read the tamil Special news and tips on Experts. Archive for 10/04/13
 .நம்ம வீடு.காம் தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

பேரழிவுக்காக எல்லாம் காத்துக்கொண்டு இருக்கத் தேவை இல்லை;



பேரழிவுக்காக எல்லாம் காத்துக்கொண்டு இருக்கத் தேவை இல்லை; இப்போதே கடலில் தீவுகள் கட்டி அரசாங்கங்களின் பிடியில் இருந்து விடுபடலாம்’ என்று சீரியஸ் முயற்சி ஒன்று நடந்துகொண்டு இருக்கிறது. இதில் முக்கியமான இடத்தை வகிப்பது Sea-steading Institute என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தின் முக்கிய ஆதரவாளராக இருப்பது பேபால் நிறுவனத்தை நிறுவிய பீட்டர் தியல் என்பதால், சமீப காலத்தில் இதற்கு டெக் மீடியா வில் அதிகக் கவனம் கொடுக்கப்படுகிறது.
 நாடுகளில் கடல் எல்லைக்குச் சற்றே தொலை வில் சுயேச்சை அதிகாரம்கொண்ட மிதக்கும் நகரங்களைக் கட்ட உதவு வதுதான் இந்த நிறுவனத்தின் நோக்கம். இப்படிக் கட்டப்படும் மிதக்கும் நகரங்களுக்கு, அவற்றுக்கு அருகில் இருக்கும் நாடுகளின் சட்டங் கள் பொருந்தாது. ஆரம்ப நாட்களில் கப்பல்கள் மாற்றி அமைக்கப்பட்டு மிதவை நகரங்களாகச் செயல்படும் என்கிறது இந்த நிறுவனத்தின் வலை தளம். ( www.seasteading.org/  )
Blueseed என்ற புதிய நிறுவனம் கரைகளுக்கு அருகே... ஆனால், நாடுகளின் சட்டம் இயங்கும் எல்லைக்கு அப்பால் கப்பல்களை நிறுத்தி, அவற்றில் தொழில்முனைவோருக்கு வாழும் மற்றும் வேலை பார்க்கும் வசதிகளைக் கொடுக்க எத்தனிக்கிறது. அவர்களது முதல் கப்பல் சான்ஃபிரான்சிஸ்கோவுக்கு அருகே நிறுத்தப்பட்டு அதில் இருந்து தேவைப்பட்டபடி சிறிய படகுகளில் சான்ஃபிரான்சிஸ்கோ நகரத்துக்கு வந்து செல்லும்படி வசதிகள் செய்து கொடுக்கப்படும். அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கான விசா வாங்க வேண்டிய அவசியம் இல்லை; அமெரிக்க அரசுக்கு வரி கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை போன்று பல 'இல்லைகள்’. தொழில் முனைவதில் ஆர்வம் இருந்தால், இந்த மிதக்கும் வசிப்பு பணியிடத்துக்கு விண்ணப்பித்துப் பாருங்கள். விவரங்கள் அறிய செல்ல வேண்டிய உரலி http://blueseed.co.
சமீபத்திய விமானப் பயணத்தின்போது விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் எனது கைப் பையில் இருக்கும் அனைத்தையும் வெளியே எடுக்கச் சொன்னார்கள். செல்போன், டேப்ளட், கிண்டில், ப்ளூடூத் ஹெட்செட், உதிரி பேட்டரிகள், கேமரா, கையளவு கேம்கார்டர் என மின்னணுக் காயலான் கடையே இருந்தது. நாம் பயன்படுத்தும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, நம்மைச் சுற்றி இருக்கும் மின் காந்த மாசின் (Electro Magnetic Pollution) அளவும் அதிகரித்தபடியே இருக்கிறது. இந்தச் சாதனங்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சைக் குறைக்க முயலும் தொழில்நுட்பங்களால் அதிகமான கேடுதான் என்கிறது உலக சுகாதார அமைப்பின் வலைதளம். இந்தப் பிரிவில் இருக்கும் தொழில்நுட்பங்கள் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை கூகுள் துணையுடன் ஒரு வார இறுதியில் அலசினேன். Organism எனப்படும் உயிர் இருக்கும் ஜீவிகள் அனைத்துக்குமே அவற்றைச் சுற்றி உயிர்ப்புலம் (Biofield) என்பது இருக்கிறது. இந்த உயிர்ப்புலத்தின் அதிர்வெண் ணுக்கு (frequency) நிகராக அதிர்வலைகளை உண்டாக்கி, அதன் மூலம் உடலுக்கு மின்காந்த மாசின் பாதிப்பைக் குறைப்பதாகச் சொல்லப்படும் q-link சாதனத்தை ஆர்டர் செய்திருக்கிறேன். அமேசான் டாட் காமின் பயனீட்டாளர்கள் பலர் சொல்வதைப் பார்த்தால், மொபைல் சாதனங்களின் பயனீடு அதிகரித்தபடி இருக்கும் இந்தக் காலத்துக்குத் தேவையான ஒன்றுதான் அது. q-link அல்லது அது போன்றவற்றைப் பயன்படுத்தி இருந்தால், உங்கள் அனுபவத்தை @antonprakash-க்கு ட்வீட் செய்யுங்கள்.
தங்களுடைய முகத்தைப் பயன்படுத்தி கங்ணம் ஸ்டைல் வீடியோ தயாரித்து அனுப்பிய அனைவருக்கும் நன்றி. விரைவில் வெற்றி பெற்ற வீடியோவைப் பகிர்கிறேன்.
- விழிப்போம்...

0 comments:

மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ?

நரேந்திர தாமோதர் தாஸ் மோடி, பிரதமர் வேட்பாளர்தானா... அல்லது பிரதமரே ஆகிவிட்டாரா என்ற சந்தேகத்தை உண்டாக்குகிறது, இந்தியா முழுக்க அலையடிக்கும் 'மோடி மேனியா’!
  2004-ல் 'இந்தியா ஒளிர்கிறது’ என்பதை முன்வைத்து தேர்தலை எதிர்கொண்ட பாரதிய ஜனதா கட்சி, இப்போது 'துடிப்பான குஜராத்’ (Vibrant Gujarat) என்ற முழக்கத்துடன் நரேந்திர மோடி என்கிற ஒற்றை மனிதரை காங்கிரஸுக்கு எதிராக நிறுத்தியிருக்கிறது. ஒரு பக்கம், 'இனப் படுகொலைக் குற்றவாளி’ என்ற ரத்தக்கறை மோடி மீது படிந்திருக்கும் நிலையில், மறுபக்கம் அவர்தான் இந்திய இளைஞர்களின் புதிய நம்பிக்கையாகவும் கொண்டாடப்படுகிறார். எதை நம்புவது..? மோடியின் சாதனைகள்... மோடி மீதான விமர்சனங்கள் என இரு துருவ விவாதங்களை இங்கே அலசலாம்...
''மோடி... வளர்ச்சியின் முகம்!''
நரேந்திர மோடி குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்த என்னவெல்லாம் செய்திருக்கிறார்? அவர் மீதான விமர்சனங்களுக்குப் பதில் என்ன?..  பட்டியலிடுகிறார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான வானதி சீனிவாசன்.
''காற்றாலை மின்சாரம், கடல் அலையில் இருந்து மின்சாரம், சூரிய மின்சாரம்... என குஜராத்தில் திட்டமிடப்பட்டுள்ள மாற்று வழி மின் தயாரிப்புத் திட்டங்களும், அங்குள்ள மரபுசார்ந்த மின் உற்பத்தித் திட்டங்களும் மொத்தமாக அமலுக்கு வரும்போது, இந்தியாவின் மொத்த மின் தேவையில் 35 சதவிகிதத்தை குஜராத் மாநிலம் மட்டுமே பூர்த்தி செய்யும். குறிப்பாக, நர்மதா நதிக் கால்வாய் மேல் 458 கி.மீ. நீளத்துக்கு சூரிய மின் தகடுகள் பதிக்கப்பட்டு சூரிய மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம், கால்வாய் நீர் ஆவியாவது தடுக்கப்படுவதோடு, அசுத்தமாகாமலும் காப்பாற்றப்படுகிறது. இந்த வளர்ச்சியைத்தான் நாங்கள் மொத்த இந்தியாவுக்கும் கொண்டுவருவோம் என்கிறோம்.
ஓர் அரசு, லாபத்தை மட்டுமே பார்க்கக் கூடாது என்கிறார்கள். இதை நான் ஏற்கிறேன். ஆனால் தனது துறைகளில் லாபம் ஈட்டும்படி அரசு இயங்கினால்தானே, மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி கிடைக்கும்? கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தின் வளர்ச்சியை வேறு எந்த மாநிலத்துடன் ஒப்பிட்டாலும் உயர்வானதுதான். 'வளர்ச்சி’ என்று வரும்போது மற்றவர்களுக்கு ஓர் அளவுகோலும், குஜராத்துக்கு ஓர் அளவுகோலும் வைப்பது எதனால்? குஜராத்தின் வளர்ச்சியை நாங்கள் பேசும்போது எல்லாம், உடனே 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறைகள் குறித்து திரும்பத் திரும்பப் பேசுகின்றனர். எனில், முந்தைய காங்கிரஸ் ஆட்சிகளின்போது நடைபெற்ற வன்முறைகளில் இருந்து இதைத் தொடங்க வேண்டும்.
எனக்கு ஒரு விஷயத்தை மட்டும் சொல்லுங்கள்... குஜராத்தில் நல்ல சாராயமும் இல்லை; கள்ளச் சாராயமும் இல்லை. பூரண மதுவிலக்கை ஏற்றுக்கொண்டு, அதன் மூலம் வரும் பாவப் பணத்தை மறுத்து ஆட்சி நடத்தும் மோடியின் ஆட்சி எப்படி மக்களுக்கு நன்மையற்றதாக இருக்கும்?''
ஆனால், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள், பிரசவ மரணங்கள், ஆண்-பெண் விகிதாசாரம், வறுமைக்கோட்டுக்கு கீழ் ஏராளமாக உள்ள மக்கள்... போன்ற அடிப்படை விஷயங்களில் குஜராத் இன்னும் பின்தங்கியே இருக்கிறதே?''
'' 'மோடி ஏன் 98 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார்... 100 ரன்கள் ஏன் அடிக்கவில்லை?’ என்று கேட்பதைப் போல இருக்கிறது இது. மோடி கடந்த 10 ஆண்டுகளாகத்தான் குஜராத்தை ஆட்சி செய்கிறார். இந்தக் குறுகியகால இடைவெளியில் அவர் செய்துள்ள சாதனைகளைத்தான் நாங்கள் பிரசாரம் செய்ய முடியும். ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் குஜராத்தில் அதிகம் உள்ளனர் என்பதை எங்களுக்கு எதிரான பிரசாரமாகப் பேசுகிறார்கள். ஆனால், குஜராத்தின் பெரும்பகுதி மக்கள் சைவ உணவு உண்பவர்கள். சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு புரதச் சத்து மற்றும் இரும்புச் சத்துக் குறைபாடு இருப்பது இயல்பு. இதை மாற்ற, அரசு பல திட்டங்களைத் தீட்டியுள்ளது என்றபோதிலும், இது சமூகத்தின் உணவுப் பழக்கத்துடன் தொடர்புடையது!''
  ''உலகிலேயே குஜராத்தில்தான் அதிகளவு வாடகைத் தாய்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆண்டுக்கு சராசரியாக, 30 ஆயிரம் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள். இதன் மூலம் குஜராத்துக்கு வருடத்துக்கு 1,000 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. பெண்களின் கர்ப்பப் பையை வாடகைக்கு விடுவதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?''
''வாடகைத் தாய்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்தமாக இந்தியா முழுக்கவே அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இதை ஏன் நீங்கள் அந்நியச் செலாவணியுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்? வேறு ஏதோ ஒரு மாநிலத்தில் வாடகைத் தாய்க்குக் கொடுக்கப்படும் பணமும் அந்நியச் செலாவணிக் கணக்கில்தான் வரும். வாடகைத் தாய் முறையை மத்திய அரசு அனுமதித்துள்ளதால்தான், அது நடைபெறுகிறது என்பதையும் நீங்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.''
''2002-ம் ஆண்டு குஜராத் இனப் படுகொலைகளில் மோடிக்கு உள்ள தொடர்பையும் மறுப்பீர்களா?''
''2002-ம் ஆண்டு நடந்த வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை, '2000... 3000’ என்றெல்லாம் மீண்டும் மீண்டும் பொய்யாகத் திரித்துக் கூறப்படுகிறது. ஆனால், கணக்கெடுப்பின்படி அந்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 856 பேர்தான். இதில் 254 பேர் இந்துக்கள். ஆக, இறந்த அனைவருமே இஸ்லாமியர்கள் அல்ல. இந்த உண்மைகளை மறைத்துவிட்டு நரேந்திர மோடிதான் அந்த வன்முறைகளை முன்னின்று நடத்தினார் என்று சொல்வது பொய்ப் பிரசாரம். அந்தச் சம்பவத்துக்கும் பா.ஜ.க-வுக்கும் மோடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!''
மோடி பிம்பம்... அத்தனையும்  இட்டுக்கட்டிய பொய்கள்!''
நரேந்திர மோடிக்கு எதிராக தொடர்ந்து பிரசாரம் செய்துவருகிறது கம்யூனிஸ்ட் அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகம். இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மருதையனிடம் பேசினேன்...
''மோடி, பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளர். நீங்களோ, அவரை 'கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆள்’ என்கிறீர்கள். எப்படி?
''அண்மையில், இந்தியாவின் டாப்-100 நிறுவனங்களின் சி.இ.ஓ-களிடம், 'எக்கனாமிக் டைம்ஸ்’ ஒரு சர்வே நடத்தியபோது, 'இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும்?’ என்ற கேள்வியை முன்வைத்தது. டாடா, அம்பானி, பிர்லா, மிட்டல், அடானி... உள்ளிட்ட பெரும் முதலாளிகள்தான் அந்த சர்வேயில் பங்குகொண்டவர்கள். அவர்களில் 74 சதவிகிதம் பேர் மோடி பிரதமராக வேண்டும் என்றே விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். ராகுல்காந்தி உள்ளிட்டோருக்கு சேர்த்து 26 சதவிகிதம்தான்.
ஏன் அவர்கள் மோடியை விரும்புகின்றனர்? ஏனென்றால், மோடி குஜராத்தில் சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் நிலத்தை, விவசாயிகளிடம் இருந்தும், மீனவர்களிடம் இருந்தும் பிடுங்கி, இந்தப் பெரிய நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்திருக்கிறார். பல்லாயிரம் கோடி சலுகைகளை வரைமுறையின்றி வாரி வழங்கி இருக்கிறார். மோடி, மொத்த இந்தியாவுக்கும் பிரதமராக வந்தால் இந்தச் சுரண்டலை நாடு தழுவிய அளவில் செயல்படுத்தலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மோடியை மாற்றத்தின் நாயகனாக அவர்கள் முன்னிறுத்துவதன் பின்னுள்ள அரசியல் இதுதான். மன்மோகன் சிங்கும் கார்ப்பரேட்டுகளுக்கு விசுவாசமானவர்தான் என்றபோதிலும், அவர் இப்போது செல்லாக் காசாகிவிட்டார். அந்தப் படம் இப்போது ஓடாது. ஆகவேதான் 'மோடி’ என்கிற புதிய ஹீரோவைக் களம் இறக்குகிறார்கள் கார்ப்பரேட்டுகள்.
மோடி எப்படிப்பட்டவர் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். டாடா நானோ தொழிற்சாலையை மேற்கு வங்கத்தில் இருந்து குஜராத்துக்கு அழைத்து வந்ததைப் பற்றி மோடி குறிப்பிடும்போது, 'பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டை வெறும் ஒரு ரூபாய் செலவில் அழைத்து வந்தேன்’ என்பார். அதாவது, இவர் டாடாவுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினார். அவர் குஜராத் வந்துவிட்டார். அந்த 'ஒரு ரூபாய் செலவின்’ உண்மை முகம் என்ன? 1,100 ஏக்கர் நிலத்தை சந்தை விலையைவிட 100 மடங்கு குறைவான விலையில் டாடாவுக்குக் கொடுத்தார் மோடி. 2,900 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டுக்கு 9,570 கோடி ரூபாய் கடன் கொடுத்தார். அதற்கு வெறும் 0.1 சதவிகிதம்தான் வட்டி. கடனை 20 ஆண்டுகள் கழித்து திருப்பிச் செலுத்தினால் போதும். இது எந்த ஊரிலாவது நடக்குமா? மோடி பிரதமராவதில் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷி போன்ற பா.ஜ.க. தலைவர்களிடம் மாற்றுக் கருத்து இருக்கிறது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களோ ஒருமித்த குரலில் மோடியை ஆதரிக்கின்றன.
அதேபோல, வெளிநாட்டு முதலீடுகள் குஜராத்தில் அதிகம் என்ற சித்திரம், திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. ஏனெனில், மற்ற மாநிலங்களில் பெயரளவுக்கு உள்ள சம்பிரதாயங்கள்கூட குஜராத்தில் கிடையாது. '1000 கோடி ரூபாய் கான்ட்ராக்ட்டை ஆன்லைனிலேயே முடித்தோம்’ என்று அவர்கள் பெருமையுடன் சொல்வது இதைத்தான். இப்படிப்பட்ட மாநிலத்தை எந்த முதலாளிக்குத்தான் பிடிக்காது? சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Special Economic Zones) இந்தியாவில் இருப்பது நமக்குத் தெரியும். குஜராத்தில் மட்டும்தான், சிறப்பு முதலீட்டு மண்டலங்கள் (Special Investment Zones)இருக்கின்றன. அதுபோலவே, மோடியை 'சிறந்த நிர்வாகி’ என்கிறார்கள். இந்தியாவின் எந்த மாநிலத்திலாவது ஐ.ஜி., டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் சிறைக்குள் இருக்கிறார்களா? ஆனால், குஜராத்தில் 32 பேர் இருக்கிறார்கள். அனைவரும் 2002 -ம் ஆண்டு குஜராத் இனப் படுகொலைகளைத் தொடர்ந்து நடத்தப்பட்ட போலி மோதல் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள். இத்தனை அதிகாரிகளே சிறையில் இருந்தால், அப்புறம் அது என்ன சிறந்த நிர்வாகம்?''
''குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து என்ன சொல்வீர்கள்?''
''மோடியின் வளர்ச்சியைப் பற்றிப் பேசுபவர்களுக்கு புள்ளிவிவரங்கள் குறித்து அக்கறை இல்லை. அவர்கள் துணிந்து பொய்களைப் பரப்புகின்றனர். அல்லது 'மின்சார உற்பத்தியில் குஜராத் தன்னிறைவு பெற்றுவிட்டது’ என்கிறார்கள். 'என்ன விலை கொடுத்தாலும் தங்கு தடையற்ற மின்சாரம் வேண்டும்’ என்பது எந்த வர்க்கத்தின் கோரிக்கை? அது செலவு செய்ய முடிபவர்களின் குரல். பெரும்பான்மை மக்களின் நலன்களைப் புறக்கணித்து, சில நூறு முதலாளிகள் மட்டுமே லாபம் அடைவதற்குப் பெயர் 'வளர்ச்சி’ அல்ல. லாபத்தை மட்டுமே அளவுகோலாகக் கருத, மோடி நடத்துவது மளிகைக்கடையும் அல்ல!''
''புள்ளிவிவரங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். மோடிக்கு என இந்தியா முழுக்க ஒரு இமேஜ் உருவாகியிருப்பது பொய் இல்லை. அதற்கு உங்கள் பதில் என்ன?''
''மோடியைச் சுற்றி எழுப்பப்படும் இந்த பிம்பம் எதேச்சையாக வந்தது அல்ல. அமெரிக்காவில் உள்ள ஆப்கோ வேர்ல்டு வைடு (Apco World wide)என்ற மக்கள் தொடர்பு நிறுவனம், மோடியைப் பிரபலப்படுத்தும் வேலையைச் செய்கிறது. இன்று மோடி ஒரு பெரிய பிராண்ட் ஆக நிறுவப்பட்டிருப்பதன் பின்னே, இந்த நிறுவனத்தின் 'லாபி’ உள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை குஜராத்தை நோக்கி ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள 'துடிப்பான குஜராத்’ (Vibrant Gujarat) என்ற திட்டத்தை, உலகளவில் மார்க்கெட் செய்வது இந்த நிறுவனம்தான். ஊடகச் செய்திகள், வெளிநாட்டு முதலாளிகள் மற்றும் தூதுவர்களின் குஜராத் வருகை எல்லாவற்றுக்கும் பின்னால், இந்த நிறுவனத்தின் லாபி இருக்கிறது. மோடி எப்படி ஆடை அணிய வேண்டும்? எப்படிப் பேச வேண்டும்?.. என்பன ஒரு திரைக்கதையைப் போல முன்பே தயாரிக்கப்படுகிறது. மன்மோகன் சிங்கை UNDERACHIEVER என்று வர்ணித்த அமெரிக்காவின் 'டைம்’ பத்திரிகை, மோடியை MODI MEANS BUSINESS என்று அட்டைப் படத்தில் வெளியிட்டது. இவற்றை இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, நரேந்திர மோடி பற்றி இன்று உருவாக்கப்பட்டுள்ள பிம்பம் அசலானது அல்ல. அது ஒரு பொய்த் தோற்றம்; அது ஒரு மோசடி!''
''சரி... உங்களைப் போன்றோரின் பிரசாரங்களையும் மீறி மோடி பிரதமர் ஆகிவிட்டால்..?''
''எந்தக் காரணத்தால் மோடி குஜராத்தில் வெற்றி பெற்றாரோ, அதே காரணத்தால் அவரால் இந்தியாவில் வெற்றிபெற முடியாது. இந்து மதவெறி, முஸ்லீம் எதிர்ப்பு... என்ற அவரது குஜராத் ஃபார்முலா, தேசிய அளவில் உதவாது. 'மோடி மேனியா’ என்பது, நகர்ப்புற நடுத்தர வர்க்கத்திடம் மட்டும்தான் இருக்கிறது. நகர்ப்புற உழைக்கும் வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களிடம் இது எடுபடவில்லை. ஆக, தனிப் பெரும்பான்மை என்பதை பா.ஜ.க-வால் கனவிலும் நினைக்க முடியாது. கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்றால், அதற்கு நரேந்திர மோடிதான் வில்லன். ஆகவே, மோடியின் பிரதமர் கனவு நிறைவேறும் வாய்ப்பு மிகவும் குறைவு. இது நிறைவேற வேண்டுமெனில், மிகக் கேவலமான சந்தர்ப்பவாதிகளாக மற்ற அரசியல் கட்சிகள் மாற வேண்டும். அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் சொல்ல முடியாது!''

ஆதாரம்!
நரேந்திர மோடியின் 'மைனஸ்’ குறித்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் அரசின் பல்வேறு துறைகளின் அதிகாரபூர்வமான அறிவிப்புகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. அவருடைய 'ப்ளஸ்’ குறித்த புள்ளிவிவரங்கள் அனைத்தும், பா.ஜ.க-வின் வானதி சீனிவாசன் நம்மிடம் கூறியவையே.
இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் ரகுராம் ராஜன், இதற்கு முன் பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தார். அப்போது ரகுராம் ராஜன் தலைமையிலான நிபுணர்கள் குழு, இந்திய மாநிலங்களின் வளர்ச்சிகுறித்து ஆய்வு செய்தது. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்தக் குழுவின் அறிக்கையில், வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் பட்டியலில்... கோவா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், மஹாராஷ்டிரா, உத்தர்காண்ட், அரியானா... ஆகிய ஏழு மாநிலங்கள் உள்ளன. மிகவும் பின் தங்கிய மாநிலங்களின் பட்டியலில் பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்கள் உள்ளன. பின்தங்கிய மாநிலங்களில் மேற்கு வங்கம், மணிப்பூர், நாகாலாந்து ஆகியவற்றோடு குஜராத்தும் இடம் பிடித்துள்ளது!

0 comments:

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்!’  
என் மடியில் இப்போது ஒரு பைபிள் இருக்கிறது. பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் அடங்கிய எபிரேயு கிரேக்கு என்னும் மூல பாஷையிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆனால், இது அக்காவின் பைபிள். முன் அட்டையில் எஸ்.எஸ்தர் என்று தமிழில் மை பேனாவை வைத்து எழுதிவைத்திருக்கிறாள்.
'நீ செய்த பாவங்கள் ஒவ்வொன்றும் என் காதுக்கு வரும்போது உன் போட்டோ ஒன்றை எடுத்து இந்த பைபிளுக்குள் வைத்துக் கண்ணீர் மல்க ஜெபிப்பேன். கர்த்தர் கருணையானவர் என்று எனக்குத் தெரியும். ஆனால், உன் விஷயத்தில் அவர் கொஞ்சம் கூடுதல் கருணை காட்டவேண்டிய அவசியம். ஆகையால் கண்ணீர் மல்க ஜெபிப்பேன். என் ஜெபம் வலிமையானது. அது உன்னை ஒவ்வொரு முறையும் சிலுவையில் அறைந்துவிடாமல் காப்பாற்றியிருக்கிறது. ஒருநாள் நீ பைபிள் வாசிப்பாய். அப்போது ஜெபத்தைக் காட்டிலும் பைபிள் வலிமையானது என்று புரியும்!’ - இது அடிக்கடி அக்கா சொல்வது.
'நான் உன்னைத் தண்டிக்கப்போவதில்லை. உன்னை தண்டிக்கும் உடல் வலிமையும் எனக்கு இருப்பதாக நான் நம்பவில்லை. என்றாவது ஒருநாள் யதேச்சையாக உன் கையில் ஒரு பைபிள் கிடைக்கும். அப்படி அது கிடைக்கும்போது அதை நீ வாசிக்கக்கூட வேண்டாம். சும்மா தொட்டாலே போதும். நீ மிகவும் தண்டிக்கப்பட்டதாக நான் உணர்ந்து திருப்தி அடைவேன்! - இப்படி திருநெல்வேலி ஆவினில் வைத்து வலுக்கட்டாயமாக ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்தபடி சொன்ன ஆபிரஹாம் அப்படியே அன்று முதல் காணாமல் போய் விட்டான்.
அப்படிப்பட்ட பைபிள்தான் இப்போது என் மடியில்  இருக்கிறது. கட்டாயம் பைபிள் படிக்க வேண்டிய அல்லது படித்திருக்க வேண்டிய கிறிஸ்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவன் இல்லை நான். அப்பா செவ்வாய், வெள்ளிகளில் பேய், பிசாசு ஓட்டும் உச்சினிமாகாளி அம்மன் கொண்டாடி. அம்மாவோ எப்போதும் சிவப்புச் சேலை அணிந்தபடி திரியும் ஆதிபராசக்தி. ஆகவே, அம்மா - அப்பாவுக்கும் ஜெருசலேமுக்கும், அம்மா - அப்பாவுக்கும் ஏசுவுக்கும், அம்மா - அப்பாவுக்கும் பைபிளுக்கும், எந்தச் சம்பந்தமும் எப்போதும் இருந்ததில்லை. புதுக்கோட்டை கிறிஸ்துவப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த அக்கா தான் யாருக்கும் தெரியாமல் ஒருநாள் கர்த்தரை வீட்டுக்குக் கூட்டிவந்தவள். அக்காதான் பைபிளைக் கொண்டுவந்தவள். யாருக்கும் தெரியாமல் கர்த்தர் எங்கள் வீட்டுக்குள் இருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியும்போது, முருகம்மாளாகிய அக்கா எஸ்.எஸ்தராக மாறியிருந்தாள்.
பரிசுத்த வேதாகமம்’ எனப்படும் இந்த பைபிளின் பக்கங்களுக்கு இடையே நாங்கள் பலப் பல வேண்டுதல்களை எழுதிவைத்திருப்போம். 'என்னை இன்னும் கொஞ்சோண்டு வளத்தியாக்கும் ஆண்டவரே’ என்று பெரியமாரி எழுதிவைத்திருந்தால், முத்துக்குமார் 'சிவகாமி டீச்சருக்குக் காய்ச்சல் வர வேண்டும்’ என்று எழுதியிருப்பான். வள்ளிக்கு எழுதத் தெரியாது. அவள் பைபிளில், 'உம் ரத்தத்தால் என்னைக் கழுவி, கறுப்பான என்னைச் சிவப்பாக்கும் ஆண்டவரே’ என்று என்னைத்தான் எழுதித் தரச் சொல்வாள். மூர்த்தி பைபிள் முழுக்க முடியில்லா மொட்டை பொம்மைகளை வரைந்து வைத்திருப்பான். 'இன்று மட்டும் அடி கிடைக்காமல் காப்பாற்றும் ஆண்டவரே’ என்பதையே தினமும் எழுதிவைத்துவிட்டு, ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தவறு செய்கிறவனாகத்தான் நான் இருந்தேன். 'ஆண்டவரே சாத்தானின் கைக்குழந்தையாக இருக்கும் என் கடைசித் தம்பி, இன்று தெரிந்து செய்த பாவங்களையும் தெரியாமல் செய்த பாவங்களையும் மன்னிப்பீராக’ என்று நடு இரவில் அக்கா எனக்காக என் தலைமாட்டில் பைபிளை வைத்து, எனக்குத் தெரியாமல் செய்கிற ஜெபம் எல்லாம் எனக்குப் பிடித்தமானவைதான்.
அக்காவுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அவள் யாருக்காக ஜெபித்தாலும் அவர்கள் பெயரையோ அல்லது அவர்களின் புகைப்படத்தையோ அவர்களின் பிரச்னைக்குத் தகுந்தவாறான அதிகாரத்தில் வைத்தபடி ஜெபிப்பாள். என் புகைப்படத்தை 23-வது சங்கீதத்தில் வைத்திருக்கிறாள். அந்தப் புகைப்படம் நான் முதன்முதலில் கருங்குளம் பள்ளியில் ஆறாவது படிக்கும்போது பஸ் பாஸுக்காக எடுத்த புகைப்படம். எண்ணெய் தேய்த்துத் தலை வாரி, நெற்றியில் திருநீறு பூசியிருக்கிறேன். நல்லவேளை இந்தப் புகைப்படத்தில் இருக்கும்போது நான் எந்தப் பாவமும் செய்ததாக இப்போது என் நினைவில் இல்லை. கொஞ்சம் சில்லறைத் திருட்டுகள் இருக்கலாம், அவ்வளவுதான்.
நாளாகமத்தின் அதிகாரம் ஒன்றில் எதையுமே அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும் தம்பி ராமமூர்த்தி பெயர், நீதிமொழிகள் ஐந்தாவது அதிகாரத்தில் அண்ணன் சிவா பெயர், ஏசாயா 49-வது அதிகாரத்தில் அம்மாவின் பெயரையும் அப்பாவின் பெயரையும் எழுதிவைத்திருந்தவள், அதிகம் கோபப்படக் கூடியவனாக இருக்கிற சின்ன அண்ணன் மாரி ராஜாவின் பெயருக்குப் பதிலாக அவனுடைய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கணக்குப் புத்தகத்தை நீதிமொழிகள் 14-ல் வைத்திருக்கிறாள்.
'புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள். புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.’ இது யதேச்சையாக நடந்ததா, அல்லது அக்கா திட்டமிட்டுச் செய்தாளா என்று எனக்குத் தெரியவில்லை. கர்த்தரிடம் அண்ணனின் வங்கிக் கணக்கு வழக்குகளை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் அக்கா காட்டுவது யதேச்சையானதாக எனக்குப்படவில்லை.
இப்படி எங்கள் எல்லாருடைய பெயர்களையும் பைபிளில் அக்கா இன்னும் எழுதிவைத்துக்கொண்டுஇருப்பதில் எனக்கு ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ இல்லை. ஏனெனில், வீட்டில் தினமும் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் எங்கள் பெயர்கள் வெவ்வேறு அதிகாரங்களுக்கும், சங்கீதங்களுக்கும், நீதிமொழிகளுக்கும் மாறும். நான் வீட்டில் எப்போதும் இல்லாத ஒரு ஆளாகிவிட்டதால் எனது புகைப்படம் ஒரே அதிகாரத்தில் அதிக நாட்கள் இருக்கின்றன. ஆனால், சிவா அண்ணன் பெயர் வாரத்துக்கு ஒரு முறை வசனம் மாறுவதாக மூர்த்தி சொல்லுவான். அக்காவுடன் திருமணம் ஆகி ஆறு மாதமே ஆனாலும், அத்தான் செந்தில் பெயர் கூட ஒரே நாளில் மூன்று நான்கு அதிகாரங்களுக்கு மாறும் என்பது எனக்குத் தெரிந்ததுதான். ஆனால், நாங்கள் எல்லாரும் எப்போதோ வசனத்தில் இருப்பதுதான்,,,,

0 comments:

புகழுக்குத் தகுதியானவன்!

ஐ.பி.எல். போட்டிகளில் அந்தந்த மாநில மக்களுக்குத் தங்கள் மாநிலத்துக்கு விளையாடும் வீரர்களைத்தான் பிடிக்கும். ஆனால், எல்லா மாநில மக்களுக்கும் பிடித்த வீரர்... கிறிஸ் கெய்ல். காரணம், கெய்லின் அதிரடி பேட்டிங். புனே வாரியர் அணிக்கு எதிராக 17 பந்துகளில் 50 ரன், 30 பந்துகளில் 100 ரன், 20/20 கிரிக்கெட்டில் இதுவரை யாரும் எட்டாத உச்சபட்சமாக 175 ரன்கள் என கிறிஸ் கெய்ல் அன்று ஆடியதெல்லாம் இதுவரை கிரிக்கெட் ரசிகர்கள் பார்க்காத ருத்ரதாண்டவம். பவுலர்கள், ஃபீல்டர்கள், ரசிகர்கள், சியர்கேர்ள்ஸ் என அனைவரையுமே சிக்ஸர், பவுண்டரி மழையால் டயர்டாக்கிவிட்டார் கிறிஸ் கெய்ல். ஒரே போட்டியில் மூன்று உலக சாதனைகளைச் சாத்தியப்படுத்திய கெய்ல் பற்றிய டிட்பிட்ஸ் இங்கே...
  கிறிஸ்டோபர் ஹென்றி கெய்ல் என்பதே முழுப் பெயர். கெய்ல் என்றால், 'புகழுக்குத் தகுதியானவன்’ என்று அர்த்தம். ரைட்டு விடு!
 கெய்ல் எதிலுமே வித்தியாசமானவர். இடது கை பேட்ஸ்மேன். ஆனால், வலது கை பவுலர். 1999-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில்தான் அறிமுகமானார் கெய்ல். டெஸ்ட் போட்டியில் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த உலக சாதனைக்குச் சொந்தக்காரர்.  
 6 அடி 3 அங்குல உயரம். 98 கிலோ எடை. அவ்வளவு உயரத்தில், அவ்வளவு பவரோடு அடிப்பதால் பந்துகள் மைதானத்தைத் தாண்டிப் பறக்கின்றன. கிறிஸ் கெய்ல் அதிகபட்சம் 126 மீட்டர் தூரம் பந்தைப் பறக்கவிட்டிருக்கிறார். அதிகபட்ச வேகம், மணிக்கு 173 கி.மீ.  
 ''சின்ன வயதில் மூங்கில் மட்டையைப் பேட்டாகவும், தேங்காயைப் பந்தாகவும் வைத்து விளையாடுவாராம்.  முழுத் தேங்காய்களையே சிதறடித்தவனுக்குப் பந்தைப் பறக்கவிடுவது லாலிபாப் விஷயம்தான்'' என்கிறார் அவரது தந்தை. கெய்லுக்கு இரண்டு சகோதரர்கள். மூத்த சகோதரருடன் இணைந்து 'டியூட்டி ஃப்ரைடேஸ்’ என்னும் பொழுதுபோக்கு நிறுவனம் நடத்திவருகிறார்.
 மைதானத்தில் அதிரடி ஆட்டம் ஆடும் கிறிஸ் கெய்லைப் போன்று கூலான மனிதரைப் பார்க்க முடியாது. எப்போதும் சிரிப்பு, ஆட்டம் எனக் கலகலப்பாக இருப்பார். 'மர்மர்’ என்னும் இதய வால்வு நோயால் பாதிக்கப்பட்ட போதும் உற்சாகம் இழக்கவில்லை. 2005-ல் ஆஸ்திரேலியாவில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ''இந்த வாழ்க்கை கடவுள் கொடுத்தது. அதனால், ரசித்து வாழ்கிறேன். எனக்கு யார் மீதும் எப்போதும் கோபம் கிடையாது... வராது. இனிமேல் எப்போதும் கோபப்பட மாட்டேன்'' என்றார் கிறிஸ் கெய்ல் அறுவை சிகிச்சைக்குப் பின்.
 மனிதாபிமானி.. சென்ற ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரில் கெய்ல் அடித்த சிக்ஸர் ஒன்று 11 வயதுப் பெண் குழந்தையின் மூக்கில் பட்டு, மூக்கை உடைத்துவிட்டது. மேட்ச் முடிந்த பின் அதைப் பற்றிக் கேள்விப்பட்ட கெய்ல், மருத்துவமனைக்குச் சென்று அந்தக் குழந்தையை நலம் விசாரித்ததுடன், அன்றைய போட்டியில் தான் வென்ற 'ஆட்ட நாயகன்’ பதக்கத்தை அவளுக்கே பரிசாகக் கொடுத்தார்.
 மேற்கு இந்தியத் தீவுகள் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, ஒன்றரை ஆண்டுகள் விளையாடாமல் இருந்தார். அவர் இல்லாத காலகட்டத்தில் 47 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, வெறும் 14 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. வேறு வழியில்லாமல் கிறிஸ் கெய்லின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து, இறுதியாக அணியில் சேர்த்துக்கொண்டது நிர்வாகம்.  
 தன்னுடைய பலம் எதுவோ அதில்தான் விளையாடுவார். அதிரடியாக ஆடும் வீரர்தான் என்றாலும், அதற்காக பேட்டைக் கண்டபடி சுழற்ற மாட்டார். ஸ்வீப் ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப் என்றெல்லாம் தனக்குச் சரிப்படாத ஷாட்களை அடிக்க மாட்டார். ''என்னுடைய உயரத்துக்கு நான் குனிந்தெல்லாம் விளையாடினால் பந்து என் முகத்தில் பட்டுவிடும்'' என்பார். 

0 comments:

ஐ.பி.எல். போட்டிகளில் அந்தந்த மாநில மக்களுக்குத் தங்கள் மாநிலத்துக்கு விளையாடும் வீரர்களைத்தான் பிடிக்கும். ஆனால், எல்லா மாநில மக்களுக்கும் பிடித்த வீரர்... கிறிஸ் கெய்ல். காரணம், கெய்லின் அதிரடி பேட்டிங். புனே வாரியர் அணிக்கு எதிராக 17 பந்துகளில் 50 ரன், 30 பந்துகளில் 100 ரன், 20/20 கிரிக்கெட்டில் இதுவரை யாரும் எட்டாத உச்சபட்சமாக 175 ரன்கள் என கிறிஸ் கெய்ல் அன்று ஆடியதெல்லாம் இதுவரை கிரிக்கெட் ரசிகர்கள் பார்க்காத ருத்ரதாண்டவம். பவுலர்கள், ஃபீல்டர்கள், ரசிகர்கள், சியர்கேர்ள்ஸ் என அனைவரையுமே சிக்ஸர், பவுண்டரி மழையால் டயர்டாக்கிவிட்டார் கிறிஸ் கெய்ல். ஒரே போட்டியில் மூன்று உலக சாதனைகளைச் சாத்தியப்படுத்திய கெய்ல் பற்றிய டிட்பிட்ஸ் இங்கே...
  கிறிஸ்டோபர் ஹென்றி கெய்ல் என்பதே முழுப் பெயர். கெய்ல் என்றால், 'புகழுக்குத் தகுதியானவன்’ என்று அர்த்தம். ரைட்டு விடு!
 கெய்ல் எதிலுமே வித்தியாசமானவர். இடது கை பேட்ஸ்மேன். ஆனால், வலது கை பவுலர். 1999-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில்தான் அறிமுகமானார் கெய்ல். டெஸ்ட் போட்டியில் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த உலக சாதனைக்குச் சொந்தக்காரர்.  
 6 அடி 3 அங்குல உயரம். 98 கிலோ எடை. அவ்வளவு உயரத்தில், அவ்வளவு பவரோடு அடிப்பதால் பந்துகள் மைதானத்தைத் தாண்டிப் பறக்கின்றன. கிறிஸ் கெய்ல் அதிகபட்சம் 126 மீட்டர் தூரம் பந்தைப் பறக்கவிட்டிருக்கிறார். அதிகபட்ச வேகம், மணிக்கு 173 கி.மீ.  
 ''சின்ன வயதில் மூங்கில் மட்டையைப் பேட்டாகவும், தேங்காயைப் பந்தாகவும் வைத்து விளையாடுவாராம்.  முழுத் தேங்காய்களையே சிதறடித்தவனுக்குப் பந்தைப் பறக்கவிடுவது லாலிபாப் விஷயம்தான்'' என்கிறார் அவரது தந்தை. கெய்லுக்கு இரண்டு சகோதரர்கள். மூத்த சகோதரருடன் இணைந்து 'டியூட்டி ஃப்ரைடேஸ்’ என்னும் பொழுதுபோக்கு நிறுவனம் நடத்திவருகிறார்.
 மைதானத்தில் அதிரடி ஆட்டம் ஆடும் கிறிஸ் கெய்லைப் போன்று கூலான மனிதரைப் பார்க்க முடியாது. எப்போதும் சிரிப்பு, ஆட்டம் எனக் கலகலப்பாக இருப்பார். 'மர்மர்’ என்னும் இதய வால்வு நோயால் பாதிக்கப்பட்ட போதும் உற்சாகம் இழக்கவில்லை. 2005-ல் ஆஸ்திரேலியாவில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ''இந்த வாழ்க்கை கடவுள் கொடுத்தது. அதனால், ரசித்து வாழ்கிறேன். எனக்கு யார் மீதும் எப்போதும் கோபம் கிடையாது... வராது. இனிமேல் எப்போதும் கோபப்பட மாட்டேன்'' என்றார் கிறிஸ் கெய்ல் அறுவை சிகிச்சைக்குப் பின்.
 மனிதாபிமானி.. சென்ற ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரில் கெய்ல் அடித்த சிக்ஸர் ஒன்று 11 வயதுப் பெண் குழந்தையின் மூக்கில் பட்டு, மூக்கை உடைத்துவிட்டது. மேட்ச் முடிந்த பின் அதைப் பற்றிக் கேள்விப்பட்ட கெய்ல், மருத்துவமனைக்குச் சென்று அந்தக் குழந்தையை நலம் விசாரித்ததுடன், அன்றைய போட்டியில் தான் வென்ற 'ஆட்ட நாயகன்’ பதக்கத்தை அவளுக்கே பரிசாகக் கொடுத்தார்.
 மேற்கு இந்தியத் தீவுகள் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, ஒன்றரை ஆண்டுகள் விளையாடாமல் இருந்தார். அவர் இல்லாத காலகட்டத்தில் 47 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, வெறும் 14 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. வேறு வழியில்லாமல் கிறிஸ் கெய்லின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து, இறுதியாக அணியில் சேர்த்துக்கொண்டது நிர்வாகம்.  
 தன்னுடைய பலம் எதுவோ அதில்தான் விளையாடுவார். அதிரடியாக ஆடும் வீரர்தான் என்றாலும், அதற்காக பேட்டைக் கண்டபடி சுழற்ற மாட்டார். ஸ்வீப் ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப் என்றெல்லாம் தனக்குச் சரிப்படாத ஷாட்களை அடிக்க மாட்டார். ''என்னுடைய உயரத்துக்கு நான் குனிந்தெல்லாம் விளையாடினால் பந்து என் முகத்தில் பட்டுவிடும்'' என்பார். 

0 comments:

ஐ.பி.எல். போட்டிகளில் அந்தந்த மாநில மக்களுக்குத் தங்கள் மாநிலத்துக்கு விளையாடும் வீரர்களைத்தான் பிடிக்கும். ஆனால், எல்லா மாநில மக்களுக்கும் பிடித்த வீரர்... கிறிஸ் கெய்ல். காரணம், கெய்லின் அதிரடி பேட்டிங். புனே வாரியர் அணிக்கு எதிராக 17 பந்துகளில் 50 ரன், 30 பந்துகளில் 100 ரன், 20/20 கிரிக்கெட்டில் இதுவரை யாரும் எட்டாத உச்சபட்சமாக 175 ரன்கள் என கிறிஸ் கெய்ல் அன்று ஆடியதெல்லாம் இதுவரை கிரிக்கெட் ரசிகர்கள் பார்க்காத ருத்ரதாண்டவம். பவுலர்கள், ஃபீல்டர்கள், ரசிகர்கள், சியர்கேர்ள்ஸ் என அனைவரையுமே சிக்ஸர், பவுண்டரி மழையால் டயர்டாக்கிவிட்டார் கிறிஸ் கெய்ல். ஒரே போட்டியில் மூன்று உலக சாதனைகளைச் சாத்தியப்படுத்திய கெய்ல் பற்றிய டிட்பிட்ஸ் இங்கே...
  கிறிஸ்டோபர் ஹென்றி கெய்ல் என்பதே முழுப் பெயர். கெய்ல் என்றால், 'புகழுக்குத் தகுதியானவன்’ என்று அர்த்தம். ரைட்டு விடு!
 கெய்ல் எதிலுமே வித்தியாசமானவர். இடது கை பேட்ஸ்மேன். ஆனால், வலது கை பவுலர். 1999-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில்தான் அறிமுகமானார் கெய்ல். டெஸ்ட் போட்டியில் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த உலக சாதனைக்குச் சொந்தக்காரர்.  
 6 அடி 3 அங்குல உயரம். 98 கிலோ எடை. அவ்வளவு உயரத்தில், அவ்வளவு பவரோடு அடிப்பதால் பந்துகள் மைதானத்தைத் தாண்டிப் பறக்கின்றன. கிறிஸ் கெய்ல் அதிகபட்சம் 126 மீட்டர் தூரம் பந்தைப் பறக்கவிட்டிருக்கிறார். அதிகபட்ச வேகம், மணிக்கு 173 கி.மீ.  
 ''சின்ன வயதில் மூங்கில் மட்டையைப் பேட்டாகவும், தேங்காயைப் பந்தாகவும் வைத்து விளையாடுவாராம்.  முழுத் தேங்காய்களையே சிதறடித்தவனுக்குப் பந்தைப் பறக்கவிடுவது லாலிபாப் விஷயம்தான்'' என்கிறார் அவரது தந்தை. கெய்லுக்கு இரண்டு சகோதரர்கள். மூத்த சகோதரருடன் இணைந்து 'டியூட்டி ஃப்ரைடேஸ்’ என்னும் பொழுதுபோக்கு நிறுவனம் நடத்திவருகிறார்.
 மைதானத்தில் அதிரடி ஆட்டம் ஆடும் கிறிஸ் கெய்லைப் போன்று கூலான மனிதரைப் பார்க்க முடியாது. எப்போதும் சிரிப்பு, ஆட்டம் எனக் கலகலப்பாக இருப்பார். 'மர்மர்’ என்னும் இதய வால்வு நோயால் பாதிக்கப்பட்ட போதும் உற்சாகம் இழக்கவில்லை. 2005-ல் ஆஸ்திரேலியாவில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ''இந்த வாழ்க்கை கடவுள் கொடுத்தது. அதனால், ரசித்து வாழ்கிறேன். எனக்கு யார் மீதும் எப்போதும் கோபம் கிடையாது... வராது. இனிமேல் எப்போதும் கோபப்பட மாட்டேன்'' என்றார் கிறிஸ் கெய்ல் அறுவை சிகிச்சைக்குப் பின்.
 மனிதாபிமானி.. சென்ற ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரில் கெய்ல் அடித்த சிக்ஸர் ஒன்று 11 வயதுப் பெண் குழந்தையின் மூக்கில் பட்டு, மூக்கை உடைத்துவிட்டது. மேட்ச் முடிந்த பின் அதைப் பற்றிக் கேள்விப்பட்ட கெய்ல், மருத்துவமனைக்குச் சென்று அந்தக் குழந்தையை நலம் விசாரித்ததுடன், அன்றைய போட்டியில் தான் வென்ற 'ஆட்ட நாயகன்’ பதக்கத்தை அவளுக்கே பரிசாகக் கொடுத்தார்.
 மேற்கு இந்தியத் தீவுகள் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, ஒன்றரை ஆண்டுகள் விளையாடாமல் இருந்தார். அவர் இல்லாத காலகட்டத்தில் 47 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, வெறும் 14 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. வேறு வழியில்லாமல் கிறிஸ் கெய்லின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து, இறுதியாக அணியில் சேர்த்துக்கொண்டது நிர்வாகம்.  
 தன்னுடைய பலம் எதுவோ அதில்தான் விளையாடுவார். அதிரடியாக 

0 comments:

எனக்கும் தடுமாற்றம் வரும்! நான் ஒன்றும் ரஜினி இல்லை!” “என்னை ஜெயிப்பது சுலபம்!” - A to Z ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசி எவ்வளவு நாட்களாகிவிட்டன?
''என் கால்ல எத்தனை சக்கரங்கள் கட்டப்பட்டிருக்குன்னு உங்களுக்கே தெரியும். ஓடிக்கிட்டே இருக்கேன். அதான்... இந்த வருஷம் 'மரியான்’, 'கோச்சடையான்’, 'ஐ’னு தமிழ்ப் படங்கள் அடுத்தடுத்துப் பண்ண வாய்ப்பு கிடைச்சிருக்கு. ரொம்ப நல்ல விஷயம்ல!'' எனப் புன்னகைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
'' 'வந்தே மாதரம்’ தொடங்கி இப்போ 'மரியான்’ வரை இயக்குநர் பரத்பாலான்னா உங்களுக்குக் கொஞ்சம் ஸ்பெஷல்தானே?''
''அப்படியும் வெச்சுக்கலாம். எனக்கு அமைஞ்ச நல்ல விஷயங்களில் என் நண்பர்களும் உண்டு. பரத்பாலா, மணிரத்னம், திருலோக், ராஜீவ் மேனன்னு நிறைய நல்ல நண்பர்களைக் கடவுள் எனக்குப் பரிசாகக் கொடுத்திருக்கார்.
ஒவ்வொருத்தருக்கும் ஒரு மைல்கல் இருக்கும். அப்படி என்னோட மைல்கல்லைத் தாண்டியும் அடுத்தடுத்தக் கட்டங்களுக்குக் கொண்டுபோனது இந்த நண்பர்கள்தான். நான் ஜிங்கிள்ஸ் பண்ணும்போதே அது சுமாரா இருந்தா, என் நண்பர்கள் யாரும் திருப்தி அடைய மாட்டாங்க. 'இன்னும் நல்லா வேணும்’னு சொல்லிச் சொல்லி என்னைக் கடுமையா உழைக்கவெச்சாங்க. 'வந்தே மாதரம்’ ஆல்பம் இயக்கியவர் பரத்பாலா. இப்ப அவரே 'மரியான்’ பண்றதால், நிறைய எதிர்பார்ப்பு வந்துருச்சு. சினிமாவை இயக்குறதுக்காகக் கிட்டத்தட்ட 10 வருஷம் உழைச்சிருக்கார். அந்தஉழைப்பின் பலன் 'மரியான்’ல தெரியும். பரத் பாலாவுக்கு இது ஒரு ஆரம்பம்தான். இன்னும் நிறையச் சாதிப்பார்!''
'' 'மரியான்’ படத்தில் உங்க இசையில் யுவன்ஷங்கர் ராஜா பாடியிருக்கார். எப்படி அமைஞ்சது இந்தக் கூட்டணி?''
''கடல்ராசா பாட்டைக் கேக்கறீங்களா? யுவனோட குரல்ல எப்பவுமே ஒரு ஜீவன் இருக்கும். அவரோட குரலைக் கேட்கும்போது எல்லாம் 'இவரை எப்படியாவது நம்ம இசையில் ஒரு தடவை பாட வெச்சி டணும்’னு நினைச்சுட்டே இருப்பேன். அது இப்போதான் அமைஞ்சது. யுவனே கடல்ராசாவா மாறிப் பாடி அசத்திட்டார்!''
''வீட்டுக்குள்ளேயே சத்தம் இல்லாம இசை வாரிசு உருவாகுதா? திரைப்பட விழாவில் உங்க மகன் அமீன் பிரமாதமா பியானோ வாசிச்சாரே?''
''அவர் அந்த திரைப்பட விழாவில் பியானோ வாசிச்சது எனக்கே தெரியாது. என்கிட்ட அவர் சொல்லவும் இல்லை. இன்டெர்நெட்ல பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். முதல் மேடையிலேயே அசத்திட் டார். கடவுள்தான் அவரை வழிநடத்தணும். இப்பதான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கார். கத்துக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு!''
''இளம் இசையமைப்பாளர்கள் ஒருபக்கம் மிரட்டுறாங்க. இன்னொரு பக்கம் நிறைய இளைஞர்கள் குட்டிக் குட்டியா ஜிங்கிள்ஸ் போட்டு யூ டியூப்ல ஹிட் ஆகிடுறாங்களே?''
''ஆமா, நல்லதுதானே? இப்ப வர்ற இளைஞர்களுக்கு நிறையத் திறமை, தொழில்நுட்ப அறிவு இருக்கு. எதையும் தேடிப் பிடிக்கிற துக்கு அவங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. நான் சின்னப் பையனா இருந்தப்போ, அண்ணா சாலையில் ஒரே ஒரு கடையில்தான் 'மியூஸிக் மேக்கர்’ங்கிற புத்தகம் கிடைக்கும். அதை வாங்க நான் சைக்கிள் எடுத்துட்டு அலைவேன். இப்போ உள்ள பசங்களுக்கு கூகுள், யூ டியூப் மூலமா எல்லாத்தையும் எளிதாக் கத்துக்க முடியுது. அட, அரேபியன் ஸ்டைல் மேக்அப்பைக்கூட வீட்ல உட்கார்ந்துக் கிட்டே பண்ணிடுறாங்க. இப்ப ஒருத்தர் ஒரு விஷயத்தை நோக்கி கடுமையா உழைச்சா, அதில் அவர் நிச்சயம் ஜெயிக்கலாம்!''
''இசை படிக்கிறவங்க எல்லாரோட கனவும் பெரும்பாலும் சினிமாவாதான் இருக்கு. ஆனா ஹாலிவுட், இரானியப் படங்கள் எல்லாம் பாடல்களே இல்லாமல் வந்தாலும் ரசிக்கவைக்குது. இந்திய சினிமாவில் மட்டும்தான் பாடல்கள் இருக்கு. சினிமாவுக்கு இன்னும் பாடல்கள் தேவையா?''
''இந்திய சினிமாவில் பாட்டு இருக் கிறதால்தான் இன்னும் கெட்டுப் போகாம இருக்கு. (சிரிக்கிறார்) ஒரு நல்ல பாட்டு நமக்கு எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்குது. ஒரு பாட்டைப் பாடினாலே நம்மோட காதல், சோகம், மனைவி, குடும்பம்னு எல்லா உணர்வுகளும் வந்துட்டுப் போகுது. அதனால பாட்டு எப்பவுமே நல்ல விஷயம்தான். ஆனா, இப்போபாடல் களும் ஒரு மாதிரி ஃபார்முலாவுக்கு உள்ளே சிக்கிக்கிச்சு. அதை உடைக்கணும்னு நான் ஆசைப்படுறேன். மத்த வங்க கதையில் நான் வேலை பார்க்கும்போது அது சாத்தியம் இல்லை. அதனால், நானே கதை பண்ண ஆரம்பிச்சிட்டேன்!''
''இயக்குநர் ரஹ்மான்..! ஆச்சர்யமா இருக்கே?''
''இயக்குநர் ஆகணும்னு ஆசை தான். ஆனா, அதுக்கு இசையை மறந்து நிறைய விஷயங்களில் கவனம் செலுத் தணும். அதில் எனக்கு இஷ்டம் இல்லை. அதனால் கதை, திரைக்கதை மட்டும் பண்ணியிருக்கேன். என் நண்பர்கள்கிட்ட முதல்ல சொல்லிப் பார்த்தேன். அவங்களுக்கு கதை பிடிச்சிருந்தது. தயாரிப்பாளரும் கிடைச்சிட் டாங்க. அடுத்த வருஷம் என் கதையை யாராவது இயக்குவாங்க. படம் இசை, குடும்பம் சம்பந்தப்பட்டதா இருக்கும். ஹீரோ, ஹீரோ யின் மாதிரியான ஃபார்முலா விஷயங்கள் இருக்காது. ரொம்ப வித்தியாசமான படமா இருக்கும்!''
''நீங்க மலையாளப் படத்தில் நடிக்கப்போறதா நியூஸ் வந்துச்சே?''
''அப்படியா... எனக்கு அப்படி எந்த ஐடி யாவும் இல்லை. இருக்கிற வேலைகளைப் பார்க்கவே எனக்கு நேரம்இல்லை. இதில் எங்கே நடிக்க? அதே மாதிரிஅமெரிக்கா வில் செட்டில் ஆகப்போறேன்னு எழுது றாங்க. அமெரிக்காவில் எனக்கு ஒரு வீடு, ஒரு ஸ்டுடியோ இருக்கு. இங்கே என்ன வேலை செய்றேனோ, அதையே அங்கேயும் செய்றேன். அமெரிக்கா எனக்கு வசதியா இருக்கு. ரோட்லஃப்ரீயா நடந்து போக லாம். ரோட்டுக் கடையில் காபி சாப்பிட லாம். யாரும் தொந்தரவு பண்றதில்லை. எனக்கு அதுதான் வேணும். அதனால் வருஷத்தில் பாதி நாட்கள் அமெரிக்காவில் இருக்கிறேன். அவ்ளோதான்!''
''எங்க எல்லாருக்குமே ரிலாக்ஸ் பண்ண ரஹ்மான் பாடல்கள் இருக்கு. நீங்க ரிலாக்ஸ் பண்ண என்ன பண்ணுவீங்க?''
''(சிரிக்கிறார்) பாட்டே கேட்க மாட்டேன்... ஒரு ரூம்ல அமைதியா உட்கார்ந்து சும்மா யோசிப்பேன். செம ரிலாக்ஸ் ஆகிருவேன்!''
''இத்தனை வருஷம் ஆகியும் இன்னொரு ரஹ்மான் வரவே இல்லை. உங்க இடத்தை யார் பிடிக்க முடியும்னு நினைக்கிறீங்க?''
''யார் நினைச்சாலும் பிடிக்க முடியும். என் இடத்தைப் பிடிப்பது சுலபமான விஷயம். இசைக்கு எந்த அளவுகோலும் கிடையாது. ஒவ்வொருத்தரோட இசையும் ஒரு தனித்தன்மையோட இருக்கும். உங்க தனித்தன்மையும் மக்களோட அலைவரிசையும் சிங்க் ஆச்சுன்னா, நாளைக்கு என் இடத்தில் நீங்க இருப்பீங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் மக்கள் கேட்டா, அது நல்ல பாட்டு. அவங்க கேக்கலைன்னா, அது சுமாரான பாட்டு. அவ்வளவுதான். அதை மனசுல வெச்சுட்டுதான் வேலை பார்க்கிறேன்!''  
''பாடல்களுக்கு ரொம்ப மெனக்கெடுவீங்க. மாறுவேஷத்தில் விதவிதமான சத்தங்களைத் தேடிச் சுத்துவீங்கன்னு கேள்விப்பட்டோம்?''
''நானா? நான் ஒண்ணும் ரஜினிகாந்த் இல்லைங்க. அவர்தான் அமைதியான இடம் தேடி அப்படி எல்லாம் விதவிதமா சுத்துவார். எனக்கு டியூன் வேணும்னா, இருக்கிற இடத்திலேயே அமைதி ஆகிருவேன். எவ்வளவு நேரம் அப்படி இருப்பேன்னு கணக்கு எதுவும் இல்லை. அமைதியா இருக்கும்போது கிடைக்கிற சக்தி வேற எதிலேயும் கிடைக்காது!''
''ரஜினி, கமல் ரெண்டு பேரிடமுமே பழகி யிருக்கீங்க... அவங்ககிட்ட கத்துக்கிட்ட விஷயம் என்ன?''
''ரஜினி சார் எந்த முடிவையும் யோசிச்சு எடுக்கமாட்டார். அவருக்கு உள்ளுக்குள்ள இருக்கிற ஆன்மிக மனசு என்ன சொல்லுதோ அதைவெச்சு முடிவு எடுப்பார். அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதில் மனிதத்தன்மைஇருக் கும். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். கமல் சார் மூணு தலைமுறைக்கு சாதிக்க வேண்டியதை ஒரே ஆளா சாதிச்சுட்டார். அப்புறம் நீங்க நம்புவீங்களான்னு தெரியலை... ரெண்டு பேர்கிட்டயும் நான் அவ்வளவாப் பேசினதே இல்லை. 'கோச்சடையான்’ பாட்டுகளுக்காக டியூன் ரெடி பண்ணும்போது ரஜினி சார்கிட்ட கொஞ்சம் பழகினேன். ஒரு பாட்டில் அவரைப் புகழ்ந்து அவரே சொல்ற மாதிரி ஒரு வசனம் வரும். அதைச் சொல்றதுக்கு அவ்ளோ கூச்சப்பட்டார். ரொம்ப வற்புறுத்தி அந்த வசனத்தைப் பேசவெச்சோம். அந்த எளிமைதான் ரஜினி!''  
''கலையில் சாதிச்ச பலரும் அடுத்த கட்டமா ஏதோ ஒண்ணைத் தேடுறாங்க. ரஹ்மான் இன்னமும் தேடிக்கிட்டு இருக்கிற விஷயம் என்ன?''
''அது தெரிஞ்சாதான் தேடிப் பிடிச்சிருவேனே? ஏதோ ஒண்ணைத் தேடி ஓடிட்டே இருக்கேன். என்னோட தேடல் முடியும்போது எல்லாமே போதும்னு நானே நின்னுடுவேன். எனக்குனு எந்த ஏக்கமோ, ஆசையோ கிடையாது. எல்லாத்தையும் இறைவன் கையில் கொடுத்தாச்சு. அவர் வழிநடத்துவதால்... சந்தோஷம், துக்கம் எல்லாம் ஒரே மாதிரிதான் கடந்துபோகுது.
கோபம், சோகம், பொறாமை எல்லாமே நம்மைப் பலவீனப்படுத்தும் விஷயங்கள். ஆன்மிகத்தில் கவனம் செலுத்தும்போது, இந்தக் குணங்கள் கொஞ்சம்கொஞ்சமாக் கரைஞ்சுபோயிடும். நாமளும் வேலையில் கவனம் செலுத்தி ஜெயிக்கலாம்!''
''என்ன இருந்தாலும், இவ்வளவு உயரம் வளர்ந்த பின்னாடி கர்வம் வர்றதைத் தடுக்குறது கஷ்டமாச்சே?''
''நானும் மனுஷன்தான். எனக்கும் தடுமாற்றங்கள் வரும். ஒரு விநாடிதான். கடவுளோட படைப்புகளைப் பத்தி யோசிக்கும்போது நாமெல்லாம் ஒண்ணுமே கிடையாதுன்னு தோணும். அதோட தூக்கிப் போட்டுட்டு வேலை பார்க்கக் கிளம்பிடுவேன்!''

0 comments:

சீண்டும் டிராகன்!



லடாக்கில் 19 கிலோ மீட்டர் வரை சீனப் படைகள் ஆக்கிரமித்துள்ளன’ என்கிற செய்தியைப் பார்த்து நாடே பதறுகிறது. சரி, மத்திய அரசு? அது, பதற்றத்தில் தவிக்கிறது என்று நினைத்தால் நாம் முட்டாள்கள். ஏனெனில், நேரு தொடங்கி மன்மோகன் வரை சீனா நம் முதுகில் அடித்துவிட்டுச் செல்லும் 'ஐஸ் பாய்’ விளையாட்டையும், இடத்தைப் பிடித்துக்கொள்ளும் 'டிரேட்’ விளையாட்டையும் வெகுவாக ரசித்தவர்களே!
சில மாதங்களுக்கு முன்பு, 'எங்களிடம் 23 லட்சம் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள்’ என்று வெள்ளை அறிக்கை வெளியிட்டது சீனா. அது எதிரி நாடுகளுக்கு சீனா விடுத்த சிவப்பு எச்சரிக்கை. உண்மையில், நம் எல்லைப் பகுதிகளில் சீனாவின் சீண்டல் என்பது வழக்கமான ஒன்றுதான். வட இந்தியச் சேனல்களுக்கு சென்சேஷன் தீனி கிடைக்காத நாட்களில் மட்டுமே, சீனாவின் ஆக்கிரமிப்புச் செய்திகள் பெரிதுபடுத்தப்படுகின்றன என்பது நடுநிலையான பத்திரிகையாளர்களின் குற்றச்சாட்டு.
சுமார் 4,050 கி.மீ. நீளம் உள்ள இந்திய - சீன எல்லையில், சீனா தினம் தினம் நடத்தும் அத்துமீறல்களைக் கண்டிக்கும் திராணி இல்லாமல், கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்க்கிறது மத்திய அரசு. ஊடகங்களில் செய்தி வெளியாகும் நாட்களில் மட்டுமே அமைச்சகங்கள் அறிக்கைவிடுகின்றன. சீனா நேற்று இன்றா சீண்டுகிறது?
1954-ல் நேருவுடன் கைகுலுக்கிய அடுத்தடுத்த ஆண்டுகளில் அஸ்ஸாமின் வட பகுதி பறிபோனது. அடுத்து, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் லடாக்கில் 40 ஆயிரம் சதுர மைல் பரப்பளவு ஸ்வாஹா. 1962-ல் போர். அது போர் அல்ல... சீனா நம்மை அடித்தது. நாம் அடி வாங்கினோம். ஆறு மாதங்களில் தனக்குத் தேவையான 'அக்சாய்சின்’ பகுதியைக் கைப்பற்றியவுடன், தானாக ஆயுதங்களை மௌனித்தது சீனா. இன்னொரு பக்கம் காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான், தான் கைப்பற்றிய பகுதியில் இருந்து 5,120 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனாவுக்குப் பரிசு அளித்தது. இதை எல்லாம் பாந்தமாக வேடிக்கை பார்த்தது பஞ்சசீலக் கொள்கை!
காங்கிரஸ் அரசின் கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும் அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா உரிமை கொண்டாடும் பகுதி சுமார் 90,000 சதுர கி.மீ. அந்தப் பகுதிக்கு சீனா சூட்டியுள்ள பெயர் தெற்கு திபெத். 'சீனா தனது இந்திய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் நவீன சாலை, ரயில் தண்டவாளங்களை அமைத்துள்ளது. அருணாச்சலப் பிரதேச ஆக்கிரமிப்புப் பகுதியில் 30 டிவிஷன் படைகளைக் குவித்துள்ளது’ என்கிறது மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆண்டறிக்கை.
இந்திய - சீனப் படை பரிபாலனங்களை ஒப்பிட்டால், சீனாவை நாம் வெற்றிகொள்ளவே முடியாது. தவிர, ஆயுதங்கள் ஒருபோதும் தீர்வு தராது. சீனா நம்மை ஏன் சீண்டுகிறது என்பது மட்டுமே நாம் இங்கு கவனம்கொள்ள வேண்டிய விஷயம். பாகிஸ்தான், காஷ்மீரை ஏன் சீண்டுகிறது? மத்திய அரசு அங்கு நடத்தும் மனித உரிமை அத்துமீறல்களே... மாற்றான் தோட்டத்து மல்லிகை மீது பாகிஸ்தானை ஆசைகொள்ளவைக்கிறது!
அப்படித்தான் சீனாவுக்கு வட கிழக்கு மாநிலங்கள். சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக வட கிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்படும் வலி மிகுந்த வரலாறு, கண்ணீராலும் ரத்தத்தாலும் மட்டுமே எழுதப்பட்டது. அண்ணா ஹஜாரேவை அறிந்த எத்தனை பேருக்கு இரோம் ஷர்மிளா ஷானுவைத் தெரியும்? டெல்லி காவல் துறையின் பாஷையில் வட கிழக்கு மாநில இளைஞர்களின் பெயர் 'சீன நாய்கள்’. அதேபோல வட கிழக்கு மாநிலங்களுக்கு நாம் சென்றால் அவர்கள் கேட்கும் கேள்வி, 'இந்தியாவில் இருந்தா வருகிறீர்கள்?’ என்பதே. உண்மையில், வட கிழக்கு மாநிலங்கள் என்பது இந்தியாவால் புறக்கணிக்கப்பட்ட - இந்தியாவில் இருக்கும் இன்னொரு நாடு. அந்த மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கைவிட்டால், அங்கு உள்ள மக்களின் ஆதரவு இந்தியாவுக்குக் கிடைக்கும். அது மட்டுமே அந்தப் பகுதிகளை எச்சில் ஒழுகப் பார்க்கும் சீன டிராகனைத் திரும்ப ஓடவைக்கும்!

யாருக்காவது அடிமையாய் இருப்பதே நம் தலைஎழுத்து! நம் மன்னர்கள், பின் துருக்கியர்கள், மொகலாயர்கள், ஆங்கிலேயர், போர்ச்சுகிசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், பின் அரசியல்வாதிகள், தற்போது இத்தாலியர்கள்.....கூடாரம் போட்டவன், குண்டு போட்டா, நம் ஹிந்தியா சொக்காயில் உச்சாதான் போகும்! சப்பை மூக்கனிடமும் அடிமையா கொஞ்ச நாள் இருந்து பார்ப்போம்!

இந்தியாவிற்கு தற்பொழுது தேவை - ஆளுமை மற்றும் நேர்மையான அரசு. கிரிக்கெட்டை தவிர தேச ஒற்றுமை எதில் உள்ளது? இங்கு தற்பொழுது உள்ளவர்களுக்கு அவரவர் கட்சி மற்றும் கூட்டனி பிரச்சனயே பெரியதாய் உள்ளது. 70-80% பேர் பள்ளிகூடத்தில் ஜனகனமன பாடியது தான் கடைசி ... அன்றாடம் தொழில் (பணி) செய்பவர்கள் அவர்கள் வேலைய ஆரம்பிற்கும் முன்னால் தேசிய keetham பாட வேண்டும். அனைத்து இந்திய உள்ளங்கள் ஒன்றாக இருந்தால் யாரையும் வெல்லலாம்

உண்மையில், வட கிழக்கு மாநிலங்கள் என்பது இந்தியாவால் புறக்கணிக்கப்பட்ட - இந்தியாவில் இருக்கும் இன்னொரு நாடு. ***** தவறு. மதமாற்ற கும்பல் செய்த மூலைச் சலவை. பாதிரியார்கள் 69 வருடங்கள் சமூக சேவை என்ற போர்வையில் தேசவிரோத கருத்தை விதித்தனர். அங்குள்ள அனைத்து பிரிவினைவாதக் கும்பலும் அந்நிய மதத்துக்கு மாற்றப்பட்டவர்களால் உருவாக்கப்பட்டவை. அதனால்தான் ராஜீவ் காந்தி மிஜோர மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பைபிள் வழியில் நடக்கும் என்று வாக்குறுதி கொடுத்தார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலிலும் வாக்குப் பதிவு துவங்கு முன் பாதிரியார்கள் ஓட்டுப் பெட்டிக்கு ஆசிர்வாதம் செய்து மாஸ் நடத்தினர். தேர்தல் முடியும்வரை இரட்சகரைப் பற்றி பாடல்கள் பாடினர். தேர்தல் கமிஷன் தடுக்கவில்லை. இதுதான் இந்திய மதச்சார்பின்மை.
பாகிஸ்தான், காஷ்மீரை ஏன் சீண்டுகிறது? மத்திய அரசு அங்கு நடத்தும் மனித உரிமை அத்துமீறல்களே... ******* தவறு. மதப் பாசத்தில் அங்குள்ள மைனாரிட்டி கும்பல் அன்னியருக்கு ஆதரவாக செயல்படுவதால். நேருவின் மதியின்மையால் அரசியல் சட்டத்தில் 370 பிரிவை உருவாக்கி அட்டூழியத்துக்கு போட்ட தீனியில் கொழுப்பெடுத்து கோடரி காம்பாக நாட்டை மீண்டும் துண்டாக்க முயல்கிறது.

0 comments:

மரக் கன்றுகள் வேண்டுமா...எங்க கிட்ட வாங்க!''

மரப் பயிர்களை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள்... 'தரமான மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? மரங்களை வளர்க்க யார் சொல்லிக் கொடுப்பார்கள்?’ என்று தேடி அலைவதுண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவே, ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள  தமிழக வனத்துறையின் விரிவாக்க மையங்கள், தேவையான கன்றுகளையும், மரம் வளர்ப்புப் பற்றிய தொழில்நுட்பங்களையும் கற்றுக் கொடுத்து வருகிறார்கள். இதுபற்றி தமிழக வனத்துறையின் கூடுதல் முதன்மை வனப் பாதுகாவலர் இருளாண்டி, மரப்பயிர் சிறப்பிதழுக்காக நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இங்கே இடம் பிடிக்கின்றன.
''சென்னை நீங்கலாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வனத்துறையின் கீழ் வன விரிவாக்க மையம் மற்றும் பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வேம்பு, மலைவேம்பு, தேக்கு, மகோகனி, மூங்கில், பீநாரி (பெருமரம்), இலவு, சவுக்கு, குமிழ், புங்கன், புளி, நாவல், பலா, பெருநெல்லி, சந்தனம் என பல மரக் கன்றுகளும் கிடைக்கின்றன. என்ன வகையான கன்றுகள் தேவைப்படுகிறதோ... அதை முன்கூட்டியே தெரிவித்தால், உற்பத்தி செய்து தருவார்கள்.  
தமிழ்நாடு உயிர் பன்மைப் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் 'தொகுப்பு கிராமங்கள்’ என்ற பெயரில், ஆண்டுக்கு ஆயிரம் கிராமங்களுக்கு இலவசமாக மரக் கன்றுகளை வழங்கி வருகிறோம். சிறு-குறு விவசாயிகளுக்கு 1,000 மரக்கன்றுகள் வரையும், பெரிய விவசாயிகளுக்கு 2,500 மரக் கன்றுகள் வரையும் கொடுக்கிறோம். விவசாயிகள், அருகில் உள்ள வன விரிவாக்க மையத்தை அணுகி, 'அவர்களின் கிராமம், இத்திட்டத்தின் கீழ் உள்ளதா?’ என்ற விவரத்தைக் கேட்டு இலவசமாகவே கன்றுகளை வாங்கிச் செல்லலாம்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஆண்டுக்கு 25 முதல் 30 கிராமங்கள் இத்திட்டத்தின் கீழ் வரும். இத்திட்டத்தில், இரண்டு, மூன்று கிராம விவசாயிகள் கூட்டாகச் சேர்ந்தும் மரங்கள் வளர்க்கலாம். செடிகளுக்கு இடையில், ஊடுபயிர் செய்வதற்கான தகவல்கள், பராமரிப்பு ஆலோசனைகள் போன்றவற்றையும் வழங்குகிறோம். ஒவ்வொரு மையத்திலும் மரம் வளர்ப்புக்கான பயிற்சியும் நடைபெறுகிறது. அதிலும் கலந்து கொண்டு மரம் வளர்ப்புக்கான தொழில்நுட்பத் தகவல்களைப் பெறலாம்.  இலவசமாக கன்றுகள் பெறும் அனைவரும் நிலத்தின் பட்டா, சிட்டா அடங்கல், ஒரு ஒப்புதல் கடிதம் ஆகியவற்றை மையத்தில் கொடுக்க வேண்டும்... அவ்வளவுதான்'' என்றவர்
''மரங்கள் அறுவடைக்குத் தயாரான பிறகு, 'பேப்பர் தொழிற் சாலைகள், பிளைவுட் கம்பெனிகளில் மரங்களின் தேவை எவ்வளவு?’, 'தற்போது என்ன விலை?’, 'எங்கு நல்ல விலை கிடைக்கும்?’ போன்ற தகவல்களையும் வன விரிவாக்க மையத்தில் தெரிந்து கொள்ளலாம். மரம் வளர்ப்பு லாபத்துக்காக மட்டு மில்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உதவுகிறது. எனவே விவசாயிகள் முழுக்க முழுக்க வருமானமாக மட்டும் பார்க்காமல், தங்கள் நிலங்களில் ஒரு பகுதியை மரம் வளர்ப்புகென ஒதுக்கிப் பயன் பெற வேண்டும்'' என்று அழைப்பு வைத்தார்!

0 comments: