read the tamil Special news and tips on Experts. Archive for December 2013
 .நம்ம வீடு.காம் தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

கொஞ்சம் வெயில்... கொள்ளை கரன்ட்... நீங்களே தயாரிக்கலாம்... சோலார் ஸ்பிரேயர்!

நமக்குத் தேவையான எல்லா விஷயங்களும், கைக்கு எட்டுற தொலைவுலதான் இருக்கு. என்ன... கொஞ்சம் மெனக்கெட்டு யோசிச்சா, எல்லாமும் சாத்தியப்படும்''
- தன் அனுபவத்திலிருந்து இப்படி அழகாகப் பாடம் சொல்கிறார் உடையாம்பாளையம், கார்த்திகேயன். இவர், தன் சொந்த முயற்சியில் சூரிய சக்தியில் இயங்கும் விசைத் தெளிப்பான் (சோலர் பவர் ஸ்பிரேயர்) ஒன்றை மிகஎளிதாக வடிவமைத்து, அதன் மூலம் நிறைந்தப் பலனை அடைந்து கொண்டிருக்கிறார்.
உடையாம்பாளையம், கோயம்புத்தூர் மாநகர எல்லைக்குள் வரும் பகுதி, இதையே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு... காய்கறி, கீரை, மலர் சாகுபடி என்று தினந்தோறும் காசு தரும் 'மார்க்கெட் வெள்ளாமை’ செய்து நல்ல வருமானமும் பார்த்து வருகிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.  ரசாயன முறையில் விவசாயம் செய்தாலும் சரி... இயற்கை வழியில் செய்தாலும் சரி... விசைத் தெளிப்பானின் பயன்பாடு முக்கியமே. ஆனால், பெட்ரோல் விலை உயர்வு, மின்சாரத் தட்டுப்பாடு என்று பலவும் தாண்டவமாடுவதால்... விசைத் தெளிப்பான்களைப் பயன்படுத்துவதில் ஏக பிரச்னை. 'என்ன செய்யலாம்' என்று யோசித்தபோதுதான் நண்பர்கள் உதவியுடன் 'சூரியசக்தி விசைத் தெளிப்பான்' உருவாக்கிவிட்டார் கார்த்திகேயன்.
தன் கீரை வயலுக்கு மருந்து தெளித்த கையோடு, பக்கத்தில் உள்ள நண்பரின் செண்டுமல்லித் தோட்டத்தில் தெளித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரைச் சந்தித்தோம். ''நாங்க எல்லாம் பட்டணத்து விவசாயிங்க, ஒரு காலத்துல பருத்தி, வாழை, கரும்புனு செழிப்பான வெள்ளாமை கொடிகட்டி பறந்த ஊருங்க இது. நகரமயமாக்கல்ல தொழிற்சாலை, குடியிருப்புகள்னு... காடு, கழனியெல்லாம் கட்டடமாயிடுச்சு. இதுலயும் ஒரு நன்மை இருக்குங்க. என்னைப் போல சிலர் விவசாயத்தை இன்னும் விடாம செய்யறதால... நல்ல லாபம் பார்க்கிறோம். மக்கள் தொகை பெருகப் பெருக, அவங்களுக்கான காய்கறி தேவையையும் மனசுல வெச்சு சாகுபடி செய்து, உள்ளூரிலேயே உற்பத்திப் பொருளுங்கள வித்து தீர்த்துடறோம். ஆனா, ஆள் பற்றாக்குறை இருக்கறதால... கால் ஏக்கர், அரை ஏக்கர்னுதான் விவசாயம் பண்ண முடியுதுங்க'' என்று ஆதங்கப்பட்டவரிடம், சூரியசக்தி விசைத் தெளிப்பான் உருவாக்கியது பற்றி கேட்டோம்.
படுத்தி எடுத்த ஸ்பிரேயர்கள்!
''அரை ஏக்கரில் பல ரக கீரைகளைப் போட்டிருக்கேன். இன்னொரு அரை ஏக்கரில் வாழை நட்டிருக்கேன். பக்கத்து வயல்கள்ல செண்டுமல்லி, கோழிக்கொண்டைனு மலர் சாகுபடியை நிறையபேரு செய்றாங்க. அவங்க தோட்டத்துப் பயிருக்கெல்லாம் பூச்சிக்கொல்லி தெளிக்கிற வேலையும் நமக்கு வந்து சேரும். மேலும் கீழும் கையால இழுத்து இழுத்து, ஹேண்ட் ஸ்பிரேயர் மூலமாதான் ஆரம்பத்துல தெளிச்சேன். ஆனா, ஒரு பத்து டேங் அளவுக்குத் தெளிக்கறதுக்குள்ள கை வலி எடுத்துடும். 'சரி, பவர் ஸ்பிரேயர்’ல தெளிக்கலாம்னு அதையும் செஞ்சு பார்த்தேன். பெட்ரோல் விக்கிற வெலைக்கு, என்னை மாதிரி சின்ன அளவுல விவசாயம் பண்றவங்களுக்கு கட்டுப்படியாகல. போதாக்குறைக்கு அது போடுற சத்தம் அக்கம்பக்கத்துல தொந்தரவா இருக்குனு குற்றச்சாட்டு வேற. வெயிட்டும் ரொம்ப அதிகம். பொழுதன்னிக்கும் சுமந்து தெளிக்கறது ஆகற காரியம் அல்ல.
'மாற்று வழியா என்ன செய்யலாம்?'னு யோசிச்சப்பதான், 'பேட்டரி ஸ்பிரேயர், மானிய விலையில் விவசாய ஆபீஸ்ல கிடைக்கும்'னு கேள்விப்பட்டு முறைப்படி பதிவு செய்து வாங்கினேன். சார்ஜர் பேட்டரியில இயங்குற அந்த ஸ்பிரேயர்,
10 லிட்டர் கொள்ளளவு கொண்டது. ரெண்டு மணி நேரம் சார்ஜ் ஏத்தினா, ஒரு மணி நேரம் (100 லிட்டர்) தெளிக்கலாம். அப்புறம் வீட்டுக்கு வந்து ரெண்டு மணி நேரம் சார்ஜ் ஏத்தணும். கரன்ட் கட் பயங்கரமா இருக்கற நேரம்கிறதால... சார்ஜ் ஏத்த முடியாம போய், பாதி வெள்ளாமை காலி ஆயிடுச்சு.
நிம்மதி தந்த நிரந்தரத் தீர்வு!
'நிரந்தரத் தீர்வு வேணும்'னு தேடினப்போதான்... 'சோலார் பவரை பயன்படுத்தி வீட்டு லைட், விவசாய பம்ப்செட் எல்லாத்துக்கும் மின்சாரம் தயாரிக்க முடியும்ங்கிறப்ப... ஏன் சோலார் பவர் ஸ்பிரேயர் உருவாக்கக் கூடாது'னு தோணுச்சு. உடனே, புதுசா ஒரு பேட்டரி ஸ்பிரேயர் (7 ஏ.ஹெச். பேட்டரி உள்ளது), 10 வாட்ஸ் சோலார் பேனல் (பள்ளிக்கூட ஸ்லேட் அளவில் இருக்கும்) இதையெல்லாம் வாங்கினேன். அந்த பேனலை, ஸ்பிரேயர் டேங்க்ல பொருத்தினேன். சோலார் ஸ்பிரேயர் தயாராயிடுச்சு. இதுக்கு மொத்தமே. வெறும் 4,600 ரூபாய்தான் செலவு. ஆனா வரவு... பல ஆயிரங்கள்'' என்று குஷியோடு சொன்ன கார்த்திகேயன்,
''காலையில 7 மணியில இருந்து சாயந்திரம் 3 மணி வரை தொடர்ந்து, இதைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி தெளிக்கிறேன். கரன்ட் பத்தி கவலைப்படாம சரியான நேரத்துல தெளிச்சு பயிர்களைக் காப்பாத்த முடியுது. சில பயிர்களுக்கு அதிகாலை நேரத்துலதான் மருந்து தெளிக்கணும். அதுக்கு தோதா முந்தின நாள் சாயந்திரமே கரன்ட் மூலமா சார்ஜ் போட்டு வெச்சுட்டா... தெளிக்கலாம். விடிஞ்சதும் சார்ஜ் ஏத்துற வேலையை ஆட்டோமேட்டிக்கா சோலார் பேனல் கவனிச்சுக்கும்.
டெல்டா மாவட்டங்கள்ல, மின்சாரம் சரிவர கிடைக்காத இந்தக் காலத்துல... ஹேண்ட் ஸ்பிரேயர், பவர் ஸ்பிரேயர்னு வெச்சுக்கிட்டு ரொம்ப சிரமப்பட்டுதான் அங்கெல்லாம் விவசாயிங்க நெல்லு பயிர் பண்றாங்க. அவங்களுக்கு இது பயன்தரும். வாடகைக்குத் தெளிக்கறவங்களுக்கும் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தக் கரைசல்னு இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துறவங்க... நல்லா வடிகட்டி பயன்படுத்தணும்'' என்று ஆலோசனைகளையும் தந்தவர், நிறைவாக,
''சோலார் மாதிரியான இயற்கை சக்திகள் குறித்த விழிப்பு உணர்வு மக்கள்கிட்ட ரொம்ப குறைவாவே இருக்கு. என்னை மாதிரி சின்ன விவசாயிகளும் சூரியசக்தியைப் பயன்படுத்தி பலனடையறதுக்குத் தேவையானத் திட்டங்கள், முயற்சிகள்னு அரசாங்கம் முழு உத்வேகத்துடன் செயல்படுத்தினா... எரிபொருளுக்காக எங்கயும் நாம கையேந்தத் தேவையே இருக்காது'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.
நிஜம்தானே!

0 comments:

இந்தியாவின் ரன் மெஷின்! கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் கிரிக்கெட், ஒரே ஒருவரால்தான் அதிகம் நேசிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஒருவர்... சச்சின்



கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் கிரிக்கெட், ஒரே ஒருவரால்தான் அதிகம் நேசிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஒருவர்... சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். இவரின் கிரிக்கெட் சகாப்தம் இதோ முடிவுக்கு வருகிறது! 
மும்பை, வான்கடே மைதானத்தில் தனது 200-வது டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிவிட்டு, கிரிக்கெட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வு எடுக்கவிருக்கிறார் சச்சின்.
இனி இந்தியக் கிரிக்கெட்டை, சச்சினுக்கு முன் - சச்சினுக்குப் பின் என்றே குறிப்பிடலாம். ஒரு பேட்ஸ்மேனாகவும் சக மனிதனாகவும் சச்சின் எத்தனை தன்மையான மனிதர் என்பதைப் பகிர்ந்துகொள்கிறார்கள் அவருடன் பழகிய கிரிக்கெட் பிரபலங்கள்...
சடகோபன் ரமேஷ், முன்னாள் கிரிக்கெட் ப்ளேயர்:
''2002-ம் வருடம் சென்னையில் ரோட்டரி அமைப்பு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றுக்கு சச்சினை அழைத்திருந்தது. அந்த நிகழ்ச்சிக்கென ஐந்து நிமிடங்கள் நேரம் கொடுத்த சச்சின், குழந்தைகளைப் பார்த்ததும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர்களுடன் பேசிச் சிரித்துக்கொண்டு இருந்தார். விடைபெறும் சமயம், 'எங்ககூட கிரிக்கெட் விளையாடுவீங்களா?’ என்று அந்தக் குழந்தைகள் கேட்க, 'அடுத்த சென்னை டிரிப்ல கண்டிப்பா உங்களோட விளையாடுவேன்’ என்று சொல்லிச் சென்றார் சச்சின்.
]
மூன்று மாதங்கள் கழித்து ரஞ்சி போட்டிக்காக சென்னை வந்தார் சச்சின். கடைசி நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளையின்போது என்னிடம், 'அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டுக்கு இன்று மாலை கூட்டிப் போக முடியுமா? அந்தக் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாட வேண்டுமே!’ என்று கேட்டார். போட்டி முடிந்ததும்  போலீஸ் பாதுகாப்புடன் அடையாறுக்குச் சென்றோம். இருட்டும் வரை சுமார் இரண்டு மணி நேரம் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அந்தக் குழந்தைகளோடு குழந்தையாக விளையாடி மகிழ்வித்தார் சச்சின். அங்கு ஒரு பெண்ணுக்கு, மறுநாள் சிக்கலான ஒரு ஆபரேஷன் என்று தெரிந்ததும், அந்தப் பெண் கேட்ட கேள்விகளுக்கு ரொம்பவே ஜாலியாகப் பதில்சொல்லி அரட்டையடித்து அந்தப் பெண்ணை ரொம்ப உற்சாகப்படுத்தினார். சச்சின் போன்றவர்களால் ஒரு வாக்குறுதி கொடுப்பது சிரமம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது, அதைவிட சிரமம். ஆனால், அத்தனை எளிமையாக, இனிமையாக வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சச்சினுக்கு நிகர் அவர்தான்!''
ராம்கி, இந்திய கிரிக்கெட் அணியின் பெர்ஃபார்மன்ஸ் அனலிஸ்ட்:
''2003-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு டூர் சென்றிருந்தபோது சச்சின் மோசமான ஃபார்மில் இருந்தார். முதல் டெஸ்ட்டில் டக் அவுட், இரண்டாவது டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 38 ரன்கள், மூன்றாவது டெஸ்ட்டிலும் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் எனத் திணறல். நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பு, 'நான் எக்ஸ்ட்ரா கவர் டிரைவ் ஷாட் அடிக்கும்போதுதான் அவுட் ஆகிறேன். இந்த மேட்ச்சில் ஒரு ஷாட்கூட எக்ஸ்ட்ரா கவர் டிரைவ் பக்கம் ஆட மாட்டேன்’ என்று சொல்லிவிட்டுக் களமிறங்கினார். அந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சச்சின் 241 ரன்கள் நாட் அவுட். இரண்டாவது இன்னிங்ஸில் 60 ரன்கள் நாட் அவுட். மொத்தம் 38 பவுண்டரிகளை விளாசினர். ஆனால், ஒரு ஷாட்கூட எக்ஸ்ட்ரா கவர் டிரைவ் பக்கம் செல்லவில்லை.
ஒரு பேட்ஸ்மேன் ஒரு ஸ்ட்ரோக்கைத் தேர்ந்தெடுப்பது, பந்து எப்படி வருகிறது என்பதைப் பொறுத்தே அமையும். ஆனால், எந்த வகையான பந்துகளை வீசினாலும் குறிப்பிட்ட ஷாட்டை மட்டும் ஆடாமல் ஒருவரால் கட்டுப்பாடாக இருக்க முடியும் என்பதை அன்றுதான் பார்த்தேன். அதனால்தான் சச்சின் ஜீனியஸ்!
யாரிடமும், 'எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும். நான் சொல்வதைக் கேள்’ என்ற மனப்பான்மையுடன் பழக மாட்டார் சச்சின். அதேபோல யார் மனதும் புண்படும்படி பேசிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்.
ஒருசமயம் ஷேவாக் மிக மோசமான அவுட் ஆஃப் ஃபார்மில் இருந்தார். ஒரு போட்டியில்கூட சொல்லிக்கொள்ளும்படி ஸ்கோர் செய்யவில்லை. அந்த நேரம் அதுகுறித்து சச்சினும் ஷேவாக்கிடம் எதுவுமே பேசவில்லை. பயிற்சியின்போது ஆவேசமாக பந்தைத் தூக்கி அடித்தார் ஷேவாக். சச்சின் அவரிடம், 'ஏன் இப்படி ரஃப்பா விளையாடுற?’ என்று கேட்க, 'நான் அவுட் ஆஃப் ஃபார்ம். நீங்க அதுக்காக என்கிட்ட பேசக்கூட மாட்டேங்கிறீங்க’ என்று ஆதங்கத்தைச் சொல்ல, அன்று முழுக்கப் பயிற்சியின்போது ஷேவாக்குடனே இருந்தார் சச்சின்.
பயிற்சி முடிந்ததும் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் ஷேவாக் 309 ரன்கள் அடித்தார். அந்தப் போட்டியில் சச்சின் 194 ரன்கள் நாட் அவுட். ஷேவாக் அந்தப் போட்டியில் மூன்று சதம் அடிக்க முழுக்கவே உதவியாக இருந்தவர் சச்சின்தான். நல்ல ரிதமில் விளையாடிக்கொண்டிருக்கும்போது சட்டென கவனம் சிதறி, மோசமான ஷாட் அடித்து அவுட் ஆவது ஷேவாக் பழக்கம். ஆனால், அவருடைய கவனம் சிதறிவிடாமல், தொடர்ந்து பேசியும் உற்சாகப்படுத்தியும் ஷேவாக்கை 300 ரன்கள் அடிக்கவைத்தார் சச்சின். தன் அறிவை, ஆற்றலை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் குணம் சச்சினுக்கு உண்டு.
சச்சின் 25 வருடங்களாகத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதற்குக் காரணம், அவர் கடைப்பிடிக்கும் ஒழுக்கம்தான். போட்டிக்கு முந்தைய நாள் வெளியில் எங்கும் போக மாட்டார். பயிற்சிக்கு ஒருமுறைகூட நேரம் தவறியதே இல்லை. அவருக்காக யாரையும் காக்கவைக்க மாட்டார். பால்ய காலத்தைச் செலவழித்த மிடில் கிளாஸ் நபராக இன்றும் செயல்படுவார் சச்சின். இப்போதும் ஏதாவது ஒரு பொருள் வாங்கவேண்டும் என்றால் பலமுறை யோசித்து, இணையத்தில் அதன் விமர்சனங்களைப் படித்துவிட்டுத்தான் வாங்குவார். 'என் அம்மா கொஞ்சம் கொஞ்சமாக காசை மிச்சம் பிடித்து, பஸ் டிக்கெட் எடுத்து என்னைப் போட்டிகளில் பங்கேற்க அழைத்துச் செல்வார். அதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்!’ என்பார் சச்சின்!''
'என் மனம் என்ன சொல்கிறதோ, அதைப் பொறுத்தே என் ஓய்வு அமையும். ஓய்வு பெறும் தருணத்தை வேறு எதனோடும் ஒப்பிட முடியாது. ஓய்வு முடிவு என்பது மிகவும் கடினமானது. கடந்த 30 வருடங்களாக கிரிக்கெட்டைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. நான் என்ன செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை!’ - ஓய்வுகுறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் கூறிய வார்த்தைகள் இவை.
இந்தத் தருணம், சச்சினுக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் மிகவும் கடினமான தருணம்!

சாதனை  நாயகன்!

மொத்தம் 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் சச்சின், 18,426 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் 49 சதங்கள், 96 அரை சதங்கள் அடங்கும். 199 டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள், 67 அரை சதங்கள் உள்பட 15,847 ரன்கள் குவித்திருக்கிறார்.

டெஸ்டிலும், ஒரு நாள் போட்டியிலுமாக சச்சின் விளாசிய 100 சதங்களும், 163 அரை சதங்களும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை எவரும் எட்டிப்பிடிக்க முடியாத உலக சாதனைகள்.

 20 வயதுக்குள் டெஸ்ட் போட்டிகளில் ஐந்து சதங்கள் குவித்தவர் என்ற சாதனை இப்போதும் சச்சினுக்கு மட்டுமே சொந்தம்!

 'ஒரே ஆண்டில் (2010) ஏழு சதங்கள் அடித்த இந்தியர்’ என்ற சாதனையை, தனது 36-வது வயதில் படைத்தார் சச்சின்.

 15 வருடங்களாக மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு ஸ்பான்சர் பெற்றுத்தரும் பொறுப்பு சச்சின் வசம்தான். மது, சிகரெட் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை, தனக்கு மட்டுமல்ல மும்பை கிரிக்கெட் அணிக்கும் ஸ்பான்சராக இதுவரை சச்சின் அனுமதித்தது இல்லை.

 விமானப் பயணத்தில் தூங்கிக்கொண்டு வரும்போதுகூட ஆர்வமிகுதியில் எழுப்பி ஆட்டோகிராஃப் கேட்கும் ரசிகர்களுக்கு, முகம் சுளிக்காமல் ஆட்டோகிராஃப் போடுவார் சச்சின். பல பிரபலங்களின் ஆட்டோகிராஃப் கிறுக்கலாக இருக்கும். ஆனால், சச்சினுடையதோ ஓர் ஓவியம் போல அழகாக இருக்கு

0 comments:

பெங்களூருவில் ஐ.டி. துறையில் பணிபுரியும் இளைஞர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், தனது அம்மா, சகோதரி ஆகியோரின்  படம் ஆபாசமாக இன்டர்நெட்டில் வெளியாகியிருக்கிறது. அதை போஸ்ட் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இருந்தார். போலீஸ் விசாரணையில் இறங்கியது. அந்தப் படத்தை போஸ்ட் செய்தது யார் தெரியுமா... புகார் கொடுத்தவரின் மனைவி. குடும்பச் சண்டையில் விவாகரத்து வாங்கிய அந்தப் பெண், பழைய பகையை இப்படித் தீர்த்துக்கொண்டுள்ளார். அந்தப் பெண்ணும் இப் போது கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுபோல, ஒரே வீட்டில்  இருக்கும் கணவன், மனைவிக்குள் ஈகோ மோதல் வரும்போது, இன்டர்நெட்டில் அவதூறுச் செய்திகளை போஸ்ட் செய்வது, மார்ஃபிங் செய்து அசிங்கமாகப் படத்தை போஸ்ட் செய்வது என்று சிலர் ஈடுபடுகிறார்கள். நேரடியாக எதிர்கொள்ளத் துணிவில்லாமல் மறைமுகமாக இதுபோல மனரீதியான டார்ச்சர் கொடுக்க நினைத்து போலீஸாரிடம் சிக்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகின்றன.
சாக்லெட் மாமாவும் ரகசிய கேமராவும்!
சென்னை, சூளைமேட்டில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வில் ஹும்ஸ் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளிடம் அன் பாகப் பேசுவார். சாக்லெட் கொடுப்பார். அவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று விளையாடி இருக்கிறார். பிறகு அந்தக் குழந்தைகளை தகாத உறவுக்கு பயன்படுத்தி இருக்கிறார். அதைத் கேம ராவிலும் வீடியோ எடுத்து நெட்டில் உலவ விட்டிருக்கிறார். இன்டர்போல் போலீஸ் இதைக் கண்டுபிடித்து, சென்னை போலீஸுக்குச் சொல்லியது. வில் ஹும்ஸ் கைது செய்யப்பட்டார். அதன்பிறகுதான் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு விஷயமே தெரிந்தது. இந்தச் சாக்லெட் மாமாவுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம்.
ஆயிரத்துக்கு பத்து!
சோழிங்கநல்லூரில் இருக்கும் இன்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் செய்த தகிடுதத்தம் வித்தியாசமானது. நம்பர் விளையாட்டு என்ற டெக்னாலஜியைத் தெரிந்துகொண்டு, அதைப் பயன்படுத்தி ஆன் லைனில் மோசடி செய்திருக்கிறார். டி.வி, ஃப்ரிட்ஜ் போன்ற பொருட்களை ஆன்லைனில் பர்ச்சேஸ் செய்வார். உதாரணத்துக்கு, ஆயிரம் ரூபாய்க்கு இவர் ஒரு பொருளை பர்ச்சேஸ் செய்கிறார் என்றால், இவரது அக்கவுன்ட் உள்ள வங்கிக்குப் போகும்போது நம்பர் விளை​யாட்டை செயல்படுத்துவார். ஆயிரம் ரூபாய் என்பதற்கு பதில் வெறும் பத்து ரூபாய்தான் டெபிட் ஆகும். ஆனால், வங்கிக் கணக்கில் இருந்து ஆயிரம் ரூபாய் பொருளை விற்கும் கம்பெனிக்குப் போகும். அதைப் பெற்றுக்கொண்ட கம்பெனி இந்த மாணவர் கேட்ட பொருளை சப்ளை செய்துவிடும். ஆக, அந்த மாணவருக்கோ, கம்பெனிக்கோ நஷ்டமில்லை. ஆனால், வங்கிக்குத்தான் நஷ்டம். ஒருகட்டத்தில், வங்கி அதிகாரிகள் உஷாராகி போலீஸுக்கு சொல்ல... அந்த மாணவர் பிடிபட்டார்.
ரகசிய சினேகிதன்!
பிரபல வங்கியின் பின்னணியில் செயல்படும் ஐ.டி. நிறுவனம் அது! அங்கு உயர் பதவியில் இருந்த ஒரு இளம்பெண், தனது காதலனுக்காக கம்பெனியில் திருட்டுத்தனத்தைச் செய் திருக்கிறார். நீண்டகாலமாகப் பயன்படுத்​தாத வங்கிக் கணக்குகள் எவை என்று கணக்கெடுத்திருக்கிறார். அந்தப் பணத்தை ரகசியமாக வேறு கணக்குக்கு மாற்றியிருக்கிறார். கணக்கில் பணம் குறைவதை எதேச்சையாகப் பார்த்த கஸ்டமர் வங்கியில் விசாரிக்க... அந்தப் பெண் மாட்டிக்கொண்டார். அதற்குள், ஒரு கோடி ரூபாயைச் சுருட்டி​விட்டார். காதலன் பணத்தை எடுப்பதற்குள் போலீஸ் மடக்கிவிட்டது. அவர் ஏற்கெனவே திருமணமானவர் என்பது கூடுதல் தகவல்.
- இப்படியாக தினமும் ஒரு சைபர் க்ரைம் சம்பவங்கள் நடக்கின்றன. வெளிநாடுகளில் ஒரு டாலருக்கு ஒரு​ வைரஸ் என்றெல்லாம் கிடைக்கிறதாம். இதை ஆன்லைனில் விலைக்கு வாங்கி தனக்கு வேண்டாதவர்களின் மெயில், செல் போன்களில் பரவவிடுகிறார்கள் சைக்​கோ குணம் கொண்ட சிலர். அவ்​வளவுதான்..! எதிர்தரப்பினரின் கம்ப்யூட்டர், செல்போன்களில் உள்ள அத்தனை தகவல்களும் காணாமல் போய்விடும். அவர் படும் அவஸ்தையைப் பார்த்து ரசிக்கும் குரூர குணம் உள்ளவர்களை என்ன செய்வது?
தலைவனை நெருங்காத போலீஸ்!
மதுரையில் ஒருமாதத்துக்கு முன், போலி கிரெடிட் கார்டு கும்பலைப் பிடித்தார் அப்போதைய போலீஸ் டெபுடி கமிஷனர் ஃபெரோஸ்கான் அப்துல்லா. பிடிபட்டவர்கள் சொன்னதில் இருந்து உலக அளவில் அதிக பண பரிவர்த்தனை செய்யும் பணக்காரர்கள் பற்றிய விவரங்களை வெளிப்படையாக விற்கும் வெப்சைட்டுகள் இருப்பதை அறிந்து அதிர்ந்தாராம். அங்கே பணத்தை ஆன்லைனில் செலுத்தி விவரங்களை மதுரைக் கும்பல் வாங்கி மோசடி செய்திருக்கிறது. மதுரை, திண்டுக்கல், நெல்லை என முக்கிய ஊர்களில் உள்ள பிரபல ஜுவல்லரி, துணிக்கடை போன்ற 17 நிறுவனங்களில் 80 லட்ச ரூபாய் வரை போலி கிரெடிட் கார்டில் சுருட்டியிருக்கிறார்கள். இதற்கு மதுரையில் உள்ள வங்கி ஒன்றின் அதிகாரியும் உடந்தை​யாம். இந்தக் கும்பலின் நெட்-வொர்க் வெளிநாடுகளுக்கும் நீண்டிருக்கிறது. திருச்சி ரவி என்பவன்தான் தமிழகத்தில் உள்ள போலி கிரெடிட் கார்டு மோசடிக் கும்பல்களுக்குத் தலைவனாம். அவனை இன்னும் போலீஸ் நெருங்கவில்லை.  தமிழகத்தில் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை மோச​டிப் பேர்வழிகள் ஆன்லைனில் ஏமாற்றியிருக்கிறார்கள்.
தலை... உடல்... ஆபாச எஸ்.எம்.எஸ்.!
சென்னை சைபர் க்ரைம் போலீஸ் என்ன சொல்கிறது? ''60 சதவிகிதம் பேர் செல்போன் வழியாக இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள். இதில் குடும்ப வன்முறைகள்கூட தொடர்புப் படுத்தப்படுகிறது. பழிவாங்கும் விதமாக, இன்டர்நெட்டில் உள்ள ஆபாசப் படங்களை எடுத்து தங்கள் குடும்பத்து நபர்களின் தலைப் பகுதியை மட்டும் அந்த உடலோடு இணைத்து போஸ்ட் செய்கிறார்கள். மனைவியின் டார்ச்சர் சகிக்க முடியாத கணவன் ஒரே வீட்டில் இருந்து கொண்டு மனைவிக்கே ஆபாச
எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார். அப்படியாவது, அவள் கவனம் வேறுபக்கம் திரும்பும் என்று தப்புக் கணக்குப் போட்டு சிக்கலில் மாட்டிக்​கொள்கிறார். இதேபோல, கணவரின் டார்ச்சர் தாங்கமுடியாத மனைவிகள் வேறு விதத்தில் கணவர் மீது அவதூறுகளைப் பரப்புகிறார்கள். இவர்கள் எங்களிடம் புகார் செய்வார்கள். யார் இதைச் செய்தது என்பதை தெரிந்துகொள்வதற்காகத்தான் எங்களிடம் வருகிறார்கள். எங்கள் விசாரணையில் இன்னார் என்று தெரிந்ததும், புகாரை வாபஸ் பெற்றுச் செல்கிறார்கள். நாங்களும் மனிதாபிமான முறையில் அதைக் கண்டுகொள்ளாமல்விட வேண்டியிருக்கிறது'' என்கிறார்கள்.
திருடப்படும் ரகசியங்கள்!
சென்னையில் உள்ள நாஸ்காம் (தகவல் தொடர்பு மற்றும் சாஃப்ட்வேர் தொழிற்சாலை​களின் கூட்​டமைப்பு) மண்டல இயக்குனர் புருஷோத்தமனிடம் இதுபற்றி கேட்டோம். ''இந்தியாவில் சுமார் 30 லட்சம் பேர் ஐ.டி. மற்றும் பி.பி.ஒ. துறைகளில் நேரடியாக ஈடுபட்டிருக்கிறார்கள். 1.2 கோடி பேர் இந்தத் துறைகளில் மறைமுக வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள். 100 பில்லியன் டாலர் புழங்கும் துறைகள் இவை. தமிழ்நாட்டில் மட்டும் மூன்றரை லட்சம் பேர் நேரடியாக ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி தரும் துறைகள் இவை. இப்போது, டேட்டா திருட்டுதான் பெரிய பிரச்னை. வெளிநாட்டு கம்பெனிகள் நம்ம ஊர் சாஃப்ட்வேர் நிறுவனங்களை நம்பித்தான் தங்களின் ரகசியங்களைத் தருகின்றன. இங்குள்ள சிலர் பணத்துக்கு ஆசைப்பட்டு அந்த ரகசியங்களைத் திருடுகின்றனர். இது தெரிந்தால், இந்திய சாஃப்ட் வேர் நிறுவனங்களின் நம்பகத்தன்மை பற்றி வெளிநாட்டினர் என்ன நினைப்பார்கள்? சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் எங்களிடம் வந்தார். வேலையை விட விரும்புவதாகவும் ஆனால், அவரை அந்த நிறுவனம் விடுவிக்க மறுப்பதாகவும் புகார் சொன்னார். விசாரித்தால், அவர் என்னென்ன ரகசியங்களை திருடியிருக்கிறார் என்று அந்த நிறுவனம் பெரிய பட்டியலே தருகிறது. இப்படிப்பட்டவரை என்ன செய்வது? இதேபோல், இன்னொரு நிறுவனத்தில் டேட்டா திருடிய நபரை பிடித்து ஜெயிலுக்கு அனுப்பினோம். பொதுவாகவே, ஐ.டி. துறையினரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும்தான் இந்தத் துறையில் ஈர்க்கப்படுகிறார்கள். அதேபோல், பாதிப்புகளும் இவர்களிடம்தான் அதிகம். அறிவு சார்ந்த தொழில்நுட்பத்தின் நல்லது கெட்டது குறித்து பள்ளியில் இருந்தே படிப்படியாக போதிக்க வேண்டும். அப்போது​தான், எதிர்காலத்தில் கெட்டது நடக்காது'' என்றார்.

சைபர் வார்!
இந்தியாவில் உள்ள மத்திய மற்றும் பெரு நிறுவனங்களின் தகவல் பாதுகாப்புக்கான விசேஷ 
சாஃப்ட்வேர்களை தயார் செய்கிறது ஃபிக்ஸ்-நிக்ஸ் என்ற தனியார் நிறுவனம். சென்னையில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சண்முகவேல் சங்கரன் நம்மிடம் பேசினார். ''உலகின் பெரிய நாடுகளுக்கு இடையே இந்த நிமிஷம்கூட சைபர் வார் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மூன்றாவது உலகப்போர் ஏற்பட்டால், நிச்சயமாக அது சைபர் போராகத்தான் இருக்கும். தரைப் படை, விமானப் படை, கப்பல் படை எதுவுமே  இல்லாமல் ஏ.சி. அறைக்குள் இருந்து கம்ப்யூட்டரை மட்டுமே பயன்படுத்திப் பேரழிவை உண்டாக்க 
தயாராகி வருகிறார்கள். உதாரணத்துக்கு, 2010-ம் ஆண்டு 'ஸ்டக்ஸ்நெட்' என்ற வைரஸை அமெரிக்கா ஏவியது. அது, ஈரான் நாட்டு அணுமின் உலை ஒன்றை நோக்கிப் போனது. அங்குள்ள முக்கிய சிஸ்டத்தை தாக்கியது. இதனால், அது செயல் இழந்தது. அந்த அட்டாக் ரிவர்ஸ் ஆகி, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முக்கிய கம்ப்யூட்டர் மையங்களையும் தாக்கி சேதப்படுத்தியது. ஈரான் விடுமா? பதிலுக்கு, அமெரிக்க வங்கிகள் மீது சைபர் போர் நடத்தியது. இப்படி மாறி மாறி போர் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் முக்கிய வெப்சைட்களில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 4,191 சைபர் அட்டாக் நடந்திருக்கிறது (முழு விவரங்களுக்கு... பார்க்க  வரைபடம்). எந்த ஒரு அவசர சூழ்நிலையையும் எதிர்கொள்ள எல்லா வகையிலும் இந்தியாவும் தயாராகத்தான் இருக்கிறது. ப்ரிசம், எட்வர்ட் ஸ்நவ்டன் லீக்குக்கு பிறகு, இந்தியர்களால் தயாரிக் கப்பட்ட மென்பொருட்களை மட்டுமே மத்திய அரசு உபயோகப்படுத்த விரும்புகிறது. இந்தவகையில், சுமார் 20 இந்திய தகவல் பாதுகாப்பு(information security) சாஃப்ட்வேர் தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட மத்திய அரசின் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள்'' என்றார்.

மெயிலைத் திறந்தால் வைரஸ் வரும்!
புதுடெல்லியில் உள்ள மைக்ரோ சாஃப்ட் இந்திய தலைமை கணினி பாதுகாப்பு அதிகாரி பா.கணபதி சுப்ரமணியத்திடம் பேசினோம். ''லாட்டரியில் நீங்கள் பரிசு வென்று இருக்கிறீர்கள் என்றோ, விலை உயர்ந்த கார் உங்களுக்கு காத்திருக்கிறது என்றோ வரும் மின்னஞ்சல்கள் உங்களுக்கு பரிச்சயமாக இருக்கக் கூடும். 'என் ராஜ் ஜியத்தில் பாதி தருகிறேன்’ என்றுகூட உங்களை வசியப்படுத்தலாம். ஆனால், அத்தனையும் டுபாக்கூர். உங்களை ஏமாளியாக்க செய்யப்படும் முயற்சிகள். தொடர்பே இல்லாத, முகமறியாத நபர் எதற்காக இப்படித் தர முன்வருகிறார் என நாம் யோசிப்பதில்லை. அந்த அஞ்சலுடன் இணைக்கப்பட்டிருக்கும் டாக்குமென்ட்களை நாம் தயக்கமின்றி திறந்து பார்த்தவுடன், ‘malware’ என்று அழைக்கப்படும் தீங்கிழைக்கும் வைரஸ்கள் யாருடைய அனுமதியுமின்றி நம் கணினியில் வந்து அமரக்கூடும். நம் கணினியில் நாம் வைத்துள்ள மற்ற டாக்குமென்ட்கள் மற்றும் சாஃப்ட்வேர்களை அழிக்கக் கூடும். வங்கித் தளங்களில் நாம் பயன் படுத்தும் பாஸ்வேர்டை நமக்குத் தெரியாமல் பதிவுசெய்து, இந்த வைரஸை பரப்பியவருக்கு பரிமாற்றம் செய்யும். தவிர, அந்த வைரஸ் வெகுவேகமாக நம் கணினியையும் அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் மற்ற கணினிகளுக்கும் வேகமாகப் பரவக்கூடும்.  Phishing  என்று அழைக்கப்படும் தூண்டில் இன்னொரு வகை அட்டாக். நிஜமான இணையதளம் போன்றதொரு தோற்றத்தில் தயாரிக்கப்படும் போலி தளங்கள் Phishing site   என அழைக்கப்படுகின்றன.

உதாரணத்துக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இணையத்தளம் போன்றதொரு போலியான தளத்தின் முகவரியுடன் உங்களுக்கு ஒரு மெயில் வரலாம். அத்தகைய இணைய தளங்களுக்குச் சென்று நாம் நம்முடைய பாஸ்வேர்டு கொடுத்து ஓப்பன் செய்யும்போது, நம் விவரங்கள் அந்தப் போலி தளத்தை இயக்கும் நபருக்குப் போய் சேருகிறது. பிறகென்ன? அந்த வசூல் ராஜாக்கள் நம்முடைய வங்கிக் கணக்குகளில் இருந்து சுல பமாகப் பணத்தைத் திருடுகின்றனர்'' என்றவரிடம், ''இதுபோன்ற சைபர் தாக்குதல்களில் இருந்து நாம் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?'' என்று கேட்டோம்.
''போலி சாஃப்ட்வேர்களை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தாதீர்கள். தீங்குகள் தரக்கூடிய பல வைரஸ் மற்றும் நாசம் விளைவிக்கக் கூடிய சாஃப்ட்வேர்கள் அத்தகைய போலிகளுடன் மறைந்து வரலாம். ஆண்டாண்டு காலமாக நாம் சேர்த்து வைத்திருக்கும் தகவல்கள் ஒரு நொடியில் காணாமல் போய்விடும். எந்த பிரபல நிறுவனத்தின் சாஃப்ட்வேர்களை பயன்படுத்தினாலும் அவற்றின் லேட்டஸ்ட் வெர்சன்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
மெமரி கார்டு, பென்டிரைவ் ஆகியவை மூலமும் வைரஸ் பரவும் ஆபத்து உண்டு. உங்கள் கணினியில் வேறு நபர்களின் மெமரி கார்டு, பென்டிரைவ் ஆகியவற்றைப் பயன்படுத்தாதீர்கள். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டிஃபென்டர் என்ற மென்பொருளை இலவசமாகத் தருகிறது. www.microsoft.com என்ற முகவரியில் இருந்து நீங்கள் அதை டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட வைரஸ் தடுப்பு சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்துவது சரியல்ல. அத்தகைய சாஃப்ட்வேர்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு, அதனால் சில சமயங்களில் பிரச்னைகள் ஏற்படும்'' என்று எச்சரிக்கை செய்தார்.
கண்ணுக்குத் தெரிந்த எதிரியாக இருந்தால் சமாளிக்கலாம். கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை என்ன செய்வது? உஷாராக இருக்க வேண்டிய தருணம் இது.
- பாலகிஷன்

0 comments:

கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்!

உடம்பு அனலாக் கொதிக்குது... தொண்டையில எச்சில்கூட விழுங்க முடியலை. அதுக்கு ஏதாவது மாத்திரை கொடுங்க'' - இன்று மருந்துக்கடையில் சர்வசாதாரணமாகக் கேட்கக்கூடிய வார்த்தைகள் இவை. டாக்டரைப் பார்க்க டோக்கன் வாங்கி, மணிக்கணக்கில் காத்திருக்கவேண்டும். கன்சல்டேஷன் ஃபீஸ் என்ற பெயரில் நூறோ, இருநூறோ மருத்துவருக்கு அழ வேண்டும். அவர் நான்கு - ஐந்து நாட்களுக்கு எழுதித் தரும் மருந்தை, மொத்தமாக வாங்கவேண்டும் என்பதால், பலரும் மருத்துவரை அணுகுவதற்குப் பதில் நேராகப் போய் நிற்கும் இடம் மருந்துக் கடை. நன்கு படித்தவர்களோ, இன்டர்நெட்டில் இந்த அறிகுறிகள் இருந்தால் என்ன பிரச்னை, அதற்கு என்ன மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று 'கூகுள் சர்ச்’ செய்துவிட்டு, மருந்து வாங்கிச் சாப்பிடுகின்றனர். இப்படி, மருந்துக்கடையில் டாக்டர் பரிந்துரை இன்றி, சுயமாக மருந்து வாங்குதல் (over the counter) அதிகரித்துவிட்டது. இந்தச் சுய மருத்துவத்தின் பாதிப்புகள் பற்றி, புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொது மருத்துவப் பேராசிரியர் பாலமுருகேசன் விரிவாகப் பேசுகிறார்.
'மக்கள் அதிக அளவில் மருந்துக்கடைகளில் வாங்குவது வலி நிவாரணிகள்தான். இபுப்ரூஃபென் (ibuprofen), கீட்டோப்ரூஃபென் (ketoprofen), நேப்ராக்ஸன் (naproxen) போன்ற வலி நிவாரணிகளை மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல் தொடர்ந்து உபயோகப்படுத்தும்போது அல்சர், இதயப் பிரச்னை, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். ஜலதோஷம் பெரும்பாலும் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. எந்தவித மருந்தும் இல்லாமல் ஏழே நாட்களில் தானாகவே சரியாகிவிடும். எனினும், ஜலதோஷம் வந்தால் உடனே குணமாக வேண்டும் என்று மருந்துக்கடைக்குச் சென்று, வலி நிவாரணி, ஆன்டிஹிஸ்டமின், ஆன்டிபயாடிக்ஸ் என்று மருந்துகளின் ஒரு சேர்க்கையை வாங்குகிறோம். இதற்கு ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளே தேவை இல்லை. இதைப்போல் ஆன்டிபயாடிக்ஸைத் தவறாகப் பயன்படுத்தும்போதுதான், 'ஆன்டிபயாடிக்ஸ் ரெசிஸ்டென்ஸ்’ உருவாகி மருத்துவ உலகுக்குப் பெரும் பிரச்னையாக விளங்குகிறது.
நோய்க்கு அளிக்கப்படும் மருந்தை எதிர்க்கும் தன்மையைக் கிருமி பெறுவதற்கு, 'ஆன்டிபயாடிக்ஸ் ரெசிஸ்டென்ஸ்’ என்கிறோம்.
நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் மருந்துக்கடைக்காரரின் கவனக்குறைவுதான் ஆன்டிபயாடிக்ஸ் ரெசிஸ்டென்ஸ் உருவாக முக்கியக் காரணம்.
மருந்தின் செயல்பாடு என்பது அளவு, வயது, ஒருவரது எடை, கிருமியின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும். எனவே, ஒருவருக்கு எவ்வளவு மாத்திரை கொடுக்க வேண்டும் எத்தனை நாட்களுக்கு அதை எடுத்துக்கொள்ள, பரிந்துரைக்க வேண்டும் என்பது டாக்டருக்கு மட்டுமே தெரியும்.
ஒரு நோய்க்கு ஐந்து நாட்களுக்கு மாத்திரை எடுத்துக்கொள்ளும்படி டாக்டர் பரிந்துரைக்கும்போது, நோயாளி, இரண்டு நாட்களில் நோயில் இருந்து பூரண குணம் அடைந்ததும் மாத்திரை போடுவதை நிறுத்திவிடுவார். நோய்க் கிருமி முற்றிலுமாக ஒழிய ஐந்து நாட்கள் மாத்திரை எடுத்திருக்க வேண்டும். இரண்டு நாட்களில் நிறுத்தியதால் கிருமி அழியாமல், அந்த மருந்து எதிராகச் செயல்படும் தன்மையை அடைந்துவிடும். பிறகு, மீண்டும் நோயை ஏற்படுத்தும்போது, அந்த மாத்திரை பலன் அளிக்காது. 'ஸ்டீராய்ட்’ என்பது, இருமுனைக் கத்தி போன்றது. 'ருமட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ்’, 'இடியோபதிக் த்ராம்போசைட்டோபீனிக் பர்புரா’ போன்ற பல்வேறு நோய்களுக்கு உயிர்காக்கும் மருந்தாக, 'ஸ்டீராய்ட்’ பயன்படுகிறது. ஆனால், அதைச் சரியாக உபயோகப்படுத்தாவிட்டால், சர்க்கரை நோய், கண்புரை போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும். பல மருந்துக் கடைகளில் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமலேயே இவை தாராளமாகக் கிடைக்கின்றன' என்றவர், இதைத் தடுக்கும் முறைகளை விளக்கினார்.
எந்த ஓர் உடல்நலப் பிரச்னைக்கும் சுய மருத்துவம் எடுத்துக்கொள்ளக் கூடாது.
மருத்துவர் ஆன்டிபயாடிக்ஸை, குறிப்பிட்ட கால அளவுக்கு எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினால், அறிகுறிகள் சரியானதும் நிறுத்தாமல் முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் போன்றவற்றுக்கு டாக்டர் பரிந்துரைத்த மாத்திரை மருந்துகளை, மீண்டும் காய்ச்சல் வந்ததும் நாமாக வாங்கிச் சாப்பிடுவது கூடாது.
தலைவலி போன்ற பிரச்னைகள் தொடர்ந்து நீடித்தால், மருத்துவரை அணுக வேண்டும்.
பி.ஃபார்ம் படிக்காமல் மருந்துக்கடையில் பணிபுரிபவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அலோபதி மருந்துகள் பற்றியும் அதன் பின்விளைவுகள் பற்றியும் அலோபதி மருத்துவர் மட்டுமே அறிவார். அலோபதி மருந்துகளை ஹோமியோபதி மற்றும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
- மு.ஜெயராஜ் படங்கள்: எஸ். தேவராஜன், எஸ்.பி.ஜெர்ரி ரினால்டு விமல்

0 comments:

நான் இசைப்பிரியா

நான் இசைப்பிரியா

ஓயாத கடலின் அலைகள்
இடைவிடாது என்னுடலில் மோதியபடி
மடிந்து சரிகின்ற வேளையில்
ஆழமாய் வேர்ப் பரப்பி
விரிந்திருக்கும் நீர்த்தாவரத்தைப் போல
என்னை இழுத்துச் செல்கிறாய்

என் காலடியிலிருந்து
ஒழுகி வழியும் நீர்த்துளிகள்
உன் அழித்தொழிப்புக்குச் சாட்சியாய்
வெளியெங்கும் உருண்டு கொண்டிருக்கும்.

அடர்ந்த வனத்தில் தனித்துத் திரியும்
மிருகத்தின் வெறிகொண்டு
என்னை வல்லுறவு செய்கின்றாய்

சதையை ஊடுருவிய உன்னால்
என் நிலத்தின் நிணநீர் ஓடும்
எலும்புகளை என்ன செய்ய இயலும்?

என் மார்பகங்களை அரிந்து வீசிய உனக்கு
அதன் அடியிலிருக்கும்
நெருப்பின் சூடு தகிக்கவில்லையா?

நீ ஏந்திய இரும்புக் கருவியும்
பாய்ச்சிய உடற்குறியும்
இனி எழுச்சியின் அமிலத்தில்
கரைந்தே போகும்

என் இரத்தத்தில் பூத்திருக்கும்
செங்காந்தள் மலர்களே
என் நிலமெல்லாம் செழித்திருக்கும்

வெகுகாலமில்லை வெகுதூரமுமில்லை.
                    - சுகிர்தராணி

ஈழ இன அழிப்புப் போருக்கு இன்னும் ஓர் ஆதாரமாக வெளிவந்திருக்கிறது இசைப்பிரியாவின் வீடியோ. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிட்ட சேனல் 4 தொலைக்காட்சி, இப்போது இசைப்பிரியா உயிருடன் நடமாடும் காட்சிகளை வெளியிட்டுள்ளது. மனதை கனக்கச் செய்யும் அந்தக் காட்சியில்... சேறு நிரம்பிய ஒரு வயல்வெளியில் இசைப்பிரியா வீழ்ந்து கிடக்கிறார். அவரது உடல் நிர்வாணமாக்கப்பட்டுள்ளது. அருகில் இலங்கை ராணுவ வீரர்கள் நிற்கின்றனர். இன்னொரு ராணுவ வீரர் கையில் ஒரு வெள்ளைத் துணியுடன் வருகிறார். அந்தத் துணியை இசைப்பிரியாவின் உடலின் போர்த்தி, அவரை அழைத்துச் செல்கின்றனர்.
''இவர்தான் பிரபாகரனின் மகள்'' என்று ஒரு ராணுவ வீரர் சொல்கிறார்.
''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா.
வெறும் மூன்று வார்த்தைகள்தான். அதை சொல்லும்போது இசைப்பிரியாவின் குரலை கவனியுங்கள்... சொல்ல முடியாத சோகம் மனதை கவ்விக்கொள்ளும். ஒரு மாபெரும் வீரப் போராட்டம் வீழ்ந்து போனதையும், எதிரிகளின் முன்னே நிர்வாணமாய் நிற்க நேர்ந்த அவமானத்தையும், கூட்டு வன்முறைக் குழுவிடம் சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணின் அச்சத்தையும், துடிக்கும் உயிரின் கடைசி நேர பரிதவிப்பையும்.... அந்தக் குரலில் உணரலாம். அது இசைப்பிரியாவின் குரல் மட்டும் அல்ல. அந்தக் காட்சியின் பின்னணியில் குண்டுச் சத்தங்கள் இடைவிடாமல் ஒலிப்பதைக் கேட்கலாம். அவற்றில் பல்லாயிரம் இசைப்பிரியாக்களின் உயிர் ஓலங்கள் உறைந்திருக்கின்றன. இசைப்பிரியா, அவர்களின் பிரதிநிதி.
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பிரிவில் செய்தி வாசிப்பா ளராக, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக பணிபுரிந்த இசைப்பிரியா கொல்லப்பட்டு வெள்ளைத் துணி போர்த்தி மூடிவைக்கப்பட்ட படத்தை ஏற்கெனவே சேனல் 4 வெளியிட்டு இருந்தது. அந்த வெள்ளைத் துணிக்குப் பின்னே மறைந்திருந்த கதைதான் இப்போதையை வீடியோவில் உள்ளது.
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வரும் சூழலில், இசைப்பிரியாவின் வீடியோ புதிய அழுத்தங்களை உருவாக்கியுள்ளது. இலங்கை அரசோ வழக்கம்போல, ''அது போலியான வீடியோ'' என்று புறங்கையால் மறுத்துள்ளது. அது மட்டுமல்ல... இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயகார, ''இந்தப் பொய்யான வீடியோவை மட்டும் காரணமாகக்கொண்டு, காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கக் கூடாது. இந்த விஷயத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்புகளை இந்திய அரசு பொருட்படுத்தத் தேவையில்லை; ஏனெனில் தமிழ்நாடு மட்டுமே இந்தியா அல்ல'' என்று கூறியிருக்கிறார். மனித உரிமை என்ற அம்சத்தில் இந்த வீடியோவை அணுகும் ஒருசில மேற்குலக நாடுகள், ஒருவேளை காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கலாம். இந்த வீடியோவுக்கு முன்பே காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதாக கனடா அரசு  அறிவித்து, அதற்கு இலங்கையின் போர்க்குற்றத்தையே காரணமாகவும் கூறியுள்ளது. வேறு எந்த நாடும் இதுவரை அப்படி அறிவிக்கவில்லை.
இந்த சமயத்தில் கடந்த ஆண்டு சேனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற ஆவணப் படத்தை நினைவில் கொண்டுவர வேண்டும். அப்போது வெளியிடப்பட்ட பாலச்சந்திரன் புகைப்படங்களால் தமிழகத்தில் மிகப் பெரும் மாணவர் போராட்டம் வெடித்தது. கட்டுக்கடங்காத அந்தப் போராட்டம் மாநிலம் தழுவியதாகவும், அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இருந்தது. இறுதியில்... ஒருங்கிணைக்கப்பட்ட தலைமையும், மைய நோக்கமும், அமைப்பு பலமும் இல்லாமல் மாணவர்களின் எதிர்ப்பு அரசியல் சிதறிப்போனது என்றாலும், அந்தப் போராட்டம் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான மாணவர்களை அரசியல் படுத்தியது. அதுபோன்ற பெருந்திரள் மாணவர் போராட்டத்துக்கான எழுச்சி இப்போது பெரிய அளவில் தென்படவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க... அத்தகைய எதிர்ப்புகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதில் மாநில அரசு முனைப்போடு இருக்கிறது. அதனால்தான் காமன்வெல்த் எதிர்ப்புப் போராட்டங்கள் அதிரடியாக முடக்கப்படுகின்றன. அதில் ஈடுபடுவோர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது.
இசைப்பிரியாவின் இந்த வீடியோப் பதிவு நம்மை நிலைகுலைய வைக்கிறது. இதுபோன்றுதானே ஒவ்வொரு விடுதலைப் புலி வீரனும் கோரமாக சித்ரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பான்? இதுபோன்றுதானே தமிழ் மக்கள் உயிர் வதையோடு உடல் சிதறி செத்திருப்பார்கள்? எந்த மண்ணில் காலூன்றி விடுதலைக் கனவுடன் போரிட்டார்களோ... அதே மண்ணில் எதிரிகளால் சிதைக்கப்பட்டு கொல்லப்படுவது அவலத்திலும் அவலம்.
- பாரதி தம்பி

0 comments:

குண்டு சப்தம் கேட்டாலே அவள் பயப்படுவாள்! கலங்கவைக்கும் இசைப்பிரியாவின் அக்கா

இசைப்பிரியா... சிங்கள பேரினவாதத்தால் கொடூரமாக கொல்லப்பட்ட தமிழ்ப்பெண். அரச பயங்கரவாதத்தின் அழியாத சாட்சி. அவரைப் பற்றி அறிய வெளிநாட்டில் இருக்கும் அவரது குடும்பத்தைத் தொடர்புகொண்டோம். இசைப்பிரியாவின் அக்கா தர்மினி வாகீசன் நம்மிடம் பேசினார். சொந்த சகோதரியைக் கொடூரமாய் பலிகொடுத்த சோகமும் அது சம்பந்தமான காட்சிகள் ஊடகங்களில் காணும் வேதனையுடனும் தர்மினி பேசினார். 
இதோ அவரது வாக்குமூலம்..
'அன்பான பாசமான குடும்பத்துல எல்லாப் பெண்களையும் போலதான் இசைப்பிரியாவும் வளர்ந்தாங்க. சின்ன வயசில இருந்து நல்லா படிச்சுக்கொண்டு இருந்தாங்க. இசைப்பிரியாவின் கூடப்பிறந்தவங்க நாங்க மொத்தம் ஐந்து பேர். இசைப்பிரியா நாலாவது பெண். மூன்று அக்கா ஒரு தங்கை. தங்கையும் போராளிதான். அவங்க பெயர் சங்கீதா. அவங்க போர்ல கலந்துகொண்டு காயப்பட்டு முகாமில் தங்கி இருந்தாங்க. ஊனமுற்றவர்கள் என்ற வகையில் ஆர்மியிடம் சிக்காமல் வெளிவந்துட்டாங்க. இசைப்பிரியா ப்ளஸ் டூ வரை படிச்சு இருக்காங்க. அப்புறமா அவங்களேதான் இயக்கத்துக்கும் மக்களுக்கும் ஏதாவது செய்யணும்னு சொல்லி இயக்கத்துல இணைஞ்சாங்க. ஆனா, அவங்களுடைய உடல் அதற்கு ஏற்றபடி இல்லாததுனால பயிற்சி எடுக்க முடியலை.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்யணும்னு சொல்லிட்டே இருப்பாங்க. சொன்னது மட்டும் இல்லாம களத்துல இறங்கியும் சேவை செஞ்சாங்க. அவங்க நல்லா பாட்டுப் பாடுவாங்க. நல்லா நடனமாடுவாங்க. கவிதையும் எழுதுவாங்க. அழகான கையெழுத்து அவங்களுக்கு. ரொம்ப மென்மையான குணம் கொண்டவங்க. 'நிதர்சனம்’ ஊடகத்துல பணிபுரிஞ்சாங்க. அவங்களுக்கு 25 வயதாக இருக்கும்போது அருட்செல்வனை காதலித்து கல்யாணம் பண்ணினாங்க. அவரும் போராளிதான். அவங்க இருவரும் ரொம்ப சந்தோஷமாக இருந்தாங்க. அவங்களுக்கு குழந்தையும் இருந்தது. குழந்தையின் பெயர் அகழ்யாழ்.
கடும்போர் சூழ்ந்து பதுங்கு குழிகளை வாழ்விடமாக்கி முதுகு வளைந்து மக்கள் நடமாடிய காலத்தில்கூட, அவங்க தன் குழந்தைகளையும் மறந்து உறவிழந்து தவிப்போரையும், காயமடைந்து மருந்தின்றி கிடப்போரையும் ஆற்றுப்படுத்துவதிலேயே தன் நாட்களைக் கழித்தாங்க. பதுங்கு குழியில்தான் அந்தக் குழந்தையின் வாழ்க்கையும் இருந்தது. அஞ்சு மாசம் இருக்கும்போது நோய் தாக்க, மருந்து இல்லாம, பணம் இல்லாம அந்தக் குழந்தை தவித்தது. சின்னக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் மருந்துகூட இல்லாம பெரியவங்களுக்குக் கொடுக்கும் மருந்தைக் கொடுத்ததால் அந்தக் குழந்தை பதுங்குகுழியிலயே இறந்துடுச்சு. அருட்செல்வனைப் பற்றி இப்போது எந்த தகவலும் இல்லை.
வன்னியில போர் நடந்துகொண்டு இருக்கும் போது நாங்க வெளிநாடு வந்தோம். வன்னியில உச்சக்கட்ட யுத்தம் நடந்ததால் சரணடைய ஒருபாதை வேணும்தானே... ஆனா, அப்படி ஒரு பாதையே அங்கு இல்லை. ஆர்மியை கடந்துதான் வெளியேற முடியும். இசைப்பிரியாவுக்கு அங்கு இருந்து வெளியே வருவதற்கு பயம் இருந்தது. அதுனால அங்கே இருந்தாங்க. பயம் மட்டும் காரணம் இல்லை.. கஷ்டப்படும் மக்களுக்கு இங்க இருந்து உதவிசெய்ய வேண்டும்னு நினைச்சாங்க. அதுனாலதான் வரல.
எல்லாருக்கும் உதவணும்னு நினைச்சாங்களே தவிர, ஆர்மி உடன் சண்டை பிடிக்கணும் என்ற எண்ணம் எல்லாம் அவங்களுக்கு இல்லை. குண்டுகள் தூரத்தில் வெடிக்கும்போதே ரொம்ப பயப்படுவாங்க. அதனால் முகாமுக்கு வராமல் அங்கயே இருந்தாங்க. ஆர்மி என்றால் அவர்கள் தமிழ் ஆட்களுக்கு செய்த கொடுமை எல்லாம் ஞாபகத்துக்கு வரும். அதுதான் ஆர்மியிடம் சரணடைய பயம். இனி வழி இல்லை குண்டு அடிப்பட்டு சாகப்போறோம் இனி ஒன்றும் செய்ய இயலாதென்று ஆர்மியிடம்தான் எல்லோரும் சரணடையப் போனாங்க. நாங்களும் சரணடைஞ்சோம். கடைசி தங்கச்சிதான் அவகூட கடைசியாக இருந்துட்டு வந்தாங்க. 'அம்மாகூட போ. எல்லோரையும் நல்லா பார்த்துக்கோ’னு மட்டும் சொல்லி இசைப்பிரியா, தங்கையையும் அனுப்பிட்டாங்க. அதன் பிறகு யாருமே அவங்களைப் பார்க்கல. இப்போது சேனல் 4 வெளியிட்ட வீடியோவில் இருப்பது இசைப்பிரியாதான். என் தங்கை இருக்கும் அந்த வீடியோவைத்  திரும்பத் திரும்ப காட்டி எங்களை ரொம்ப காயப்படுத்துறாங்க.
உங்க பத்திரிகை மூலமாக எல்லா ஊடங்களுக்கும் ஒரு தகவல் சொல்ல விரும்புறேன்...  நாங்க தமிழர். எங்களுக்கென்று கலாசாரம் இருக்கு. நாங்க வீரத்தோடு, மானத்தையும், பாசத்தையும் எங்க குடும்பம் ஒருசேர வளர்த்து இருக்கு. எங்க சமுதாயம் அப்படிதான் இன்னும் இருக்கு. 'நாங்க ஒரு பிரச்னைக்குத் தீர்வு காணப்போகிறோம். சிங்களத்துக்கு எதிராக செய்யறோம்’னு சொல்லிட்டு, பெண்களுடைய ஆடை இல்லாத படங்களை, காட்சிகளை அப்படியே வீடியோவாகப் போடுறது, படமாகப் போடுறது ஆகியவற்றை எல்லாத் தமிழரும் எல்லா ஊடகங்களும் தவிர்க்கணும்.
இசைப்பிரியாவை மட்டும் நான் சொல்லவில்லை... ஒட்டுமொத்த தமிழ்ப் பெண்களுக்கும் சேர்த்து சொல்றேன். இசைப்பிரியா என்பவள் ஒரு கற்பனை கதாப்பாத்திரமல்ல. உயிருடன் சிறப்பாக வாழ்ந்து, நம் தமிழ் சமூகத்துக்காகவே உயிர் நீத்த ஒரு தமிழ்ப் பெண். அவளை இப்படிக் கொச்சையாக தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப காட்டி வருவது தர்மமா... நியாயமா? பூவினும் மென்மையான அந்தத் தாயின் காட்சிகளை கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சிகளாக்க வேண்டுமா? அவளது சகோதரியானதால் நான் மட்டுமல்ல... அவளை நேசித்த தாய்மடி உறவுகளும் இதை விரும்பவில்லை.
கண் மை விளம்பரத்துக்கு ஒரு பெண்ணைக் காட்டுவாங்க... கார் விளம்பரத்துக்குப் பெண்ணைக் காட்டுவாங்க. பெண்ணை விளம்பரப் பொருளாகப் பார்க்கிறாங்க. இங்கயும் ஒரு பெண் சம்பந்தமாக எந்தச் செய்தி வந்தாலும், பெண்களின் உடம்புகளைத்தான் போட்டுக் காட்டுறாங்க. இது வக்கிரமான சிந்தனை. இதுக்கு மிகுந்த மன வருத்தம் தெரிவிக்கிறேன். வர்ணனை செய்ய வேண்டிய விஷயங்கள் வேற இருக்கு. இதனை வர்ணனை செய்ய வேண்டாம்.
இப்போது வெளிநாட்டில் அம்மாவும் நானும் தங்கையும் இருக்கிறோம். ஆனா, எங்க உயிருக்கு பாதுகாப்பு இல்லதானே? அந்த நாட்டுல எங்களுக்குப் பாதுகாப்பு இல்லாததுனாலதான் அந்த நாட்டை விட்டு ஓடிவந்தோம். ஆனா அச்சுறுத்தல் இன்னமும் இருக்கு. எங்க குடும்பத்துக்கு எப்போதுமே அச்சுறுத்தல் இருக்கத்தான் செய்யுது. இந்தியா எதாவது செய்யும் என்று எதிர்பார்த்தோம். எங்களை வந்து காப்பாற்றும் என்று நினைத்தோம். ஐ.நா. வந்து எங்களைக் காப்பாற்றும் என்று காத்திருந்தோம். ஆனா, யாருமே கை கொடுக்கல. ஜெயலலிதா அம்மா ஆட்சி வந்ததும் நமக்கு ஏதாவது பண்ணுவாங்க, உதவுவாங்க என்று எதிர்பார்த்தோம். யாருமே உதவல. எல்லோரும் தங்களது அரசியல் நோக்கத்துக்காகத்தான் பயன்படுத்துனாங்க. யாரும் எங்களுக்கு தீர்வு தருவார்கள் என்று இனி நாங்க நம்பவில்லை!'' -தவிக்கும் வார்த்தைகளால் சொல்லி முடித்தார் தர்மினி.
- நா.சிபிச்சக்கரவர்த்தி

0 comments:

எனி டைம் மர்டர்!

பெங்களூருவின் பரபரப்பான உல்சூர் சாலையில் இயங் கும் ஏ.டி.எம். மையத்தில் நடைபெற்ற பயங்கரம், நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம். மையங்களின் பாதுகாப்பு பற்றிய அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது. ஏ.டி.எம். என்பதற்கு, எனி டைம் மர்டர் என்று புது அர்த்தம் வந்துவிடுமோ என்று பதைபதைக்கிறார்கள் மக்கள். 
பெங்களூருவில் வசிப் பவர் தனியார் வங்கி கிளை மேலாளர் ஜோதி உதய். கடந்த 19-ம் தேதி, உல்சூர் சாலையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக் கச் சென்றார். அப்போது, சாவகாசமாக உள்ளே நுழைந்த ஒருவன், ஏ.டி.எம். மையத்தின் கதவை இழுத்து மூடியுள்ளான். வெகுநேரம் கழித்து, ஏ.டி.எம். உள்ளே பணம் எடுக்க நுழைந்தவர்கள் ஜோதி உதய் வெட்டுப்பட்டு ரத்தக் காயங்களுடன் கிடப்பதைப் பார்த்து பதறி போலீஸுக்குத் தகவல் சொல்லியுள்ளனர். அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதி வான காட்சிகளைப் பார்த்த போலீஸாருக்கு இன்னும் அதிர்ச்சி விலகவில்லை.
ஆடு வெட்டப் பயன்படுத்தும் பயங்கரமான அரிவாளுடன் உள்ளே நுழைந்த அந்த ஆசாமி, ஜோதி உதய்யை சரமாரியாக வெட்டுகிறான். அவ னிடம் இருந்து தப்பிக்க அவர் அங்கும் இங்கும் ஓடுகிறார். ஆனால், கதவு மூடப்பட்டு இருப்பதால், அவரால் தப்பிக்க முடியவில்லை. சரமாரியாக வெட்டிவிட்டு, மிகவும் நிதானமாக அரிவாளில் படிந்திருந்த ரத்தக்கறையை துடைத்துவிட்டு வெளியேறுகிறான். அந்தக் காட்சிகள் தனியார் தொலைக்காட்சிகளில் வெளி யாக... இந்தியா முழுக்க உள்ள அனைவரும் திகிலில் உறைந்தனர்.
வளர்ச்சியடைந்த ஒரு மாநிலத்தின் தலைநகரில், பரபரப்பான வீதியில் இருக்கும் ஏ.டி.எம். மையத்தில் சர்வ சாதாரணமாக ஒரு கொடூரச் செயலைச் செய்துவிட்டு ஒருவனால் வெளியேற முடிகிறது என்றால், ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள தெருக்களில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்படும் ஏ.டி.எம்-களின் பாதுகாப்பைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
இந்தக் கொடூரச் சம்பவத்துக்குப் பிறகு தூக்கம் தொலைத்த கர்நாடக அரசு, செக்யூரிட்டிகள் இல்லாத ஏ.டி.எம். மையங்களை இழுத்து மூடியுள்ளது. தனிப்படைகளை அமைத்து குற்ற வாளியைத் தேடிவருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்களின் பாது காப்பு ஏற்பாடுகள் எந்த லட்சணத்தில் உள்ளது என்று அலசினோம்.
தமிழகத்தின் தலைநகரில் ஆரம்பித்து கடைக்கோடி கிராமங்கள் வரை உள்ள ஏ.டி.எம். மையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் மோசமான நிலையில்தான் உள் ளன. காவலாளியும் இல்லாத, கதவுகளும் இல்லாத ஏ.டி.எம். மையங்கள் சென்னை நகரிலேயே உள்ளன. காவலாளி உள்ள ஒருசில ஏ.டி.எம். மையங்களிலும் அவர்கள் சொல்லிக்கொள்ளும்படியாக செயல்படுவது இல்லை. 65 வயதைக் கடந்த அவர்கள், பகலிலேயே வாசலில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருக்கின்றனர். பல ஏ.டி.எம். மையங்கள் இரவு நேர பார் ஆகத்தான் செயல்படுகின்றன. பல இடங்களில் கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்படவே இல்லை. பெரும்பாலானவற்றில் பொருத்தப்பட்ட கேம ராக்களும் செயல்படுவது இல்லை.  
தமிழகத்தில் ஏ.டி.எம். மையங்களில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் பற்றியும், காவல் துறை மேற் கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் காவல் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.  
''காஞ்சிபுரத்திலும் சேலத் திலும் நள்ளிரவில் ஏ.டி.எம். மையத்துக்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த காவலாளிகள் வெட்டிக் கொல்லப்பட்ட சம் பவங்கள்தான் தமிழகத்தில் நடைபெற்ற ஏ.டி.எம். கொலைச் சம்பவங்கள். மற்றபடி, இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஏழெட்டு சம்பவங்களும் ஏ.டி.எம். மெஷினை உடைத்து கொள்ளையடிக்க நடைபெற்ற முயற்சிகள்தான். அவை அனைத்திலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர். இப்படி ஒவ்வொரு சம்பவம் நடக்கும்போதும், பாதுகாப்பைப் பலப்படுத்துங்கள் என்று வங்கி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி வருகிறோம்.
முதலில் அனைத்து ஏ.டி.எம். மையங்களுக்கும் செக்யூரிட்டிகளை  கண் டிப்பாக நியமிக்க வேண்டும். அப்படி நியமிக்கப்படுபவர்கள், அந்த வேலைக்குத் தகுதியான ஆட்கள்தானா என்பதைப் பார்த்து தேர்வுசெய்ய வேண்டும். பல இடங்களில் உள்ள செக்யூரிட்டிகள் நோயாளிகளாகவும் கண்பார்வை சரியில்லாதவர்களாகவும் உள்ளனர். அனைத்து ஏ.டி.எம். மையங்களுக்கும் காண்காணிப்பு கேமராக்களைக் கட்டாயமாக்க வேண்டும். அவை செயல்படுகிறதா என்பதை கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். இந்த இரண்டு ஏற்பாடுகளை முறையாகச் செய்துவிட்டாலே, பெரும்பாலான தவறுகளைத் தடுத்துவிட முடியும்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவோ, வேறு காரணங்களினாலோ கேமராக்கள் பழுதாகிவிடும் சமயங்களில், அந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கும் சேவை ஆட்டோ மெட்டிக்காக நிறுத்தப்படும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இப்போதைய தொழில் நுட்பத்தில் இது மிக எளிய வேலைதான். அது போல், பல வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களின் கதவுகள், உள்ளே நடப்பது தெரியாத வகையில், கறுப்பு ஸ்டிக்கரால் ஒட்டப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறு. இதை உடனடியாக அகற்ற வேண்டும். பாதி மறைக்கப்பட்டும் பாதி வெளி யில் தெரியும் வகையிலும் இருக்கலாம்.
கோடிக்கணக்கில் பணம் இருக்கும் இடம் ஏ.டி.எம். மெஷின்கள்தான். அவற்றை ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறங்களில் அமைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, வங்கி அலுவலகங்கள் மற்றும் லிஃப்டுகளில் உள்ளதைப்போல், அலாரம் வசதியை அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் அமைக்க வேண்டும். இது செலவு குறைவான ஒரு ஏற்பாடுதான். இது எதிர்பாராத ஆபத்து நேரத்தில், மக்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும். பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், ஆள் நடமாட்டம் குறைவான பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களையும் முற்றிலுமாக கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு மறைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம். மையங்களையும் தவிர்த்துவிட வேண்டும்.
காவல் துறை எப்போதும் ஏ.டி.எம். மையங்களைத் தீவிரமாகக் கண்காணிக்கிறது என்றாலும், பெங்களூரு சம்பவத்துக்குப் பிறகு ஏ.டி.எம். மையத்தை கண்காணிப்பதை கட் டாயமாக்கி உள்ளோம். ரோந்து சமயத்தில் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவு பிறப் பித்துள்ளோம். அத்துடன் பணியில் இருந்த காவலர், ஏ.டி.எம். மையத்தில் உள்ள குறிப்புப் புத்தகத்தில், கண்காணித்தற்கு அத்தாட்சியாக கையெழுத்துப் போட வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது'' என்றார்.
இதுபற்றி தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம். சேவை பொறுப்பாளரிடம் பேசினோம். ''ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பவரின் பாஸ்வேர்டு, அவர் எவ்வளவு தொகை எடுக்கிறார் போன்ற விவரங்களை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பதற்காகத்தான், ஏ.டி.எம். மைய கதவில் கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இப்போது அதை மாற்றி வருகிறோம். ஒரு வங்கிக்கு எல்லாப் பகுதிகளிலும் ஏ.டி.எம். மையங்கள் உள்ளதால், அவற்றை வங்கி நிர்வாகமே நேரடியாக கண்காணிப்பது முடியாத காரியம். அதனால், அவுட்சோர்ஸிங் முறையில் ஏ.டி.எம். மையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள், பராமரிப்பு போன்றவற்றை வெளியில் உள்ள நிறுவனங்களிடம் ஒப்படைக்கிறோம். எங்களிடம் இருந்து நல்ல தொகைதான் வாங்குகிறார்கள். ஆனால், அவர்கள் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு, பல தவறுகளை செய்கின்றனர். கண்காணிப்பு கேமராக்களையும் அந்த நிறுவனத்தினர்தான் அமைக்கின்றனர். ஆனால், அவை பழுதடைந்தால், உடனே சரிசெய்ய வேண்டும் என்பதில் அக்கறை செலுத்துவது இல்லை. இப்போது, பிரச்னை தீவிரமடைந்து உள்ளதால், முன்பைவிட அதிகமாக கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்டிப்பாக பலப்படுத்துவோம்'' என்றார்.
இதுபற்றி தனியார் செக்யூரிட்டி நிறுவன மேலாளர் ஜவஹர் என்பவரிடம் பேசினோம். ''வங்கிகள் எந்தளவுக்கு எங்களுக்கு நிதி ஒதுக் குகிறதோ அந்த அடிப்படையில் நாங்கள் பாது காப்பு ஏற்பாடுகளை செய்கிறோம். இவை அனைத் தும் எழுத்துப்பூர்வமான ஆவணங்களுக்குப் பிறகே செய்யப்படுகின்றன. அதனால், இதில் நாங்கள் ஏமாற்றுவதற்கு ஒன்றும் இல்லை.''  
ஆட்டோக்களுக்கு காலக்கெடு விதித்து மீட்டர் நிர்ணயித்ததுபோல், வங்கி ஏ.டி.எம்-களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்வதற்கும் அரசு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். கெடு முடிந்த பிறகும் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாத ஏ.டி.எம். மையங்களை இழுத்து மூட «வ்ண்டும். தமிழக அரசு இதைச் செய்துவிட்டால் பல அசம்பாவிதங்களை தடுத்து விடலாம்!
- ஜோ.ஸ்டாலின்

0 comments:

அமெரிக்காவை அல்லல்படுத்தும் புது மோசடி: பிட்காயின்... உஷார், உஷார்!

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு கரன்சி இருக்கிறது. உலக அளவில் எல்லா நாட்டின் கரன்சிகளும் எல்லா நாடுகளிலும் வியாபாரத்துக்கு மாற்றாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. டாலர், பவுண்டு, யூரோ, பிராங்க், யென் போன்ற சில பாப்புலர் கரன்சிகளே உலகம் முழுவதிலும் வியாபாரம் செய்வதற்கு உதவுகிறது. இதில் டாலர் உலகப்பிரசித்தம்.  
வெளிநாட்டில் இருந்து வாங்கும் பொருட்களுக்கு பெரும்பாலும் டாலர் களிலேயே பணம் தரவேண்டியுள்ளது. வெளிநாடுகளிலிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் போது, உள்ளூர் கரன்சியைத் தந்து டாலரை வாங்கி செட்டில் செய்ய வேண்டியுள்ளது. ஒரேநேரத்தில் பலரும் டாலர் வேண்டும் என்று கேட்டுவரும்போது அதன் மதிப்பு உயருகிறது; அதிகமாக விற்கப்படும் கரன்சியின் மதிப்பு குறைகிறது. இதுதான் கரன்சி சந்தையின் நடைமுறை.  
மாறும் கரன்சி மதிப்பு!
இயற்கையாக ஒரு கரன்சியின் மதிப்பு உயர்ந்து, இன்னொரு கரன்சியின் மதிப்பு குறைவது ஒருபக்கம் இருந்தாலும், வேண்டுமென்றே தகிடுதத்தம் செய்து (சண்டை மூட்டிவிட்டுகூட லோக்கல் கரன்சியின் தேவையை அதிகரிக்கச் செய்து), ஒரு நாட்டு பணத்தின் மதிப்பை இழக்கச் செய்வதும் சாத்தியம்தான். ஏனென்றால், பிரச்னை வரும்போது லோக்கல் அரசாங்கங்கள் கரன்சியை அச்சிட்டு புழக்கத்தில் விட்டுவிடும். அதிக அளவில் லோக்கல் கரன்சி புழக்கத்தில் இருக்கும்போது டாலரின் மதிப்பு அதிகரிக்கும்.
தவிர, ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சார்ந்ததாக கரன்சி இருப்பதால் அரசாங்கங்கள் தங்களின் தேவைக்கு  ஏற்றாற்போல் நோட்டை அச்சடித்து வெளியே விட்டுவிடுகின்றன. கன்ஸ்யூமருக்கான இறக்குமதி, சண்டையின்போது போர்த் தளவாடம் இறக்குமதி என பல்வேறு தேவைகளினாலும் டாலரின் தேவை அதிகரிக்கிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அரசியல்வாதிகளும், அதிபர்களும், அரசாங்கங்களும்தான். ஆனால், பாதிக்கப்படுவது என்னவோ, தனிமனிதர்களும் முதலீட்டாளர் களும்தான்.
விநோதமான தீர்வு!
இந்தப் பிரச்னைக்கு விநோதமான ஒரு தீர்வாக, அரசாங்கம் மற்றும் எந்தவொரு நாட்டுடனும் சம்பந்தமில்லாத கரன்சியைக் கொண்டுவருகிறோம் என்று சொல்லி, அடையாளம் தெரியாத ஒரு கும்பல் (இந்த பிட்காயினை வெளியிடுவது யார் என்பது கண்டுபிடிக்கப்படாத ரகசியமாக இருக்கிறது!) வெளியிட்டிருக்கும் வர்ச்சுவல் பணம்தான் இந்த பிட்காயின். இந்த கரன்சி எந்த நாட்டையும் சார்ந்ததில்லை. எந்த அரசும் இதை வெளியிடவில்லை. இதன் பின்னணியில் ரிசர்வ் வங்கிகள் ஏதுமில்லை.
இந்த கரன்சி எந்த அளவுக்கு புழக்கத்தில் இருக்கிறது என்பதை நிர்ணயம் செய்வதும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம்தான். 2030-ம் ஆண்டுக்குப் பிறகு 21 மில்லியன் பிட்காயின் கரன்சிகளை அதிகபட்சமாக வெளியிட்டு, அதற்குப்பின்னர் புது கரன்சிகள் எதையும் வெளியிடாமல் இந்த புரோகிராம் நிறுத்திவிடும் என்கிறார்கள்.
எந்த நாடும் வெளியிடாத இந்த கரன்சி எப்படி இருக்கும்? யார் இந்தக் கரன்சி குறித்த டேட்டாக்களை வைத்திருப்பார்கள்? என்று கேட்பீர்கள். பியர்-டு-பியர் கம்ப்யூட்டிங் என்ற டெக்னிக்கின் மூலமாக உங்கள் கம்ப்யூட்டரிலேயே இந்த கரன்சியின் விவரங்கள் இருக்கும். இதை வைத்து உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம் அல்லது விற்றும் கொள்ளலாம்.  
இது கரன்சியே அல்ல!
நிறைய இன்டர்நெட் ஸ்டோர்களும், நிறையக் கடைகளுமே இதை பெற்றுக் கொள்வதாகச் சொல்கின்றன செய்திகள். அமெரிக்க அரசின் சட்டப்படி, இது ஒரு கரன்சியே கிடையாது. பண்டமாற்று முறையைபோல் டாலரைத் தந்து இந்த பிட்காயினை வாங்குகிறார்கள். பின்னர் இந்த பிட்காயினைத் தந்து வேறு ஒரு சாமானை வாங்குகிறார்கள் (உதாரணத்துக்கு ஒரு டீ/காபி/புத்தகம் போன்றவை).
அமெரிக்க அரசாங்கமோ, இது முழுமை பெறாத அரைவேக்காட்டு சிஸ்டம். அமெரிக்காவுக்குள், பிட்காயின் பொருட்களுக்கு எதிராக மாற்றப்பட்டால் பண்டமாற்று சட்டம் அதைக் கண்காணிக்கும். யார் எத்தனை காயின் மாற்றுகிறார்கள், யாருக்குப் பணம் போனது என்று விசாரிப்போம் என்று எச்சரிக்கிறது அமெரிக்கா. இதுவும் தவிர, வருமானம், கேப்பிட்டல் கெயின்ஸ் டாக்ஸ் என்ற குழப்பமெல்லாம் வேறு இதில் நிறையவே இருக்கிறது.
ஏறியிறங்கிய மதிப்பு!
இந்த பிட்காயினின் மதிப்பு முதலில் 2009-ல் ஆரம்பிக்கப்பட்டபோது, 25 டாலராக இருந்து; பின்னர் 2011-ல் 250 டாலர் வரை சென்று; பின்னர் திடீரென 150 டாலர் வரை சரிந்து, பின்னர் 2013-ல் 900  டாலர் வரை சென்று, கடந்த வாரத்தில் 700 டாலருக்கு இருந்தது என்கிறார்கள். ஏன் இந்த ஏற்றஇறக்கம் என்றால் ஏகப்பட்ட ஸ்பெக்குலேட்டர்கள் இந்தச் சந்தைக்குள் புகுந்துவிட்டார்கள் என்கின்றனர் பலர்.
அமெரிக்கா மாதிரி சட்டதிட்டங்கள் கடுமையாக உள்ள நாட்டிலேயே இந்த காயின் குறித்து ஒரு தெளிவின்மையும், பிற்காலத்தில் பிரச்னையை உருவாக்கிவிடும் என்ற எண்ணமே அரசாங்கத்திடம் இருக்கிறது. எந்த நிமிடத்திலும் இந்தப் பிரச்னை பூதாகரமாக வெடிக்கலாம் என்றும் பலரும் பயப்படுகிறார்கள்.
இந்தியாவில் செல்லாது!
இந்தியாவில், பிட்காயின் சட்டப்படி செல்லுபடியாகாத ஒரு விஷயம். சட்டப்படி செல்லும் விஷயங்களிலேயே சிக்கல்கள் வந்து முதலீடு முழுவதும் பணால் ஆகிவிடுகிற இந்தக் காலத்தில், இதுபோன்ற சட்டப்படி செல்லாத விஷயங்களை வாசகர்கள் நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. நம்மூரில் புத்துணர்ச்சியுடன் அலையும் மோசடி கும்பல்கள் நேரிலோ, மெயிலிலோ உங்களிடம் வந்து, என்னிடம் பிட்காயின் இருக்கிறது என்று சொன்னால், 'அந்த 'பிட்டு’ எல்லாம் என்கிட்ட போடாதீங்க’ என்று விரட்டிவிடுங்கள். இல்லாவிட்டால், ஏமாறுவது நிச்சயம்... ஜாக்கிரதை!
- வேலாயுதம்.

0 comments: