூபாய் விற்கும் கம்பனியும் உண்டு இது ஒரு சில மருத்துவரை பொருத்து 
so இதில் எல்லாம் சிக்கி கொள்ளாமல் நியாயவிலையில் மருந்து வேண்டுமா 

அதற்காகவே இப்பொது Generic medicine என்று ஒரு  concept  வந்து இருக்கிறது  அதாவது உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அதே மருந்துதான்  ஆனால் 
விலை குறைவஹா ஒருசிலர்  மாதம் 10000 ரூபாய் கெல்லாம் மருந்து வாங்குவார்கள்  Generic medicine shop வாங்கினால் 2000தில் முடிய வாய்பு இருக்கிறது  Generic medicine shop   Generic Medcine சென்னை முகவரி யை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்  இது  இது உங்களுக்கு புதிய விஷயம் இல்லை முன்னமே தெரிந்ததால்  தயவுசெய்து எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளவும்
Generic Medicine  About Fda                                  அபுதாகிர் 

A generic drug must contain the same active ingredients as the original formulation. According to the U.S. Food and Drug Administration (FDA), generic drugs are identical or within an acceptable bioequivalent range to the brand-name counterpart with respect to pharmacokinetic and pharmacodynamic properties. By extension, therefore, generics are considered (by the FDA) identical in dose, strength, route of administration, safety, efficacy, and intended use.[4] The FDA's use of the word "identical" is very much a legal interpretation, and is not literal. In most cases, generic products are available once the patent protections afforded to the original developer have expired. When generic products become available, the market competition often leads to substantially lower prices for both the original brand name product and the generic forms. The time it takes a generic drug to appear on the market varies. In most countries of the world, patents give 20 years of protection. However, many countries/regions, e.g. the European Union and the USA [5] may grant up to 5 years of additional protection for drugs ("patent term restoration").

0 comments:

தொலைத் தொடர்புக்கு உள்ளேயே இரு!

ஆளுமைத் திறன்

    தொலைத் தொடர்புக்கு உள்ளேயே இரு!
    04 (18/04/2013)
    அடுத்தடுத்து பலக
    ட்டத் தேர்வுகள் அடங்கிய பரீட்சை அது. மனநலவியல் பேராசிரியர் ஒருவருடன் அந்த அறைக்குள் நீங்கள் நுழைகிறீர்கள். உள்ளே இரண்டு நபர்கள் நிர்வாணமாக அமர்ந்திருக்கிறார்கள். உங்கள் சங்கடம் போக்க, அவர்கள் இருவர் மீதும் பெட்ஷீட்டைப் போர்த்துகிறார் பேராசிரியர்.
    'இவர்களில் ஒருவர், மல்டிநேஷனல் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சி.இ.ஓ. இன்னொருவர், அதே நிறுவனத்தில் துப்புரவுத் தொழிலாளி. இவர்களில் யார் சி.இ.ஓ... யார் தொழிலாளி என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்!' என்கிறார்.

    இருவரும் ஒரே உயரம், நிறம், வயதினர். இருவர் சிரிப்பிலும் ஏறக்குறைய வித்தியாசம் இல்லை. கண்கள் உங்களை நேருக்கு நேர் பார்க்கின்றன. நீங்கள் திணறுகிறீர்கள். உங்களுக்கு உதவுவதற்காக இருவர் மீதும் இருக்கும் பெட்ஷீட்டை முட்டி வரை உயர்த்துகிறார் பேராசிரியர். இருவர் பாதங்களை வைத்தும் ஆட்களை அடையாளம் காண முடியவில்லை. மீண்டும் பெட் ஷீட்டைப் பிடிக்கக் கீழே குனிகிறார் பேராசிரியர். அடுத்து நடக்கப்போவதை நினைத்து நடுங்கி, நீங்கள் கண்களை மூடிக்கொள்கிறீர்கள். சில நொடிகள் கழித்துத் தயக்கத்துடன் கண்களைத் திறக்க, இருவரின் தலை முதல் மார்பு வரை பெட்ஷீட் இறக்கப்பட்டு இருக்கிறது. 'ஊப்ப்ப்ஸ்!' என்று பெருமூச்சுவிடுகிறீர்கள். ஆனால், அப்போதும் உங்களால் 'யார் சி.இ.ஓ', 'யார் க்ளீனர்?' என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

    'நன்றி. நீங்கள் இருவரும் கிளம்பலாம்!' என்று பேராசிரியர் அந்த நிர்வாண நாயகர்களுக்கு விடை கொடுக்கவும், சடாரென பெட்ஷீட்டால் தங்களை மறைத்துக்கொண்டு வாசல் நோக்கி நடக்கிறார்கள். வெளியேறும் முன், திரும்பும் முதல் நபர், 'நல்லவேளை இந்த டெஸ்ட் முடிந்ததே என்று நீங்கள்சந்தோஷப்பட்டு இருப்பீர்கள் நண்பரே. உங்கள் அடுத்த பரீட்சையாவது இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!' என்று புன்சிரிப் போடு விடைபெறுகிறார். இரண்டாமவர், 'என்னால் உங்களுக்கு உதவ முடிந்ததற்கு நன்றி!' என்று சொல்லி, கதவருகே தயங்கி நிற்கிறார். பேராசிரியர் சில ரூபாய் தாள்களை அவர் கையில் திணிக்க, கண்களில் மின்ன லுடன் இடத்தைக் காலி செய்கிறார்.

    பேராசிரியர் அர்த்தமுடன் உங்களை நிமிர்ந்து பார்க்க, 'முதல் நபர்தான் சி.இ.ஓ. இரண்டாமவர் க்ளீனர்!' என்கிறீர்கள் வெற்றிப் புன்னகையுடன்.

    இதில் இருந்து நீங்கள் பெற வேண்டிய மெசேஜ்... உங்கள் நிறம், அழகு, உயரம், ஆடைகள், இளமை போன்ற புறக் காரணிகள் மற்றவர்களுடனான உங்கள் உறவை எவ்விதத்திலும் பாதிக்காது. நீங்கள் எதிராளியை எதிர்கொள்ளும் விதம், பழகும் பாங்கு, ரியாக்ட் செய்யும் தொனி போன்றவைதான் அவருடனான உங்கள் தொடர்பை இயல்பாக்கும். அப்படி ஒரு நபருடன் முதல் சந்திப்பிலேயே இயல்பாக, 96 ட்ரிக்குகளைச் சொல்லித் தருகிறார் லெய்ல், தனது 'How to instantly connect with anyone' புத்தகத்தில். அதில் இருந்து சில புக்மார்க்குகள்!

    கண்ணைப் பார்... சிரி!

    அடர்ந்த காட்டில் இரண்டு புலிகள் நேருக்கு நேர் சண்டையிடுகின்றன. நெருப்பு மின்னும் விழிகளோடு இரண்டும் ஒன்றையன்று மூர்க்கமாக முறைக்கும். கண்ணுக்குக் கண் நேர்க் கோடாகத்தான் அவற்றின் பார்வை பயணிக்கும். எந்தப் புலி அசந்து கண் சிமிட்டுகிறதோ, அல்லது பார்வையை ஒரு கணம் திசை தப்பவிடுகிறதோ... அது காலி. நொடியும் காத்திருக்காமல் சரேலெனப் பாய்ந்துவிடும் கில்லி புலி. பார்வைக்கு அந்த பவர் முக்கியம். ஆம், எதிராளியின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். கண் பார்த்துப் பேசும் கலைக்குச் சில சிம்பிள் டிப்ஸ் இதோ...

    எதிராளியின் கண்கள் என்ன நிறம் என்று கண்டு பிடியுங்கள். (உங்கள் நெருக்கமான நண்பர்களில் மூன்று பேரின் கருவிழி நிறங்களையாவது நினைவு கொள்ள முடிகிறதா உங்களால்?) நிறத்துக்குப் பிறகு கண்களின் வடிவத்தைக் கண்டுபிடியுங்கள். இரண்டு கண்களுக்கும் இடையிலான இடைவெளியை அளந்து பாருங்கள். கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருக்கிறாரா? அணிந்திருந்தால் என்ன கலர்?

    இதயத்தைத் தொடுங்கள்!

    கண்ணோடு கண் நோக்குவதற்கு அடுத்து மிக முக்கியமானது கைகுலுக்கல். மைக்ரோசாஃப்ட் நிறுவ னத்தின் மிக உயர்ந்த பதவிக்கான நேர்காணல் அது. இரண்டு திறமைசாலிகள் இறுதிக் கட்டம் வரை விடாமல் முன்னேறி, சளைக்காமல் மல்லுக்கட்டுகிறார்கள். தகுதி, திறமை, நேர்மை, புத்திக்கூர்மை என அனைத் திலும் ஒருவருக்கு நிகர் மற்றொருவர். ஒருவரைத்தான் தேர்ந்தெடுத்தாக வேண்டும். இன்டர்வியூ செய்தவர் அறையைவிட்டு வெளியேறி, 'இரண்டாம் நபருக்கு அப்பாயின்மென்ட் லெட்டர் கொடுங்கள்' என்றார். 'எதனால் முதலாமவரை விலக்கினீர்கள்?' என்று கேட்டேன். 'சிம்பிள். அவருடன் கைகுலுக்கியபோது ஒரு நடுக்கம் தெரிந்தது. ஆனால், இரண்டாமவரின் கைகளில் நம்பிக்கையும் அன்பும் அழுத்தமாகப் பதிந்திருந்தது!' ஒரு 'ஹேண்ட்ஷேக்' சமயங்களில் உங்கள் எதிர்காலத்தையே ஷேக் செய்யும் என்பதற்கு மிகச் சின்ன உதாரணம் இது!

    அழுத்தமாகக் கை குலுக்குங்கள் என்பதும் அடிப் படை மேனெஜ்மென்ட் பாடங்களுள் ஒன்றுதான். ஆனால், அது எப்படி? இதற்கும் ஒரு சுலப வழிஒன்று இருக்கிறது. எதிரில் இருப்பவருடன் கைகுலுக்கும்போது உங்கள் ஆள்காட்டி விரலால் அவரது மணிக்கட்டு நரம்பை மிருதுவாக அழுத்திக்கொடுங்கள். (பல்ஸ் பார்க்க மருத்துவர்கள் உங்கள் மணிக்கட்டில் அழுத்திப் பிடிப்பார்களே... அதேதான்!) அந்த நரம்பு நேரடியாக இதயத்துக்கு ரத்தம் பாய்ச்சும் மகா தமனி. அது உணரும் எந்த உணர்வும், இதயத்தாலும் அழுத்தமாகவே உணரப்படும். நண்பர்களிடையே இதை முதலில் பழுகுங்கள். உஷார்... 'ஃபெதர் டச்' என்பார்களே... அப்படி இருக்க வேண்டும் உங்கள் அழுத்தம்!

    அடக்கி வாசி மாப்ள!

    பள்ளி, கல்லூரிக் காலங்களில் அடிக்கடி புதுப் புது நபர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அந்த மாதிரி யான தருணங்களில், டாப் அடிக்க வேண்டியிருக்கும். அப்போது யார் என்ன பேசினாலும், உடனே முந்திக்கொண்டு கமென்ட் அடிக்கும் பழக்கத்தைத் தவிர்த்திடுங்கள். அடிக்கடி நீங்கள் ஏதேனும் சொல்லிக்கொண்டே இருந்தால், உங்கள் கருத்துக்களுக்கு அங்கே மதிப்பு இல்லாமல் போகக் கூடும். அதுவே, அரட்டை ஆரம்பித்து முதல் 15 நிமிடங்களுக்கு நீங்கள் 'சைலன்ஸ் மெயின்டெய்ன்' செய்துபாருங்கள். உங்கள் அமைதி அவர்களை உறுத்தி, 'என்னடா ஆச்சு... எதுனாசொல்லு?' என்று உங்களிடம் கருத்துக் கேட்பார்கள். நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். அந்தச் சமயம் உங்கள் வார்த்தைகளுக்கு அதிக மரியாதை இருக்கும். இது நண்பர்களுடன் அரட்டையடிக்க மட்டுமல்ல; ஆலோசனைக் கூட்டம், வகுப்பறை, குடும்ப விசேஷம் என எந்தச் சூழலுக்கும் பொருந்தும்!

    தாமதத்துக்கு நோ தாம்தூம்!

    மீட்டிங், வகுப்பறை, ஆலோசனைக் கூட்டம் போன்றவற்றுக்குச் சரியான நேரத்துக்குச் செல்லுங்கள். தவிர்க்க முடியாமல் தாமதமாகிவிட்டால், மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்ததும் 'எக்ஸ்கியூஸ் மீ', 'என்னை எல்லாரும் மன்னித்துவிடுங்கள்!' என தாம்தூம் என உங்கள் வருத்தத்தைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டாம்.

    அமைதியாக உங்கள் இருக்கையை ஆக்கிரமித்து, மீட்டிங்கின் போக்குக்குக் காது கொடுங்கள். எங்கேனும் நீங்கள் குறுக்கிடும் சமயம், 'மன்னிக்கவும் இந்த டாபிக் பற்றி நீங்கள் ஏற்கெனவே விவாதித்துவிட்டீர்களா என்று தெரியவில்லை. நண்பனுக்கு ஆக்சிடென்ட். அவனை மருத்துவமனையில் சேர்த்து, ரத்தத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு வருவதற்குள் மீட்டிங்கின் ஆரம்ப நிமிடங்களைத் தவறவிட்டுவிட்டேன். அதனால் நான் எனது கருத்தை இப்போது பதிவுசெய்கிறேன்!' என்று தொடர்ந்து உங்கள் கருத்தைப் பதிவு செய்துவிடுங் கள்.

    இதனால் உங்கள் மேல் இருக்கும் கோபம் தணிந்து, பிறர் உங்களுக்கு உதவ ஆர்வமாக விசாரிக்கவும் செய்வார்கள். பாலீஷாக உங்கள் வருத்தத்தைப் பதிவு செய்தது போலவும் ஆகிவிடும்!

0 comments:

டா வின்சி போல யோசி!

ஆளுமைத் திறன்

    Redhils Real Estate Agencyடா வின்சி போல யோசி!
    Posted Date : 11:05 (28/05/2013)Last updated : 11:05 (28/05/2013)
    லியோனார்டோ டா வின்சியை எப்படி அறிமுகப்படுத்துவீர்கள்? உடற்கூறு வல்லுநர், பொறியியலாளர், நகர வடிவமைப்பாளர், ஆடை, மேடை வடிவமைப்பாளர், சமையற்கலை நிபுணர், அறிவியல் அறிஞர், புவியியலாளர், கணிதவியல் வல்லுநர், நகைச்சுவைப் பேச்சாளர், இசைக்கலைஞர், ஓவியர், தத்துவமேதை, இயற் பியல் மேதை... இன்னும் என்னவெல்லாம்?

    இந்த எல்லா அறிமுகங்களுக்கும் பொருத்த மானவர், லியோனார்டோ டா வின்சி. 'சரி... இந்த உலகத்தை வடிவமைத்த மேதைகளில் வின்சிக்கு மறுக்க முடியாத பங்கு இருக்கிறது. 'அவரைப் போலவே நாமும் யோசித்து ஜீனியஸ் ஆகலாம் என்று பொய் நம்பிக்கை ஊட்டுவதைப்போல உள்ளதே 'think like da vinci' என்ற புத்தகத்தின் தலைப்பு' என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், வாவ்... நீங்கள் டா வின்சிபோல யோசிக்கத் துவங்கி இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்!'இப்படி ஆரம்ப வரிகளிலேயே உற்சாகம் தெளிக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் மைக்கேல் ஜே.கெல்ப்.

    டா வின்சி மறைந்தபோது, 'இந்த மனிதரின் மறைவு உலகத்துக்கே ஈடுசெய்ய முடியாதது. இயற்கையாலேயே இன்னொரு டா வின்சியை சிருஷ்டிக்க முடியாது!' என்பதுதான் அவருக்கான அஞ்சலி. அப்படிப்பட்ட ஒருவர்போல நாம் சிந்திக்க முடியாதுதான். ஆனால், அவர் தனது சிந்தனைகளை மேம்படுத்தக் கையாண்ட வழி முறைகளை அறிந்துகொண்டு, நமது சிந்தனைகளையும் ஒரு புதிய பாதையில் பயணிக்கச் செய்யலாம் என்று உத்தரவாதம் தருகிறார் மைக்கேல்.

    ஆர்வத்துக்கு அணை போடாதீர்கள்!

    ஜீனியஸ்களுக்கும் குழந்தைகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. பேசத் தொடங்கியவுடன்குழந்தை கள் எதைப் பார்த்தாலும் அது தொடர்பான கேள்வி களைக் கேட்டுக்கொண்டே இருக்கும். 'அம்மா, இந்த கிரைண்டர் எப்படி வேலை செய்கிறது?', 'நான் எப்படிப் பிறந்தேன்?', 'அப்பா, பாப்பா எங்கே இருந்து வருகிறது?', 'ஏன் ஞாயிற்றுக்கிழமை ஐஸ்க்ரீம் கடை லீவு?', இப்படி இப்படி. இந்த உலகத்தில் ஜீனியஸ் என்ற அடைமொழி வழங்கப்பட்டவர்கள் அனைவரும் குழந்தை மனநிலையில் தான் தங்களை நிலைநிறுத்திக்கொண்டார்கள். டா வின்சிக்குப் பெண்கள், மது, செல்வம், செல்வாக்கு, மதப்பற்று என எந்த விஷயங்களும் கிளர்ச்சியூட்டவில்லை. மாறாக, எதைப்பற்றியும் எப்போதும் கேள்விகள் எழுப்பிக்கொண்டே இருப்பதுதான் அவரை எப்போதும் துடிப்பாகவைத்திருந்தது என்கிறார். எப்போது எந்தக் கேள்வி எழுந்தாலும், தன்னுடைய சின்னக் குறிப்புக் கையேட்டில் குறித்து வைத்துக்கொள்வார் டா வின்சி. பின்னர், அவற்றுக் கான பதிலுக்காக மண்டையை உருட்டிக்கொண்டு இருப்பார்.

    நீங்களும் எந்தச் சின்னச் சம்பவமாக இருந்தாலும், அதைப்பற்றி டாப் 10 கேள்விகள் எழுப்பிப் பழகுங்கள். உதாரணமாக, ஒரு பறவை பறக்கிறதென்றால்,

    ஏன் அதற்கு இரண்டு சிறகுகள்?

    ஏன் அவற்றுக்கு உடல் முழுக்க இறகுகள்?

    அது எப்படி மேலெழும்புகிறது?

    எப்படித் தன் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது?

    எப்படி வேகம் எடுக்கிறது?

    எப்படி அவற்றால் பறக்க முடிகிறது?

    அது எப்போது தூங்கும்?

    அதன் பார்வைத் திறன் எவ்வளவு?

    எப்படி அது உண்ணும்?

    பாதி வழியில் மழை பெய்தால் தொடர்ந்து பறக்குமா?

    இந்தக் கேள்விகளுக்குப் பதில்களை யோசிக்கத் தொடங்கினாலே, பறவையின் மறுபக்கம் குறித்துப் பல புதிய விஷயங்களை அறிந்துகொள்வோம்தானே! நீங்கள் எழுப்பும் கேள்விகள் அனைத்துக்கும் பதில் கண்டுபிடித்துவிட வேண்டும் என்பது இல்லை.ஆனால், அதற்கான உங்கள் சிந்தனை நிச்சயம் உங்களுக்குள்ளேயே ஓர் உற்சாகத்தை ஊற்றுவிக்கும்!

    எனது ப்ளஸ், மைனஸ்!

    1) எனது பலம், சிறந்த குணங்கள் என்ன?

    2) எனது பலவீனம், திருத்திக்கொள்ள - கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

    3) இன்னும் திறமையான, உதவும் மனப்பான்மை கொண்ட, சின்ஸியரான நபராக ஆளுமையைவளர்த்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?

    அதிகபட்சம் ஆறு மாத இடைவெளிகளில் இந்த மூன்று கேள்விகளையும் உங்களுக்கு நெருக்கமான நலன்விரும்பிகளிடம் கேட்டுப் பதில்களைப் பெறுங்கள். நேர்மையான பதில்களுக்கு ஏற்ப உங்கள் மனப்பான்மையில் தேவைப்படும் மாற்றங்களை மேற்கொள் ளுங்கள். கல்லூரி-அலுவலகங்களில் உங்கள் ஜூனியர், நீங்கள் எதிரியாக நினைக்கும் நபரிடம்இருந்து வரும் பதில்களைக்கூட உதாசீனப்படுத்தாதீர்கள். பதில் கள் நீங்கள் கேட்க விரும்பாதவையாக இருந்தால், உஷார் ஆக வேண்டிய தருணம் என்பதை உணர்ந்து உடனடியாகச் செயல்படுங்கள்!

    எனி டைம் மாணவன்!

    கல்லூரிக் காலம் முடிந்து வேலைக்குச் சேர்ந்து, திருமணம் முடித்து, ஒரு குழந்தை பெற்றுக்கொண்டதும் இந்த உலகம்பற்றி அனைத்தும் அறிந்தவர், தெரிந்தவர், புரிந்தவர் என்ற அந்தஸ்தை நமக்கு நாமே சூட்டிக் கொள்கிறோம். அங்கேதான் நாம் தங்கித் தேங்கிப்போகி றோம். டா வின்சி மரணப் படுக்கையில் விழும் கடைசி நொடி வரை ஏதோ ஒன்றைக் கற்றுக்கொண்டு இருக்கும் மாணவராகவே இருந்தார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... நமது வாழ்வின் வசந்த காலமாக பள்ளி, கல்லூரிப் பருவங்களைத்தானே ஆயுளுக்கும் குறிப்பிடு வோம். காரணம், அந்தக் காலங்களில் நம்மை உற்சாக மாக வைத்திருக்கும் அந்த மாணவ மனப்பான்மை தான். புதிதாக ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ளும்போது நம்மை அறியாமல் நமது மனது தனது கதவு, ஜன்னல் களை அகலத் திறந்து வைத்துக்கொள்கிறது. புதிதாக ஓர் ஆடையோ, செல்போனோ, கார் - பைக்கோ வாங்கும்போது எப்படிக் குதூகலம் அடைகிறோமோ, அதேபோலத்தான் நமது அறிவு அப்டேட் ஆகும்போது உற்சாகமாக இருக்கும். புதிய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்வது, கிடார், நீச்சல், சமையல், டிரைவிங் பழகுவது என சுவாரஸ்யமான பயிற்சிகள் வாழ்வை இன்னும் எளிமை ஆக்கும். அவற்றில் கவனம் செலுத் தலாம்.

    ஆனால், எந்தப் பயிற்சியில் ஈடுபட்டாலும் சில விஷயங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும். பயிற்சி யின்போது நாம் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த இடத்தில் நாம் ஒரு குழந்தையைப் போலத்தான் என்பதை உணர்ந்துகொண்டு, தெரிந்தவர் கள் வழிநடத்துவதை - அவர்கள் நம்மைவிட எவ்வ ளவு சிறியவர்களாக இருந்தாலும் - ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பயிற்சியை ஆரம்பித்தால், அதைமுடிக் காமல்விடக் கூடாது என்ற உறுதியுடன் இருக்கவேண் டும்!

    வாருங்கள்... நாம் அனைவரும் டா வின்சியின் இழப்பை ஈடுசெய்வோம்!

    - கி.கார்த்திகேயன்

0 comments:

மருத்துவம் வெறும் படிப்பல்ல!

மருத்துவம் வெறும் படிப்பல்ல!
Posted Date : 10:12 (13/12/2013)Last updated : 10:12 (13/12/2013)
  'பெரிய டாக்டர் என்று உருவெடுத்து, மக்களுக்குச் சேவை செய்யவேண்டும்’ என்கிற கனவோடு மருத்துவக் கல்லூரிக்குள் நுழைபவர்கள், என்னதான் படிப்பு, படிப்பு... என்று புத்தகத்தையே புரட்டிக் கொண்டிருந்தாலும், அதிலே அவர்களுக்குத் தேவையான அறிவும், திறமையும் முழுமையாகக் கிடைத்துவிடுவதில்லை. அதையும் தாண்டி அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை, பல உண்டு. அதில் முக்கியமானது, துறையில் சிறந்து விளங்கும் விற்பன்னர்களின் அனுபவங்களிலிருந்து பாடம் கற்பதுதான்!
அந்த வகையில், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர்களை நாம் சந்திக்க வைத்தது... சென்னை, ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், இதயவியல் மைய தலைவர் மற்றும் இயக்குநருமான டாக்டர் தணிகாசலத்தைத்தான்! தன்னுடைய பிஸியான வேலைகளுக்கு நடுவில், நம் அழைப்பை ஏற்று ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கு வந்த தணிகாசலம், ''உயிரைப் பாதுகாத்து, மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய சிறப்பான துறையைத் தேர்ந்தெடுத்த உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்’' என்று சொல்ல... அவருக்கு தங்களின் நன்றியைச் சொல்லிவிட்டு, ''கல்லூரி காலத்தில் எங்களை எப்படி மெருகேற்றிக் கொள்வது?'' என்கிற கேள்வியுடன் தங்களுடைய வேலையைத் தொடங்கினார்கள்....வருங்கால டாக்டர்கள்.
''பாடத்தை மட்டுமே படித்து வெளியேறுபவரால், சிறப்பான மருத்துவராக செயல்பட முடியாது. தொடர் பயிற்சியும் இருந்தால்தான் புதுப்புது அனுபவங்களைப் பெற்று, திறமைகளை மென்மேலும் வளர்த்துக் கொள்ள முடியும். இன்டர்நெட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும், வாய்ப்புகளும் இன்று கொட்டிக் கிடக்கின்றன. அதையெல்லாம் பயன்படுத்தி, உங்களை நீங்கள் மெருகேற்றிக் கொள்ள வேண்டும்.
மருத்துவர் என்று மட்டுமல்லாமல், மற்ற துறைகளைப் போலவே, இதிலும் எத்தனையோ வேலை வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக... பேராசிரியர், கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் பொறுப்புப் பணிகள், ஆராய்ச்சியாளர்... என அந்தப் பட்டியல் நீளமானது. குறிப்பிட்ட ஒரு பிரிவில் மேற்கொண்டு படித்து சிறப்பு நிபுணராகக்கூட உயர முடியும்.''
''உங்களுடைய அனுபவத்தில் எதிர்கொண்ட மிகக்கடினமான சூழலைச் சொல்லுங்களேன்...''
'நிறையவே இருக்கின்றன. கடந்த மாதம் கூட, உயிர்ப் போராட்டத்திலிருந்த 25 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவரை, பெரும் போராட்டத்துக்குப் பிறகு காப்பாற்றினோம். அவர், சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய இதய வால்வின் பரப்பளவு 4 செ.மீ. இருக்கவேண்டும். ஆனால், வெறும் 1 செ.மீ. அளவுக்கு சுருங்கிவிட்டது. இந்த இக்கட்டான சூழலில் பரபரப்பாக செயல்பட்டோம். சுருங்கிவிட்ட அவருடைய இதய வால்வை, இன்னோ பலூன் (Inoue balloon) உதவியோடு 2.5 செ.மீ. அளவுக்கு விரிவுபடுத்தினோம். இதன் காரணமாக அவருடைய உயிரைக் காப்பாற்றினோம். அடுத்த ஒன்றரை மாதத்தில் அவருக்கு அழகான, ஆரோக்கியமான குழந்தையும் பிறந்திருக்கிறது.''
''ஒரு டாக்டர், தன்னுடைய பணியை செவ்வனே செய்தாலும், சமயங்களில் அவருடைய முயற்சி தோல்வியில் முடிகிறதே..?''
''அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமான காரணம்... அவருடைய உடலில் பலவிதமான நோய்கள் இருந்திருக்கும் என்பதுதான். உதாரணத்துக்கு, ஒரு நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பார். அதற்கான சிகிச்சையின்போது அவருக்கு இருக்கும் மற்றொரு நோய், அவருக்குச் செய்கிற மருத்துவத்தை தோல்வியில் முடிய வைத்துவிடும். எனவே, சிகிச்சை செய்வதற்கு முன்பாக வேறு என்னென்ன நோய்கள் இருக்கின்றன என்பதையும் அறிந்து, அதற்கேற்றவாறு சிகிச்சை அளிப்பதுதான், வெற்றியைத் தரும்.''
''நீங்கள் ஏதும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறீர்களா?''
''கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக... சித்த மருந்துகளை, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இன்றைய சூழலுக்கேற்றவாறு மாற்றிக் கொடுப்பது எப்படி என்பதை ஆராய்ச்சி செய்து வருகிறோம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கப்படும் மருந்துகள் பற்றிய ஆய்வில் பல நிலைகளைத் தாண்டியிருக்கிறோம். கூடிய விரைவில் எங்களுடைய ஆய்வின் வெற்றிச் செய்தி வெளியில் வரும்.
எங்களிடம் தற்போது 40 பேர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பிஹெச்.டி படிப்பவர்களும் இருக்கிறார்கள். இதுவரை என்னிடத்தில் 5 பேர் பிஹெச்.டி முடித்துள்ளார்கள். எனக்குத் தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு எப்போதுமே அதிக ஆர்வம் உண்டு.''
''எல்லா துறைகளுமே... வளர்ச்சியை நோக்கித்தான் பயணிக்கும். அந்த வகையில் மருத்துவத் துறையின் வருங்காலம் எப்படியிருக்கும்?'
''இன்றைக்கு இருக்கக்கூடிய எல்லாவிதமான மருத்துவ முறைகளுமே மிகப்பெரிய வளர்ச்சிதான். நான் படித்து முடிக்கும்போது இதுபோன்ற வசதிகளும், வாய்ப்புகளும், வளர்ச்சிகளும் இல்லை. வருங்காலத்தில் இதெல்லாம் இன்னும் பல்வேறு படிகளை எட்டும். அதிலே ஒருவருக்கு வியாதி என்பதே வராமல் தடுப்பதற்கான மருத்துவ முறையும்கூட அறிமுகமாகும் வாய்ப்பிருக்கிறது. அதையெல்லாம் யாரோ கொண்டு வருவார்கள் என்று காத்திருக்கக் கூடாது. அதற்கான முயற்சி மற்றும் ஆராய்ச்சிகளில் நீங்களும் ஈடுபட வேண்டும். கடுமையாக உழைத்து, புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
பிறக்கப்போகும் குழந்தையின் இதயம் எப்படி இருக்கிறது... ஏதாவது பிரச்னைகள் இருக்கின்றனவா என்பதையெல்லாம் பிறப்பதற்கு முன்பே துல்லியமாக கண்டறிந்து, பிறந்ததும் உரிய சிகிச்சை மூலமாக சரிசெய்வது தற்போது சாத்தியமே. 30 சதவிகித குழந்தைகளுக்கு இதை வெற்றிகரமாக சரிசெய்யமுடியும்'' என்ற தணிகாசலம்...
''இது நான்கரை ஆண்டு படிப்பு என்றாலும், விடுமுறை நாட்களை எல்லாம் கழித்தால்... ஏறக்குறைய ஆயிரம் நாட்கள்தான் வரும். அதனால், ஒவ்வொரு நாளையும், நேரத்தையும், மணித்துளியையும் முக்கியம் என்று கருதி கடினமாக உழைத்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நீங்கள் படித்து முடிக்கும்போது தரமுள்ள மருத்துவராக வெளியே வருவீர்கள்'' என்று சொல்ல,
மீண்டுமொரு முறை அவருக்கு நன்றி பகிர, இனிதே நிறைவுற்றது சந்திப்பு!

0 comments:

MBA - மூன்றெழுத்து மந்திரம் 9: ஆக்ஷன் கிங் ஜப்பான்!

MBA - மூன்றெழு)த்து மந்திரம் 9: ஆக்ஷன் கிங் ஜப்பான்!




ஹென்றி ஃபோர்டு 1903-ல் இரண்டாம் தொழிற்புரட்சியைத் தொடங்கிவைத்தபின், அமெரிக்காதான் நம்பர் 1. அமெரிக்கா கடைப்பிடித்தக் கொள்கை முதலாளித்துவச் சித்தாந்தம். இதன்படி, தொழிலுக்கு ஆதாரம் முதலாளிதான்; முதலாளி போடும் காசுதான். எனவே, அவனில்லாமல் தொழிலாளி இல்லை.

ஆனால், கார்ல் மார்க்ஸ், ஃபிரெடரிக் ஏங்கல்ஸ், லெனின் ஆகியோரின் வழிகாட்டலில் ரஷ்யா தேர்ந்தெடுத்த வழி, பொதுவுடமைச் சித்தாந்தம். இதன்படி, தொழில் வளர்ச்சிக்கு காரணம்  தொழிலாளியின் உழைப்புதான். எனவே, தொழிலாளி இல்லாமல் முதலாளி இல்லை.  ஆக, முதலாளியும், தொழிலாளியும் என்றுமே இணைந்து வாழ முடியாத இரண்டு வர்க்கங்கள். அவர்களுக்குள் என்றும், எப்போதும் போராட்டம் நடக்கும். இந்த இரண்டு வர்க்கமும் நான் பெரியவனா, நீ பெரியவனா? என்று குடுமிப்பிடிச்சண்டை போட்டுக்கொண்டே இருக்கும். இதுதான் உலக நியதி.

இந்த சண்டையில் சிக்காமல் என் வழி தனிவழி என்று ஜப்பான்காரர்கள் சைலன்டாக ஒரு புரட்சி செய்தார்கள். ஜப்பான் தொழிற்சாலைகளில் முதலாளியும், தொழிலாளியும் எதிரிகள் அல்ல; எதிரெதிரான இரண்டு வர்க்கங்களும் அல்ல. அவர்களுக்கு இடையேயான தொடர்பு இவை அத்தனையையும் தாண்டிய பந்தம். முதலாளி அப்பா என்றால், தொழிலாளிகள் குழந்தைகள் மாதிரி. 

ஜப்பானியர்கள் சாமர்த்தியசாலிகள். மேனேஜ்மென்ட் கொள்கைகள் அமெரிக்காவில் உருவானதற்காக அவற்றை ஈயடிச்சான் காப்பி அடிக்கவில்லை. அந்தக் கொள்கைகளைத் தங்கள் பாரம்பரியத்துக்கு ஏற்ப மாற்றினார்கள்.  நீங்கள் ஜப்பானியர் ஒருவரைச் சந்திக்கிறீர்கள். அவரைவிட ஒரு சில நாட்களே உங்களுக்கு அதிகம் என்றாலும், உங்கள் பெயரோடு ஸான் (Saan) என்று சேர்த்தே அவர் அழைப்பார். 'ஸான்’ என்பது நம்மூர் 'ஐயா’ போல. 

பிஸினஸிலும் இதே பண்பாட்டை ஜப்பானியர் பின்பற்றினார்கள். இதனால், தன்னைவிட வயது அதிகமானவர் கடைநிலைத் தொழிலாளியாகவே இருந்தாலும், முதலாளி அவரை மரியாதையோடு நடத்துவார்; ஸான் என்றுதான் அழைப்பார். 

கம்பெனி ஊழியர்களைப் பணியாளர்களாக நடத்தாமல், குடும்ப அங்கத்தினர்களாக உணரவைக்கும் ஜப்பான் மரபு சாதாரணச் சமாசாரமில்லை. இதை எப்படி செய்கிறார்கள்? சோனி கம்பெனி நிறுவனர் அகியோமோரிட்டாவே அதுபற்றி சொல்வதைக் கேட்போம்.

''எந்த நாட்டிலும், நிறுவனங்கள் தொடர்ந்து லாபகரமாக இயங்குவதற்கு அங்கே பணிபுரியும் ஊழியர்கள் அதிகபட்சத் திறமையுடனும் முழுமையான அர்ப்பணிப்புடனும் செயலாற்றுவது மிக அவசியம். ஜப்பானில் இதைப் பல வழிகளில் நிறைவேற்றுகிறார்கள்.

ஒருவர் சோனியிலும், பிற கம்பெனிகளிலும் வேலைக்குச் சேர்ந்தால் வாழ்நாள் முழுக்க அவருக்கு அங்கே பணி உத்தரவாதம். சோனி அலுவலகங்களில் உயர் அதிகாரிகளுக்குத் தனி அறைகள் கிடையாது. சக ஊழியர்களுடன் அமர்ந்துதான் அவர்கள் பணியாற்ற வேண்டும். உணவகத்திலும் நிர்வாகிகளுக்குத் தனி இடம் கிடையாது. எல்லோருக்கும் சமச் சீருடை என்கிற ஒரே யூனிஃபார்ம்தான்.         

தொழிற்சாலையில் ஒவ்வொரு நாளும் வேலை தொடங்கும்முன், தொழிலாளர்களின் மேலதிகாரியான  ஃபோர்மென் முந்தைய நாளின் வேலை பற்றிய அறிக்கையை அவர்களுடன் விவாதிப்பார். அன்றைய வேலை என்னவென்று விளக்குவார். அவர்களுடைய கருத்துகளைக் கேட்பார். இதற்குப் பிறகுதான் வேலை தொடங்கும். தான் ஒரு எந்திரமாக நடத்தப்படவில்லை, தன் கருத்துகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் மதிப்பு இருக்கிறது என்கிற எண்ணம் வருவதால், தொழிலாளி தன்னைக் கம்பெனியின் அங்கமாக உணருகிறான், வேலையில் தன் முழுத் திறமையையும் காட்டுகிறான்.

இவற்றால், சோனியில் மட்டுமல்ல, பெரும்பாலான ஜப்பானியக் கம்பெனிகளில் தன்னிச்சையாக ஊழியர்கள் பிற நாடுகளைவிட அதிக மணி நேரங்கள் உழைக்கிறார்கள்; தங்களுக்கு உரிமையான விடுமுறை நாட்களில்கூட வேலைக்கு வருகிறார்கள்.   

சாதாரணமாக கம்பெனிகளில் நிர்வாகிகளின் அதிகப்படி நேரம் ஊழியர்களை மேய்ப்பதிலேயே செலவாகும். சோனியில் தொழிலாளர்கள் சுய ஊக்கத்தோடு செயல்படுவதால், நிர்வாகிகளுக்கு இந்த விரய நேரம் மிச்சமாகிறது. இந்த வேளையில் அவர்கள் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல், தொழிலாளர்களின் பயிற்சி, வருங்கால வளர்ச்சி போன்ற ஆக்கப்பூர்வமான வேலைகளைச் செய்ய முடிகிறது. இப்படி ஊர் கூடித் தேர் இழுக்கும்போது கம்பெனி உச்சம் தொடுகிறது. 

தங்கள் குடும்பத்தில் இணையும் மனப்பாங்கு உள்ளவர்களை சோனி எப்படி கண்டுபிடிக்கிறது? சோனி குடும்பத்தில் ஒருவராக என்ன தகுதி வேண்டும்? படிப்பு, அனுபவம் இவை எல்லாவற்றையும்விட முக்கிய தகுதி எதிலும், எல்லாவற்றிலும் முன்னேற்றம் தரும் மாற்றங்கள் செய்ய என்னால் முடியும் என்கிற தன்னம்பிக்கை.'' 

அமெரிக்க, ஜப்பானிய மேனேஜ்மென்ட் முறைகளுக்குள் என்ன வித்தியாசம்? மோரிடா அமெரிக்க கம்பெனி அமைப்புகளைச் செங்கல் சுவருக்கும், ஜப்பானியக் கம்பெனி அமைப்புகளைக் கருங்கல் சுவருக்கும் ஒப்பிடுகிறார். 

அமெரிக்க நிர்வாக முறையில், வேலைக்குப் புதிய ஆட்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள் தெரியுமா? வேலை விளக்கம் (Job Description) என்னும் ஆவணத்தை உருவாக்குகிறார்கள். அந்த வேலையில் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன, அதை செம்மையாகச் செய்து முடிக்க என்னென்ன படிப்புத் தகுதிகள் வேண்டும், என்னென்ன குணநலன்கள் வேண்டும் என்கிற விவரங்கள் இதில் இருக்கும். வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த ஜாடிகளுக்கு ஏற்ற மூடிகள் தேர்வாகின்றன. விண்ணப்பிப்பவரின் தகுதிகள் அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும், அவர் நிராகரிக்கப்படுகிறார்.

புது ஊழியர் கம்பெனியில் ஊதிய, பதவி உயர்வுகள் பெற வேண்டுமென்றால், அவர் இந்தச் செங்கல் சுவரில் சரியாகப் பொருந்த வேண்டும். தன்னைப் பொருத்திக்கொள்வது அவர் பொறுப்பு. பொருந்தாவிட்டால் அவர் வேலையை இழப்பார். அதாவது, தனித்துவம் இருந்தால் வேலை கிடைக்காது, கிடைத்தாலும் நிலைக்காது. 

சோனியில் புதியவர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். இதற்குப் பிறகு அவர்களின் திறமைகளைக் கண்டறிந்து எந்த வேலைக்கு யாரைப் பயன்படுத்துவது என்று முடிவு செய்கிறார்கள். கற்கள் பல வடிவங்களில், சைஸ்களில் வரும். எந்த கல்லை எங்கே வைத்தால் சுவர் சீராக அமையும் என்று கண்டறிந்து சுவரை நிர்மாணிப்பது நிர்வாகத்தின் பொறுப்பு.

அமெரிக்காவில் ஊழியரின் அர்ப்பணிப்பை ஏற்படுத்துவது வேலை நிலைக்க வேண்டுமே என்கிற பயம். ஜப்பானில் அர்ப்பணிப்பை ஏற்படுத்துவது கம்பெனியோடு இருக்கும் பாசப் பிணைப்பு. பாசம் தரும் பலன்களை என்றுமே பயம் கொடுக்காது. 

ஊழியர்களுக்குள் சம்பள வித்தியாசம் அதிகமாக இருந்தால், அவர்களுக்குள் மனஇடைவெளி வந்துவிடும் என்று ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். இதனால், சோனியில் யாருக்குமே மிக அதிக ஆரம்பச் சம்பளம் தரப்படுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஊதியம் உயர்கிறது. எல்லோருக்குமே ஒரே மாதிரியான ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது. அனுபவம் அதிகரிக்க, அதிகரிக்க, ஊதியம் கூடுகிறது.

அமெரிக்க முறையிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது. அமெரிக்காவில் ஊதிய உயர்வுதான் ஊழியர்களின் அர்ப்பணிப்பைத் தூண்டும் முக்கிய உந்துதல் சக்தியாகக் கருதப்படுகிறது. ஜப்பானில் சம்பளம் இரண்டாம்பட்சம்தான். திறமையுள்ள ஊழியர்களுக்குக் கம்பெனியின் முக்கியமான, பொறுப்பான வேலைகள் தரப்படுகின்றன.

இந்த மதிப்பும் அங்கீகாரமும் சம்பள உயர்வைவிட அதிக சக்தி கொண்டவை என்பது சோனியும் ஜப்பான் தொழில் அதிபர்களும் கண்டறிந்த உண்மை. இதனால், ஜப்பானில் உயர்மட்ட நிர்வாகியின் சம்பளம் ஆரம்ப கடைநிலை ஊழியரின் சம்பளத்தைவிட  எட்டு மடங்குக்குமேல் இருப்பதில்லை.

சோனியின் வெற்றி ரகசியங்களை மட்டுமல்ல, ஜப்பானின் மேனேஜ்மென்ட் பற்றியும் தெளிவாக எடுத்துச் சொல்கிறார் அகியோ மோரிட்டா.

இன்னும் விவரங்கள் வேண்டுமானால், Made in Japan புத்தகம் படியுங்கள். நான் சிபாரிசு செய்யும் இன்னொரு நல்ல புத்தகம் Shu Shin Luh எழுதியிருக்கும் the Sony way. Secrets of the world’s most innovative electronics giant.


ஜப்பானின் மேனேஜ்மென்ட் பற்றி தெரிந்துகொள்ள நாம் சந்தித்தேயாக வேண்டிய இன்னொரு மாமனிதர், இன்னோவா, காம்ரி, கொரோலா போன்ற கார்கள் தயாரிக்கும் டொயட்டா கம்பெனித் தலைவர் கிச்சிரோ டொயெட்டா (Kiichiro Toyoda). அவரைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில்.

0 comments:

அளவுக்கும் சாதனைகளுக்கும் சம்பந்தம் இல்லை

அளவுக்கும் சாதனைகளுக்கும் சம்பந்தம் இல்லை என நிரூபிக்கும் ஒரு புத்தகமான காமன்சென்ஸ் வெளியான நாள் இன்று. அமெரிக்காவை கொலம்பஸ் முதன்முதலில் கண்டுபிடித்த பின், பல்வேறு ஐரோப்பிய நாட்டின் மக்கள் அங்கே குடியேறினார்கள். அவர்களுக்குள் சண்டையிட்டும், அந்த நாட்டின் பூர்வக் குடிகளான சிவப்பு இந்தியர்களை கொன்றும் மோதிக்கொண்டார்கள். இறுதியில் இங்கிலாந்து வென்று, ஆதிக்கம் செலுத்தியது. அவர்கள் நாட்டில் இருந்து இங்கு வந்து இங்கிலாந்தின் சட்டங்களுக்கு உட்பட்டே மக்கள் வாழ்ந்துவந்தார்கள்
. பின் பல சச்சரவுகள் இரண்டு பகுதிகளையும் சண்டைக்குள் இறக்கின. வரிவிதிப்புக்கு எதிராக கடலில் டீ தூளை கொட்டுவதெல்லாம் நடந்தது. ஆனால், பெரிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பவில்லை. அப்பொழுதுதான் தாமஸ் பெய்ன் எழுதிய காமன்சென்ஸ் நூல் வெளியானது. 48 பக்கங்களே ஆன நூலில், ‘கண்டம் நாட்டை ஆளலாம், கண்டத்தை ஒரு நாடு ஆளலாமா?’ என்கிற கேள்வியை எழுப்பியது. அந்த நூலின் கீழே நக்கலாக ஒரு ஆங்கிலேயனால் எழுதப்பட்டது என குறிப்பிட்டார் பெய்ன். அந்த நூல் அதிகாரப்பூர்வமாக ஒரு லட்சத்திற்கு மேலும் கள்ளசந்தையில் அதுபோல ஐந்து மடங்கும் விற்றும் விடுதலை வேள்விக்கு எண்ணெய் வார்த்தது. அமெரிக்கா மிகப்பெரிய ஆங்கிலேய 

0 comments:

மற்றவர்கள் புரிந்துகொள்ளாவிட்டலும் பரவாயில்லை. கனவுகளோடு ஓடி சாதிப்பது சுகமானது!’’

. மற்றவர்கள் புரிந்துகொள்ளாவிட்டலும் பரவாயில்லை. கனவுகளோடு ஓடி சாதிப்பது சுகமானத
Redhils RealEstate Agency
அமேசான்.காம் எனும் இணையத்தில் நடைபெறும் வர்த்தகத்தில் டாப் ஹீரோவாக இருக்கும் நிறுவனத்தை உருவாக்கிய ஜெஃப் பெசொஸ் பிறந்த தினம் இன்று. அப்பா க்யூபாவில் இருந்து வந்த அகதி என்றாலும், அம்மாவின் அப்பா வழியில் ஏகப்பட்ட சொத்து இருந்தது. சின்ன வயதில் இருந்தே எதையாவது துறுதுறு என்று செய்துகொண்டிருக்கும் குணம் இவரிடம் இருந்தது. தொல்லைக்கொடுக்கும் சுட்டிகளை பயமுறுத்த எலெக்ட்ரானிக் அலாரம் தயாரித்தார். எப்போதும் தாத்தாவின் கேரேஜில் ஆய்வுகள் செய்துகொண்டும், எதையாவது உருவாக்கிகொண்டும் இருப்பார். இவர் ஆசைப்பட்டது ஒரு விண்வெளி வீரனாக ஆகவேண்டும் என்றே. ஆனால், வேறு விஷயங்கள் அவருக்காக காத்திருந்தன. கல்லூரி சென்றதும் இயற்பியலில் இருந்து அவர் காதல் கணினி பக்கம் திரும்பியது. கணினி மற்றும் மின்னணு அறிவியல் துறையில் பட்டம் பெற்று வெளியே வந்தார். மிகப் பெரிய நிறுவனங்களில் வேலைப் பார்த்து லட்சக்கணக்கில் சம்பாதித்தார். இளம் வயதில் மிகப் பெரிய நிதி நிறுவனம் ஒன்றின் துணைத் தலைவர் ஆனார். அதோடு நின்று இருக்கலாம். வருடத்துக்கு 2300(?) சதவிகிதம் இணைய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை உயர்வதைப் பார்த்தார். அந்த நேரம் இணையத்தில் வர்த்தகம் செய்பவர்கள் சேவை வரி செலுத்த தேவையில்லை என அமெரிக்க  சுப்ரீம் கோர்ட் சொல்ல, வேலையை தூக்கிவீசிவிட்டு கிளம்பினார் மனிதர். இணையத்தில் புத்தகங்களை ஆர்டர் செய்தால் போதும். வீட்டுக்கே கொண்டுவந்து டெலிவரி என்பதுதான் கான்செப்ட். அதுவும் விலை குறைவாக தருவது போனஸ். ஆரம்பித்தபோது மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் ஆட்கள் இருந்தார்கள். அமோக வரவேற்ப்பு உண்டானது. சில வாடிக்கையாளர்கள் ஏன் நீங்கள் எலெக்ட்ரானிக் சாதனங்கள் விற்க கூடாது என கேட்க, அதையும் ஆரம்பித்தார். டிவிடிகளும் சேர்ந்துகொண்டன. புத்தகங்களைவிட எலெக்ட்ரானிக் சாதனங்கள் சக்கை போடு போட்டன. இப்போது ஷு, நகைகள்கூட ஆன்லைனில் விற்கப்படுகிறது. பெசாஸ் அதோடு நின்று விடவில்லை. சாதாரண மக்கள் பயணிக்கும் வகையில் விண்வெளி பயணத் திட்டத்தை ஆரம்பித்தார். அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? மூச்சை பிடித்துக்கொள்ளுங்கள் 23 பில்லியன் டாலர். எப்படி இது சாத்தியம் எனக்கேட்டபோது, ‘‘பெரிதாக கனவுகள் எனக்கு. என் கனவுகளை துரத்திக்கொண்டே இருந்தேன்... இருப்பேன். மற்றவர்கள் புரிந்துகொள்ளாவிட்டலும் பரவாயில்லை. கனவுகளோடு ஓடி சாதிப்பது சுகமானது!’’ என்றார்.

0 comments:

கம்ப்யூட்டர் துறை வேலைவாய்ப்பு - கம்ப்ளீட் கைடன்ஸ்

)
'கம்ப்யூட்டர் துறை’யை... அதிக வருமானத்தை தரக்கூடிய துறை என்றே சொல்ல வேண்டும். இதன் மூலம், இன்றைக்கு எத்தனையோ குடும்பங்களின் நிலை, பெரும் உயரத்தைத் தொட்டிருக்கிறது.

சாதாரண மளிகைக் கடைகள் தொடங்கி, பெரிய பெரிய நிறுவனங்கள் வரை எல்லா இடங்களிலும் கம்ப்யூட்டர் ராஜ்ஜியம்தான். இதில், என்னென்ன வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன... எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பது போன்ற தகவல்கள்... 
தொகுப்பு: சா.வடிவரசு
போட்டோஷாப்!
பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா நிலைகளிலும் வளைத்து வளைத்து போட்டோ எடுக்கும் பழக்கம் நம்மிடையே இருக்கிறது. கேமரா, செல்போன் என்று எதைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தாலும்... அவற்றை டெவலப் செய்து பிரின்ட் போடுவது உள்ளிட்ட பணிகளுக்காக ஸ்டூடியோ அல்லது லேப் போன்றவற்றுக்குத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. இங்கெல்லாம் பணிபுரிபவர்களுக்கு... அடிப்படை கம்ப்யூட்டர் அறிவுடன் 'போட்டோஷாப்' எனும் மென்பொருளை (சாஃப்ட்வேர்) கையாளும் திறன் பெற்றிருந்தாலே போதும் என்பதுதான் பணித்தகுதி. போட்டோஷாப் தெரிந்திருந்தால்... லேப்கள்தான் என்றில்லை, இன்னும் பல இடங்களிலும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதற்கான பயிற்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. உங்களின் திறமையைப் பொறுத்து மாதத்துக்கு பல ஆயிரங்களை இத்துறையில் சம்பாதிக்க முடியும்!

 பலன் கொடுக்கும் பிரவுஸிங்!
சொந்தமாக பிரவுஸிங் சென்டர் தொடங்குவது, கைகொடுக்கும் நல்ல தொழில். நான்கைந்து கம்ப்யூட்டர்கள் இருந்தாலே போதும்... இதை ஆரம்பித்துவிடலாம். கூடவே, பள்ளிக் குழந்தைகளுக்கான ஆக்டிவிட்டி தொடர்பான படங்கள் மற்றும் தகவல்களைத் தேடி எடுத்து, பிரின்ட் எடுத்துக் கொடுக்கும் வேலையையும் செய்யலாம். சமச்சீர் கல்வி வந்த பிறகு, இதற்கான தேவை கிராமங்களில்கூட தற்போது அதிகமாகிவிட்டது. கூடவே ஒரு ஜெராக்ஸ் மெஷினையும் வைத்துவிட்டால்... மாதத்துக்கு 4 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை சுலபமாக லாபம் பார்க்க முடியும்.

டேட்டா என்ட்ரி வேலை ரெடி!

 நிமிடத்துக்கு 30 வார்த்தைகளுக்கு மேல் டைப் செய்யத் தெரிந்திருந்தால் போதும்... பதிப்பகங்கள், டி.டி.பி மையங்கள், கல்வி நிறுவனங்கள், டேட்டா என்ட்ரி மையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இப்படிப்பட்டவர்களுக்கு டைப்பிங்கோடு சேர்த்து அடிப்படை கம்ப்யூட்டர் அறிவும் தெரிந்திருத்தல் அவசியம். மாதம் 3 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்!
அலுவலகத்திலும் அசத்தலாம்!

 அடிப்படை கம்ப்யூட்டர் அறிவுடன், மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் சாஃப்ட்வேர் பற்றி தெரிந்திருந்தாலே போதும்... மளிகை கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால், ஜவுளிக் கடை... என பல இடங்களிலும் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. கம்ப்யூட்டர் இயக்கத் தெரிதல், மைக்ரோசாஃப்ட் ஆபீஸில் உள்ள வேர்டு, எக்ஸல், பவர் பாயின்ட்.. போன்றவற்றை கையாளத் தெரிதல் போன்ற திறமைகள் இருந்தால்... சுலபமாக வேலை வாய்ப்பு கிடைத்துவிடும். மாதத்துக்கு 3 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

கம்ப்யூட்டர் சுயதொழில்!

அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு, பிரின்ட் எடுப்பது, ஸ்கேன் செய்வது போன்றவை தெரிந்திருந்தால் போதும்... சுலபமாக சுயதொழில் தொடங்கிவிடலாம். ஒன்று அல்லது இரண்டு கம்ப்யூட்டர்கள், ஒரு பிரின்ட்டர், ஒரு ஸ்கேனர் என இவற்றைக் கொண்டு... வீட்டிலோ அல்லது வாடகைக்கு அறை எடுத்தோ சொந்தமாக டி.டி.பி மையத்தைத் தொடங்கிவிடலாம். தெருவுக்கு தெரு இருக்கும் பொது தொலைபேசி மையங்களுக்கு அடுத்தபடியாக, பரவலாக இருப்பது... டி.டி.பி மையங்கள்தான். இல்லத்தரசிகள், மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் என பலருக்கும் இது கைகொடுக்கும். வெறும் 30 ஆயிரம் ரூபாய் முதலீட்டிலேயே தொடங்கிவிட முடியும். மாதம் 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை லாபம் ஈட்டமுடியும்.
பி.பி.ஓ!

 எத்தனையோ பேர் பல்வேறு காரணங்களால் தங்களின் படிப்பைத் தொடரமுடியாமல் பள்ளிப் படிப்போடு நின்றுவிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு சரியான வாய்ப்பு... பி.பி.ஓ மையங்கள். இதில் சேர்வதற்கு அடிப்படை கம்ப்யூட்டர் அறிவும், ஆங்கிலம் உள்ளிட்ட ஏதாவது இரு மொழிகளில் சரளமாக பேசும் திறமையும் இருந்தாலே போதும். ஆரம்பத்தில் சென்னை போன்ற பெரிய நகரங்களில் மட்டுமே இருந்த பி.பி.ஓ மையங்கள், இன்றைக்கு தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் செயல்பட்டு வருகின்றன. மாதம் குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் முதல் இந்த மையங்களில் சுலபமாக சம்பாதிக்க முடியும்.
பயிற்சி ஆசிரியர்!

 கம்ப்யூட்டர் துறையில் பட்டம் அல்லது டிப்ளமா படித்தவரா... கம்ப்யூட்டரில் பயிற்சி அளிக்கக்கூடிய அளவுக்குத் திறமை படைத்தவரா... உங்களுக்கு காத்திருக்கின்றன வேலைகள். உதாரணமாக, மைக்ரோசாஃப்ட் ஆப்ஸ் பற்றி தெளிவாகத் தெரிந்தவர்கள், அதைக் கற்றுக்கொடுக்கும் மையங்களில் ஆசிரியராகச் சேரலாம். சி, சி++ உள்ளிட்ட கம்ப்யூட்டர் மொழிகளில் திறமை வாய்ந்தவர்கள், அதற்கான பயிற்சி ஆசிரியராக சேரலாம். இவற்றுக்கான பயிற்சி மையங்கள் தமிழகத்தில் நிறையவே இருக்கின்றன. உங்களுடைய திறமையைப் பொறுத்து வேலையும் சம்பளமும் கிடைக்கும்!
ஐ.டி ஊழியர்!

கம்ப்யூட்டர் துறையில் பட்டம் அல்லது டிப்ளமா படித்தவர்கள்... கம்ப்யூட்டர் அறிவுடன் ஏதேனும் ஒரு கம்ப்யூட்டர் மொழி தெரிந்திருந்தால், ஐ.டி நிறுவனங்களில் 'சாஃப்ட்வேர் புரோகிராமர்’ என்கிற வேலையை எளிதில் கைப்பற்ற முடியும். இதுமட்டுமில்லாமல் டெஸ்ட்டிங், வெப்-டிசைனிங் என பல்வேறு வேலை வாய்ப்புகளும் ஐ.டி நிறுவனங்களில் இருக்கின்றன. இதற்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடத்தும் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொண்டு தேர்வாக வேண்டும். இன்றைக்கு ஐ.டி. நிறுவனங்களில் மாதம் 8 ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சங்கள் ரூபாய் வரை சம்பளம் பெறுபவர்கள் நிறையவே இருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்!
அனிமேஷன்!

தற்போது... கார்ட்டூன் படங்கள், குழந்தைகளுக்கான பாடங்கள், விளம்பர படங்கள், திரைப்பட காட்சிகள் என்று எல்லாமே அனிமேஷன் மயமாகத்தான் இருக்கின்றன. இதனால் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வீடியோ எடிட்டிங் நிறுவனங்கள் என்று பல இடங்களிலும் அனிமேஷன் தெரிந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வரிசை கட்டுகின்றன. பட்டப் படிப்போ, முதுகலை படிப்போ படித்திருக்க வேண்டும் என்பது மாதிரியான நிபந்தனைகள் எதுவும் இந்த வேலைக்கு இல்லை. அடிப்படை கம்ப்யூட்டர் அறிவுடன், அனிமேஷன் தெரிந்திருந்தாலே போதும். அனிமேஷன் கற்றுத்தரும் பயிற்சி மையங்கள் ஆங்காங்கே செயல்பட்டுவருகின்றன. 6 மாதமோ, ஒரு வருடமோதான் பயிற்சி. ஆனால், இதில் உங்களுடைய ஈடுபாட்டையும் புகுத்தினால்... இந்தத் துறையில் எளிதாகக் கலக்கலாம். சொந்தமாக அனிமேஷன் ஸ்டூடியோ தொடங்கியும் பணம் ஈட்ட முடியும்!
கம்ப்யூட்டர் சென்டர்!

 கம்ப்யூட்டர் பற்றிய அறிவு இல்லாமலேயே... கம்ப்யூட்டர் துறையில் பணம் சம்பாதிக்க வழியுண்டு. எப்படி என்கிறீர்களா? வெரிசிம்பிள், சொந்தமாக கம்ப்யூட்டர் மையம் தொடங்குங்கள்! கம்ப்யூட்டர் பற்றி நன்றாக தெரிந்தவர்களை பணியில் அமர்த்தி, அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகள், பெண்கள் என்று பலருக்கும் கம்ப்யூட்டர் பயிற்சி தரலாம். டி.டி.பி, ஜாப் டைப்பிங், பிரின்ட் போன்றவற்றையும் செய்து தரலாம். உங்களுக்கே கம்ப்யூட்டர் அறிவு இருக்கும்பட்சத்தில், கூடுதல் லாபம்தான்! ஓரிரு லட்சங்கள் முதலீடு செய்து... வீட்டிலோ அல்லது வாடகை இடத்திலோ மையத்தை ஆரம்பித்துவிடலாம். மாதம் குறைந்தது 10 ஆயிரம் ரூபாய் தொடங்கி, பல லட்சங்கள் வரை சம்பாதிக்கமுடியும். 'பயிற்சி வகுப்பு'கள் நடத்துவதென்றால், உரிய அரசுத்துறையிடம் அனுமதிபெற மறக்காதீர்கள்.

0 comments:

கரன்சி கல்லூரிகளின் தில்லுமுல்லு -

கரன்சி கல்லூரிகளின் தில்லுமுல்லு - 
)
சில தினங்களுக்கு முன், கல்வி ஆலோசகர் ஒருவரைச் சந்திக்க அவரது அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது, 1014 மதிப்பெண்கள் வாங்கிய தங்கள் மகனுடன் அவரைச் சந்திக்க வந்திருந்​தனர் கரூரைச் சேர்ந்த பெற்றோர். 'திண்டுக்கல் பக்கத்துல ஒரு காலேஜ்ல 100 சதவிகிதம் பிளேஸ்மென்ட் என்று விளம்பரம் வந்திருக்கிறது. அந்தக் காலேஜ்ல எங்க பையனை மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் சேர்க்கலாமா சார்? படிச்சு முடிச்சதும் வேலையோட வெளியில வருவான் இல்லையா?’ என்று கேட்டனர் அந்தப் பெற்றோர்.

அதற்குக் கல்வி ஆலோசகர், '100 சதவிகித பிளேஸ்மென்ட் என்பது ஏமாற்று வேலை. அது சாத்தியமே இல்லை. ஃபைனல் இயரில் 250 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால் அதில், அரியர் இல்லாமல் இருப்பவர்கள் 200 பேர் இருப்பார்கள். அந்த 200 பேரில் மேற்படிப்புத் தொடர இருப்பவர்கள் 75 பேர்தான் இருப்பார்கள். மீதி இருக்கும் 125 பேருக்கு வேலை வாங்கித் தருவார்கள். அதுவும் அவர்கள் படித்த படிப்புக்கான வேலையாக இருக்காது. சாதாரண பி.பி.ஓ. கம்பெனிகளிலோ, மார்கெட்டிங் வேலையோ 5,000 ரூபாய் சம்பளத்துக்கு வாங்கித் தருகிறார்கள். கல்லூரிகளுக்கு இதுபோன்ற வேலை​களை வாங்கித் தரும் ஏஜென்ஸிகள் ஏராளமாக உள்ளன. அவர்களிடம் அந்தப் பொறுப்​பை ஒப்படைத்து விடுகிறார்கள்.

நீங்கள் அந்தக் கல்லூரிக்குச் செல்லுங்கள். கடந்த ஆண்டு எத்தனை பேருக்கு பிளேஸ்மென்ட் கொடுத்திருக்கிறார்கள் என்பதை விசாரியுங்கள். எந்தக் கம்பெனியில் வேலை வாங்கிக்கொடுத்து இருக்கிறார்கள்? எவ்வளவு சம்பளம்? என்பதைத் தெளிவாகக் கேளுங்கள். முடிந்தால் பிளேஸ்மென்ட் ஆன மாணவர்களின் செல்போன் எண்களை  கேட்டுவாங்கி அவர்களிடமும் விசாரியுங்கள். குறைந்தது 20 ஆயிரம் சம்பளம், படிப்புக்கு ஏற்ற வேலையாக இருக்க வேண்டும். அதுமட்டும் அல்ல, கல்லூரியில் லேப் வசதி, முன்அனுபவம் மிக்க பேராசிரியர்கள் இருக்கிறார்களா என்பதும் முக்கியம். ஒவ்வொரு துறை​யின் தலைவரும் பி.ஹெச்.டி. முடித்தவராக இருக்க வேண்டும். இதை எல்லாம் விசாரித்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு அந்தக் கல்லூரியில் சேர்ப்பது பற்றி முடிவுக்கு வாருங்கள்’ என்று அறிவுரை சொல்லி அனுப்பினார். நிஜம் இதுதான்!

அடுத்த குளறுபடி கல்லூரியின் பெயரில் ஆரம்பிக்கிறது. ஒரே பெயரில் இயங்கும் கல்லூரி​கள் ஏராளமாக இருக்கின்றன. உதாரணத்துக்கு கந்தசாமி இன்ஜினீயரிங் காலேஜ் புகழ்பெற்ற  கல்லூரி என்றால், ஸ்ரீகந்தசாமி, எஸ்.கந்தசாமி என்று பத்து கல்லூரிகள் இருக்கின்றன. கவுன்சிலிங் செல்லும் மாணவர்கள், கந்தசாமியை மட்டும் மனதில் நினைத்துச் செல்வார்கள். அவர்கள் நினைக்கும் கந்தசாமிக்கு உரிய வரிசை எண்  தெரியாமல், தடுமாற்றத்தில் ஏதோ ஒரு கந்தசாமியை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை ஏற்படும்.

கவுன்சிலிங் செல்வதற்கு முன்பே எந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுக்க நினைக்கிறீர்களோ அந்தக் கல்லூரியைப் பற்றிய முழுமையானத் தகவல்களை இன்டெர்நெட்டில் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். சில கல்லூரிகள், நெட்டில் நல்ல படங்களையும் தவறான தகவல்களையும் வெளியிட்டு ஏமாற்று​வார்கள். முடிந்தவரை ஒரு முறை அந்தக் கல்லூரிக்கு நேரில் சென்று விசாரிக்க வேண்டும். கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் பற்றியும் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். சில கல்லூரிகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் இருக்கும். ஆனால், ஹாஸ்டல் ஃபீஸ், ஸ்டேஷனரி ஃபீஸ் என்று விதவிதமாக மறைமுகக் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

கவுன்சிலிங்கில் உங்களுக்கான வரிசையில் நீங்கள் காத்திருக்கும்போது, நீங்கள் எதிர்பார்த்​திருக்கும் கல்லூரியில், நீங்கள் சேர நினைக்கும் கோர்ஸில் 15 காலி இடங்கள் இருப்பதாகக் காட்டும். உங்களுக்கு முன் பத்து பேர்தான் இருப்பார்கள். நிச்சயம் நமக்கு இடம் கிடைத்து​விடும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பீர்கள். உங்கள் முறை வரும்போது அந்தக் கல்லூரியில் இடம் இல்லை என்று காட்டும். இப்படி சீட்கள் திடீரென மாயமாகும் மர்மம் என்ன?

பிரபலமான சில கல்லூரிகளில், கவுன்சிலிங்கில் சீட் முடிந்துவிட்டதாக கணக்கு
காட்டிவிட்டு, பத்து சீட்கள் வரை நிரப்பாமல் வைத்திருப்பார்கள். மெடிக்கல் சீட்டுக்கு முயற்சிசெய்து அங்கே இடம் கிடைக்காதவர்கள் மீண்டும் இந்தக் கல்லூரிகளைத்தான் தேடி வருவார்கள். அப்படி வரும்போது, இந்தப் பிரபலக் கல்லூரிகளில், இடம் இல்லை என்று டிமாண்ட் செய்வார்கள். 'ஒரே ஒரு சீட் மட்டும்தான் இருக்கு. 25 லட்சம் ஆகும்’ என்று கறாராகப் பேசுவார்கள். வேறுவழி இல்லாமல் கடைசி நேரத்தில் வரும் மாணவர்களைக் குறிவைத்தே சில பிரபல கல்லூரிகள் காத்திருக்கின்றன.

இது கடந்த ஆண்டு நடந்த சம்பவம். மத்திய   மாவட்டத்தில் இந்தக் கல்லூரிக்குத் தனி மரியாதை உண்டு.  தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இந்தக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர் படையெடுப்பர். கோவையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தன் மகனுக்கு எப்படியாவது மெடிக்கல் சீட் கிடைத்துவிடும் என்று காத்திருந்தார். அதனால், அரசுக் கல்லூரியில் சர்வ சாதாரணமாகக் கிடைத்த பொறியியல் கல்லூரி வாய்ப்புகளை எல்லாம் தவிர்த்தார். மெடிக்கல் கல்லூரியில் வாய்ப்பு கிடைக்காததால், மீண்டும் பொறியியல் கல்லூரி பக்கம் வந்தார். பொறியியல் கல்லூரிகளில் கவுன்சிலிங் முடிந்திருந்தது. அவருக்கு நெருக்கமான டாக்டர் நண்பர் மூலமாக அந்தக் கல்லூரி நிர்வாகத்தை அணுகினார். 'வாய்ப்பே இல்லை. அட்மிஷன் முடிந்துவிட்டது’ என்று பதில் வந்தது.

அடுத்த சில நாட்களில் டாக்டரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு. 'சார் நீங்க காலேஜ் அட்மிஷனுக்கு வந்துட்டுப் போனது எனக்குத் தெரியும். அந்தக் காலேஜ்ல இன்னும் இரண்டு சீட் இருக்கு. பணம் கொஞ்சம் அதிகமா எதிர்பார்க்கிறாங்க. நீங்க கூட்டிட்டு வந்த டாக்டர், மேனேஜ்மென்ட்க்கு தெரிஞ்சவர். அதனால பணம் குறைச்சலா கொடுப்பாருன்னு அப்படி சொல்லிட்டாங்க. நீங்க அவருக்குத் தெரியாம வாங்க. பேசி முடிச்சுக்கலாம். நான் எஜுகேஷன் கன்சல்டன்ஸி ஏஜென்சி நடத்துறேன். நீங்க வந்துட்டுப் போன தகவல் அந்தக் காலேஜ்ல இருக்கும் எங்க சோர்ஸ் மூலமா எனக்கு கிடைச்சுது’ என்று பேசினார் ஒரு நபர்.
டாக்டரும் சம்பந்தப்பட்ட ஏஜென்சி நபரை நேரில் சந்திக்க, '25 லட்சம் ஆகும் சார். ஓகேன்னா பேசலாம். எங்களுக்குத் தனியா 50 ஆயிரம் கொடுத்துடணும்’ என்று கேட்க, டாக்டரும் சம்மதித்திருக்கிறார். மறுநாள் பணத்துடன் வந்த டாக்டரை ஏஜென்சி நபர், ஒரு வீட்டுக்கு அழைத்துப் போயிருக்கிறார். அந்த வீட்டில் இருந்த நபர்தான் கல்லூரியின் செகரெட்டரி. பணத்தைக் கொடுத்ததும், காலண்டரில் ஒரு தேதியைக் கிழித்து, அதன் பின்பக்கத்தில் கிறுக்கிக் கொடுத்து, 'இதைக் கொண்டுபோய் காலேஜ்ல கொடுத்து அட்மிஷன் போட்டுக்கோங்க...’ என்று சொல்லி அனுப்பினாராம் அவர். 45 ஆயிரம் ரூபாயில் முடிந்திருக்க வேண்டிய அட்மிஷனுக்கு 25 லட்சம்.

விதவிதமான ஸ்டைல்களில் கொள்ளையடிக்கும் கல்லூரிகள் ஒருபக்கம் இருக்க, அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிடக் குறைவாக வசூலிக்கும் கல்லூரிகளும் இருக்கின்றன தெரியுமா?

(தில்லுமுல்லு தொடரும்)

0 comments: