read the tamil Special news and tips on Experts. Archive for 04/28/14
 .நம்ம வீடு.காம் தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

வளர்ச்சி அடைந்து வரும் மாதவரம்


வளர்ச்சி அடைந்து வரும் மாதவரம்



பதிவு செய்த நாள் : Apr 19 | 12:00 am



சென்னை புறநகர் பகுதிகளை நோக்கி குடியிருப்புகள் விரிவாக்கம் அடையத் தொடங்கியதில் இருந்து அந்த பகுதிகள் படிப்படியாக வளர்ச்சி பாதையை நோக்கி அடிஎடுத்து வைத்து வருகின்றன. அப்படிப்பட்ட பகுதிகளுள் ஒன்றாக விளங்குகிறது மாதவரம். புறநகர் பகுதியில் அமைந்து இருந்தாலும் வளர்ச்சி அடைந்து வரும் பகுதிகளுள் ஒன்றாக இருக்கும் பெரம்பூரின் வடபகுதியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்குள் அமைந்திருக்கிறது.

சாலை வசதி மேம்பாடு

பெரம்பூர் பகுதியை ஒப்பிடும்போது சமூக கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்தாலும் தற்போது படிப்படியாக மேம்பாடு அடைந்து வருகிறது. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உணவு விடுதிகள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்பு வசதிகள் மாதவரம் பகுதியை சூழ்ந்து இருக்கின்றன. மாதவரம்–செங்குன்றம் சாலை பகுதி சில முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் செல்வதால் அந்த பகுதிகளில் கட்டிடங்கள் பெருகிய வண்ணம் இருக்கின்றன.

அது தவிர நகரின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் சாலை வசதிகளும் மேம்பட்டு வருகின்றன. அதனால் மாதவரம் வழியாக முக்கிய பகுதிகளை சென்றடையும் இணைப்பு சாலைகள் அமைந்திருக்கும் பகுதிகளை கட்டிடங்கள் ஆக்கிரமித்த வண்ணம் உள்ளன. வர்த்தக ரீதியான கட்டிடங்கள் சாலைப்பகுதிகளில் அமைந்திருக்க, உட்புற பகுதிகளில் குடியிருப்புகள் பெருகிய வண்ணம் இருக்கின்றன.

சொத்து விலை குறைவு

பெரம்பூர் பகுதியை ஒப்பிடும்போது இங்கு சொத்து மதிப்பு விலை குறைவாக இருக்கிறது. அதாவது பெரம்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றின் விலை ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்றால் அதே சதுர அடி அளவு கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடு மாதவரம் பகுதியில் ரூ.40 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரையில் கிடைக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் பெரம்பூர் பகுதிக்கு இணையாக மாதவரம் பகுதியில் சொத்து மதிப்பு உயர்வடையவில்லை என்றாலும் பெருகி வரும் சமூக கட்டமைப்பு வசதிகள் வருங்காலத்தில் விலை மதிப்பை உயர்த்தும் என்பது ரியல் எஸ்டேட் நிபுணர் களின் கருத்தாக உள்ளது. ஏனெனில் மாதவரம் பகுதியை நோக்கி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதன் மதிப்பை உயர்த்தும் வகையில் இருக்கிறது.

வாங்குவதற்கு ஆர்வம்

அதற்கு ஏற்ப ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கட்டுமான திட்டங்கள் இருக்கின்றன. மாதவரம் பகுதியில் ஆங்காங்கே அடுக்குமாடி குடியிருப்புகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் புதிய கட்டுமானங்களை அமைக்க ஆயத்தமாகி வருகின்றன. அவை பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று படுக்கை அறை வீடுகளை கொண்டவைகளாக இருக்கும் விதத்தில் திட்ட மதிப்பீடு இருக்கிறது.

வீடுகளின் சதுர அடி மதிப்பு ரூ.3,750 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது இடத்தை பொறுத்து மாறுபடுகிறது. முக்கிய பகுதிகளில் சதுர அடி மதிப்பு ரூ.4,500 வரையிலும் நீளுகிறது. மற்ற பகுதிகளை விட சொத்து மதிப்பு குறைவாக இருப்பதால் பெரம்பூர் பகுதிக்கு அருகில் வசிக்கும் பலரும் மாதவரம் பகுதியில் சொத்து வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

முதலீடு நோக்கம்

அதிலும் பலர் எதிர்பார்க்கும் பட்ஜெட்டில் சொத்து வாங்குவதற்கு ஏற்ற பகுதியாக மாதவரம் இருக்கும் என்பது ரியல் எஸ்டேட் ஆலோசகர்களின் கருத்தாக இருக்கிறது. மேலும் நீண்ட கால முதலீடு நோக்கத்தில் சொத்து வாங்க நினைப்பவர்களுக்கும் மாதவரம் பகுதி சாதகமாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள். அதற்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகள் பெருகிவரும் பகுதியாக மாதவரம் தென்படுகிறது. உடனே வீடு கட்டி குடியேற முடியாதவர்கள் பார்வை ஆங்காங்கே காலியாக கிடக்கும் வீட்டுமனைகள் பக்கம் திரும்பி இருக்கிறது.

அனைத்து வசதிகளும் சூழ்ந்த பகுதியில் அமைந்திருக்கும் வீட்டுமனைகளை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். அவைகள் குறைந்த அளவிலேயே இருப்பதால் விலை மதிப்பு ஏறுமுகமாக இருக்கிறது. ஆகையால் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு முதலீடு நோக்கத்தில் சொத்து வாங்குவதற்கு ஏற்ற பகுதிகளுள் ஒன்றாக மாதவரம் விளங்குகிறது

தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!

0 comments:

முதியவர்கள் அறயை ஒழுங்குபடுத்துங்கள்!

முதியவர்கள் அறயை ஒழுங்குபடுத்துங்கள்!



-A+A


பதிவு செய்த நாள் : Apr 19 | 12:00 am



வீட்டின் அறைகளை விதவிதமான அலங்கார பொருட்களை கொண்டு அழகுபடுத்தினாலும் வீட்டில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் இருக்க வேண்டும். குறிப்பாக வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்களுக்கு ஏற்ப அறை வடிவமைக்கப்பட வேண்டியது அவசியம்.

தரையில் கவனம்

அவர்களுக்கு தனியாக அறை இருக்கும் பட்சத்தில் அவர்கள் பயன்படுத்துவதற்கு சவுகரியமாக இருக்குமாறு அறையை மாற்றி அமைக்கலாம். முக்கியமாக தரைத்தளத்தை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். அறையை அழகுபடுத்துவதில் டைல்ஸ்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்றாலும் அவை முதியவர்கள் நடப்பதற்கு ஏதுவாக இருக்க வேண்டும்.

அதனால் வழுக்கும் தன்மை கொண்ட பளபளப்பு டைல்ஸ்களை முதியவர்கள் அறையில் பதிப்பதை தவிர்த்து விட வேண்டும். அத்தகைய டைல்ஸ்கள் முதியவர்கள் நடப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். காலிலோ, தரையிலோ ஈரப்பதம் படிந்திருக்கும்போது நடந்தால் வழுக்கி விழுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அது அவர் களின் உடல் ஆரோக்கியத்திற்கு பங்கம் விளைவிக்க செய்துவிடும்.

சொரசொரப்பு தன்மை

ஆகையால் டைல்ஸ் பதிப்பதாக இருந்தால் சொரசொரப்பு தன்மை கொண்ட டைல்ஸ்களையே முதியவர்கள் பயன்படுத்தும் அறைகளில் பதிக்க வேண்டும். அதுபோல் குளியல் அறையிலும் சொரசொரப்பு தன்மை கொண்ட டைல்ஸ்களையே இடம்பெற செய்ய வேண்டும். அங்கு ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் வழவழப்பு தன்மை கொண்ட டைல்ஸ்களை பதிக்கக்கூடாது. நடக்கும் போது கால்களுக்கு பிடிப்பு தன்மையை கொடுக்கும் வகையில் டைல்ஸ்கள் தேர்வு இருக்க வேண்டும்.

மேலும் குளியல் அறையை முதியவர்கள் எளிதாக பயன் படுத்தும்படி வடிவமைக்க வேண்டும். தண்ணீர் குழாய்கள் அவர்கள் சிரமப்படாமல் திறந்து மூடுவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். அவர்கள் சிரமமின்றி நடந்து செல்வதற்கு ஏதுவாக கைபிடிகளை அமைக்க வேண்டும். கழிவறையிலும் மேற்கத்திய பாணி (வெஸ்டன் டாய்லட்) கழிப்பிடங்களை அமைப்பது நல்லது.

அலமாரியில் மாற்றம்

முதியவர்கள் பயன்படுத்தும் அறைகளில் அலமாரிகள் அதிக உயரத்தில் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். அவர்கள் பொருட்களை எடுப்பதற்கு சிரமமில்லாத வகையில் இருக்க வேண்டும். அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களை தனியாக அலமாரியின் கீழ்பகுதியில் வைப்பதற்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அல்லது மேஜையுடன் இணைந்த டிராயர்களை முதியவர்கள் பயன்படுத்தும்படி மாற்றி அமைக்கலாம். அவை பொருட்களை எடுத்து பரிமாறுவதற்கு சவுகரியமாக இருக்கும்.

மாடிப்படிக்கட்டுகளையும் அதிக உயரத்தில் அமைக்கக்கூடாது. ஒரு படிக்கட்டுக்கும், அடுத்த படிக்கட்டுக்கும் இடையே உள்ள உயரம் அவர்கள் எளிதாக ஏறி, இறங்குவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். படிக்கட்டு சுவர்களில் அமைக்கப்படும் கைப்பிடிகள் வழுக்கும் தன்மை கொண்டவையாக இருக்கக்கூடாது. படிக்கட்டு தரையிலும் டைல்ஸ் பதிப்பதை தவிர்க்க வேண்டும்.




தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!

0 comments:

வீ ட்டை அழகுபடுத்துகிறீர்களா?.. இதைப்படிங்க..


வீ ட்டை அழகுபடுத்துகிறீர்களா?.. இதைப்படிங்க..



வீட்டை அழகாக வைத்திருக்க அலங்கார பொருட்களை அடுக்கி வைத்து அலங்கரிப்பதற்கு தனிக்கவனம் செலுத்துபவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அலங்கார பொருட்கள் வீட்டை அழகாக தோற்ற செய்யும் என்ற எண்ணமே அதற்கு காரணமாக இருக்கும். எத்தகைய அழகியலை வெளிப்படுத்தும் அலங்கார பொருட்களாக இருந்தாலும் அவை இருக்கும் இடத்தை பொறுத்து தான் அதன் அழகு வெளிப்படும். அதற்கு எந்த பொருட்களை எங்கு வைத்தால் அழகுடன் ஆடம்பர தோற்றத்தை வெளிப்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அழகு பொருட்களாக இருந்தாலும் அதை ஒரே இடத்தில் குவித்து வைத்தால் அதன் தனித்துவ அழகை ரசிக்க முடியாமல் போய்விடும். அந்த அலங்கார பொருட்களை சூழ்ந்து மற்ற பொருட்களை அடுக்கி வைத்தால் அறையே அலங்கோலமாக காட்சி அளிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே பொருட்களை சரியாக ஒழுங்குபடுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தேவையில்லாத பொருட்கள் இடத்தை அடைத்து கொண்டு இருக்க கூடாது. அவை எப்போதாவது தான் தேவைப்படும் என்றால் அறைக்குள் சிறிய குடோனை ஏற்படுத்திவிட வேண்டும். அடிக்கடி தேவைப்படாத பொருட்களை குடோனின் மூலைப்பகுதியிலும், மற்ற பொருட்களை அதன் பயன்பாட்டை பொறுத்து முன்வரிசையிலும் அடுக்கி வைக்க வேண்டும்.

அப்படி ஒழுங்குபடுத்தினால் தேவைப்படும் போது பொருட்களை எடுப்பதற்கு சுலபமாக இருக்கும். அதேபோல் அறையின் மற்ற பகுதிகளிலும் பொருட்களை ஒழுங்குபடுத்தி வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதற்கு சில டிப்ஸ்களை பார்ப்போம்.

* வீட்டின் வரவேற்பறையில் அலமாரி இருந்தால் அதில் அழகு பொருட்களை அடுக்கி வைப்பதற்கு மட்டும் ஆர்வம் காட்டக்கூடாது. சில பொருட்கள் தனித்து இருந்தால் தான் அதன் அழகியலை ரசிக்க முடியும். ஆகவே வரிசையாக பொருட்களை அடுக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். பொருட்களுக்கு இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும். எங்கிருந்து பார்த்தாலும் ஒழுங்கற்று தெரியாது அழகுடன் பளிச்சிடும் வகையில் அலங்கரித்து வைக்க வேண்டும்.

* வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களை கவரும் பொருட்களை வைப்பதற்கு அலமாரியில் தனி வரிசையை ஒதுக்கி விட வேண்டும். அது குழந்தைகளை குஷிப்படுத்துவதோடு பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் காட்சி தரும். குழந்தைகள் பள்ளிகளில் போட்டியில் வென்று பரிசு பொருட்களை வாங்கி வந்தால் அவைகள் தனியாக தெரியும்படி வரிசைப்படுத்தி வைக்க வேண்டும்.

* பர்னிச்சர்களையும் அறைக் குள் அடைத்துவிடக்கூடாது. அறைக்குள் விசாலமான இடம் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பர்னிச்சர்களை இடம்பெற செய்ய வேண்டும். வரவேற்பறையில் குறைந்த அளவிலான பர்னிச்சர்கள் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவற்றை எந்த இடத்தில் வைத்தால் அறையுடன் ஒன்றி அழகுற தோன்றும் என்பதை கவனித்து அலங்கரிக்க வேண்டும்.

* சமையல் அறை அலமாரிகளையும் ஒரே மாதிரியான பொருட்களை கொண்டு அலங்கரிக்க வேண்டும். முக்கியமாக மசாலா பொருட்களை ஒரே அளவிலான பாட்டில்களில் நிரப்பி அடுக்கி வைக்க வேண்டும். அப்போது தான் ஒழுங்குடன் தெரியும். பொருட்களை எடுத்து பயன்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும்.

* அறையில் மேஜை இருந்தால் அவற்றில் இடம் இருக்கும் அளவிற்கு டிராயர்களை அமைத்து விட வேண்டும். அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களை அதில் அடுக்கி வைத்து பயன்படுத்தலாம். இதனால் பொருட்கள் தேவையில்லாமல் அறைக்குள் ஒழுங்கற்று கிடப்பது தவிர்க்கப்படும். அறையும் அழகுடன் காட்சி அளிக்கும்.

* கட்டிலுடன் இணைந்த டிராயர்களை வாங்க வேண்டும். இல்லாவிட்டால் கட்டிலுக்கு அடியில் சிறிய டிராயரை வைத்துக்கொள்ள வேண்டும். அதில் தலையணை, போர்வைகளை மடித்து வைத்துக்கொள்ளலாம். இதனால் கட்டிலில் பொருட்கள் குவிந்து கிடக்காது. படுக்கை அறையும் அழகுடன் மிளிரும்.

* அறைக் குள் அதிக அளவில் பொருட்கள் இல்லாமல் இருந்தாலே போதும். அறையின் அழகை பற்றி கவலைப்பட தேவையில்லை. பொருட்களை மீண்டும் எடுத்த இடத்தில் ஒழுங்காக அடுக்கி வைத்தாலே அழகுடன் மிளிரும்


தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!

0 comments:

சுவர்களுக்கு வலிமை சேர்க்கும் கற்கள்





சுவர்களுக்கு வலிமை சேர்க்கும் கற்கள்



பதிவு செய்த நாள் : Apr 26 | 01:00 am



கட்டுமானத்தின் முக்கிய அம்சமாக விளங்குபவை சுவர் கள். மழை, வெயில் என எத்தகைய பருவ காலத்துக்கும் ஈடுகொடுத்து கட்டிடங்களை வலிமையாக எழுந்து நிற்கச்செய்கின்றன.

தொழில்நுட்ப முறைகளால் கட்டுமானத் துறை பல மாற்றங்களை சந்தித்து வரும் நிலையில் புதிதாக அறிமுகமாகி உள்ளது ‘ஆட்டோகிளேவிட் கான்கிரீட் கற்கள்’. கான்கிரீட் கற்களை போன்றே இவையும் நீடித்து உழைக்கும் தன்மைக் கொண்டவை. காற்று நிரம்பிய கற்களாக காட்சியளிக்கும் இதனை எளிதாக உடைக்கவும், நெருக்கவும் முடியும்.

எடை குறைவு

இந்த தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்படும் கட்டிடங்களில் தண்ணீர், வேர், பூஞ்சை போன்றவை உட்புகுவது தடுக்கப்படுகிறது. மேலும் இவ்வகையான கற்கள் எடையில் மிகவும் லேசானதாக உள்ளன. இவற்றை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களில் எளிதாக துளையிட்டு வயரிங், தண்ணீர் இணைப்புகள் போன்றவற்றை இணைத்திட முடியும். மேலும் இதனை எளிமையான முறைகளிலே உடைத்தும் பின்னர் பிரத்தியேக கலவைகளை கொண்டு இணைத்தும் விடலாம்.

இவை எடையில் லேசானதாக இருந்தாலும், கடினத்தன்மையில் சிறந்து விளங்கும் வகையிலே உள்ளன. கற்களின் கடினத்தன்மையை விளக்கும் ஆர்–வேல்யூவ், மற்ற கற்களை விடவும் இந்த தொழில்நுட்பத்தில் அதீத அளவில் உள்ளன. இதனால் கட்டிடத்தின் தாங்கு தன்மை அதிகமாகவே இருக்கும். இக்கான்கிரீட் கற்கள் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. இதனால் தேவைக்கேற்ப பல வடிவங்களிலான கற்களை பயன்படுத்தி வீடுகளை அமைத்துக் கொள்ளலாம்.

சுவரின் தாங்குதன்மை

இந்த தொழில்நுட்பத்தில் முக்கிய அம்சமாக காற்று குமிழ்கள் உள்ளன. கற்களின் நடுநடுவே சிறு அளவிலான காற்று குமிழ்கள் அமைந்திருப்பதால் இவை தண்ணீர் பாங்கான பகுதிகளிலும் தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டவை. தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் கட்டப்படும் வீடுகளின் சுவர் களில் பெரும்பாலும் ஈரம் படர்ந்து இருக்கும்.

சுவர்களில் ஈரம் படர்வதால் சுவரின் தாங்கு தன்மையும், உறுதி தன்மையும் பாதிக்கப்படுகின்றன. ஆனால் இக் கற்களில் இம்மாதிரியான பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. மேலும் இயற்கை காரணிகளாக விளங்கும் மழை, கடும் வெப்பம் போன்ற தட்பவெட்ப பிரச்சினைகளை ஆட்டோகிளேவிட் தொழில்நுட்பம் தடுக்கிறது. இதனால் இவை வெயில் மற்றும் மழைக் காலங்களுக்கு ஏற்றவை.

எளிதாக வீடுகள் அமைக்கலாம்

ஆட்டோகிளேவிட் கான் கிரீட் கற்கள் பெரிய கற்களை அடுக்கி வைத்து வீடுகளை அமைத்துக் கொள்ளும் பேனல் வடிவிலும் கிடைக்கின்றன. இதனால் நான்கு, ஐந்து பேனல்களை கொண்டு எளிதாக வீடுகளை அமைத்திடலாம். இந்த வகையான கற்கள் நீரில் மிதக்க வல்லவை. மேலும் வெயில் காலம், குளிர்காலங்களில் சுவர்களின் மூலம் உள்நுழையும் வெயில் மற்றும் தண்ணீர் ஊடுறுவல் போன்ற பிரச்சினைகள் இந்த தொழில்நுட்பத்தில் தவிர்க்கப்படுகின்றன.

இதுதவிர மின்சார இணைப்பு, தண்ணீர் இணைப்பு போன்ற பணிகளுக்கு ஆட்டோகிளேவுட் கற்கள் மிகவும் எளிமையானவையாக அமையும். இவற்றில் கற்களுக்கு நடுவில் சிறுசிறு காற்று குமிழ்கள் இருப்பதால் கற்களை எளிதாக உடைக்கவும் முடியும். உடைந்த கற்களை சிமெண்டு கலவைகளைக் கொண்டு இணைத்திடலாம். இக்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட வீடுகளில் பொதுவாக விரிசல்கள் ஏற்படுவதில்லை.

செலவு குறைவு

இந்த ஆட்டோகிளேவிட் கான்கிரீட் தொழில்நுட்பத்தை பின்பற்றி பல நாடுகளில் பலவகையான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் சில நாடுகளில் பாலங்களையும் இந்த தொழில்நுட்பத்தால் உருவான கற்களே தாங்கி நிற்கின்றன. இதில் சுண்ணாம்பு சத்து பொருட்கள் குறைந்த அளவிலே சேர்க்கப்பட்டிருப்பதால் மற்ற கற்களை போன்று நீர் கசிவு, நீர் பூத்துபோதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதில்லை.

குறுகிய காலங்களில் முடிக்க வேண்டிய கட்டுமான வேலைகளுக்கு இவ்வகையான கற்கள் சிறந்த கட்டுமான பொருட்களாக இருக்க கூடியவை. இவற்றை எளிதாக அடுக்கி வைத்து சிறிதளவு சிமெண்டு கலவைகள் கொண்டு கட்டிடங்களைகட்டி முடித்து விடலாம். மற்ற கட்டுமான பொருட்களுக்கு ஆகும் செலவை விட இதற்கு ஆகும் செலவுகள் மிகவும் குறைந்தளவிலே இருக்கின்றன.
தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!

0 comments:

சுவர்களில் புகுந்து வரும் புதுமை





சுவர்களில் புகுந்து வரும் புதுமை



பதிவு செய்த நாள் : Apr 19 | 12:00 am



கட்டுமானத்தின் முக்கிய அங்கமாக விளங்குபவை சுவர்கள். திறந்தவெளிகளை வேலியாக, காம்பவுண்டாக மாற்றவும், வீட்டின் உட்பகுதியினை அறைகளாக பிரிக்கவும் சுவர்கள் பயன்படுகின்றன. மறைப்பு திரையாக பயன்படுத்தப்பட்ட சுவர்கள் தற்சமயம் அழகியலிலும் பங்கெடுத்துக்கொள்கின்றன.

சமையல் அறை மற்றும் சாப்பிடும் டைனிங் ஹால் பகுதிக்கு இடைப்பட்ட சுவர்கள் பெரும்பாலும் பாதி சுவர்களா கவே இருக்கும். இவை சமையல் அறையில் சமைப்பவர்களையும், டைனிங் ஹால் பகுதியில் இருப்பவர்களையும் இணைக்கும் வண்ணம் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு நம் தேவைக்கு ஏற்ப சுவர்களை வடிவமைத்துக் கொள்ளலாம்.

டி–வடிவ சுவர்கள்

சுவர்கள் அழகிற்காக அமைத்தாலும், அறைத் தடுப்பிற்காக அமைத்தாலும் அவை கட்டுமான பணியில் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. கட்டுமான வேலைகளில் இரண்டாம் கட்ட பணிகள் என்று கருதப்படும் சுவர்கள் கட்டுமானத்தை எளிமையாக அமைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. டி–வடிவ சுவர்கள் என்று அழைக்கப்படும் இப்புதுமையான தொழில்நுட்பம் சுவர்கட்டுமான முறைகளை எளிமைப்படுத்துகின்றன.

இத்தொழில்நுட்பத்தில் சுவர்கள் ரெடிமேட் முறைகளில் கிடைக்கின்றன. இந்த ரெடிமேட் சுவரின் அடிப்பகுதியில் சுவர்களை நிலையாக நிறுத்தும் வகையில் டி–வடிவில் தட்டையான பகுதி உள்ளது. இது டி–வடிவ சுவர்களின் அடித்தளமாக விளங்குகிறது. இந்த சுவர்களை கொண்டு வீடுகளை அமைக்க அடித்தள பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அடிப்பரப்பு சமமாக இருக்கும் பட்சத்தில் டி–வடிவ சுவர்களை நிறுவி வீடுகளை அமைத்திடலாம்.

எளிமையாக அமைக்கலாம்

நிலையான அடித்தளம் அமைய பெறாமல் இருந்தாலும் சுவர்களை ஜே.சி.பி.கிரைன் போன்ற இயந்திரங்களை கொண்டு உயரத்தில் இருந்து வைப்பதன் மூலம் சமமான அடித்தளங்கள் அமைந்து விடுகின்றன. இந்த டி–வடிவ சுவர்களை கொண்டு எளிமையான நிரந்தர குடியிருப்புகளை அமைத்திட முடியும். இதனை தரை பகுதியோடு நிலையாக இருக்க செய்ய கான்கிரீட் கலவைகளை பயன்படுத்துகின்றனர். தரை மற்றும் சுவர்களை இணைக்க குறைந்த அளவிலான கான்கிரீட் கலவைகளே தேவைப்படுகின்றன.

டி–வடிவ சுவர்கள் முழு நீள சுவர்களாகவும், அழகுப்படுத்தும் வகையில் பாதி அளவுகள் கொண்ட சுவர்களாகவும் சந்தையில் கிடைக்கின்றன. சிறிய வீடுகளின் உள்பகுதியில் பயன்படுத்தப்படும் குறைந்த தடிமனிலான சுவர்களும் இத்தொழில்நுட்பத்தில் கிடைக்கின்றன. மேலும் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டவும் இந்த சுவர்களை பயன்படுத்தலாம்.

நேரம் குறையும்

அடுக்குமாடி குடியிருப்பு சுவர்கள் லீகோ விளையாட்டு கற்கள் முறையில் இருக்கும். இதில் ஒன்றை மற்றொன்றுடன் இணைக்கும் வகையில் மேல் கீழ் பகுதிகளில் பிரத்தியேகமான அமைப்பு அமைக்கப்பட்டிருக்கும். இதனை கொண்டு ஒன்றின் மேல் மற்ற சுவர்களை வைத்து எளிமையாக சில மணி நேரங்களில் கட்டுமான பணிகளை முடித்து விடலாம்.

இதனால் கட்டிடங்கள் அமைப்பதற்கு ஆகும் நேரம் குறைகிறது. மேலும் டி–வடிவ சுவர்களை பயன்படுத்தி மேலை நாடுகளில் பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கட்டிடங்களுக்கு மேல் சாதாரணமாக அமைக்கப்படும் கான்கிரீட் தளங்கள் மற்றும் அழகுப்படுத்தும் கூம்பு வடிவ கோபுரங்கள் போன்ற அமைப்பு முறைகளை அமைத்துக் கொள்ளலாம்.







தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!

0 comments:

கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்





கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்



பதிவு செய்த நாள் : Apr 26 | 01:00 am



மணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப்பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத்தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது.

கட்டுமானப் பொருள் விலை

சிமெண்டு

50 கிலோ பை (மொத்த விலை, குறைந்தது 300 பைகள்)* ரூ.300

50 கிலோ பை (சில்லரை விற்பனை)* ரூ.310

இரும்பு

டி.எம்.டி. 8 மி.மீ விட்டம்* ரூ.49,100

டி.எம்.டி. 10–25 மி.மீ விட்டம் * ரூ.47,600

வி.எஸ்.பி./செயில் 10 மி.மீ. விட்டம்* ரூ.49,600

ரெடிமேடு ஸ்டீல் * ரூ.49,000

ரெடிமேடு ஸ்டிர்அப்ஸ் * ரூ.50,000

செங்கல்–மணல்

செங்கல் 3000 எண்ணிக்கை* ரூ.17,000

ஆற்று மணல் (ஒரு கன அடி) ரூ.48 முதல் ரூ.50 வரை

ஜல்லிக்கல் (ஒரு கன அடி)

12 மி.மீ. ரூ.20 முதல் 22 வரை

20 மி.மீ. ரூ.28 முதல் 30 வரை

40 மி.மீ. ரூ.26 முதல் 28 வரை

இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் தார் (பிடுமன்) விலை

கிரேடு 80/100 (வி.ஜி.10) ரூ.50,023

கிரேடு 60/70 (வி.ஜி.30) ரூ.50,984

கூலி விவரம் (ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு)

கொத்தனார் ரூ.550 முதல் 650 வரை

சித்தாள் ஆண் ரூ.400 முதல் 450 வரை

சித்தாள் பெண் ரூ.300 முதல் 350 வரை

பெயிண்டர்/பிளம்பர் ரூ.500 முதல் 550 வரை

கார்பெண்டர் ரூ.550 முதல் 650 வரை

(*குறியிட்ட பொருட்களுக்கு வரிகள், சுமை கூலி,போக்குவரத்து செலவுகள் தனி. மேற்கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் 23–4–2014 நிலவரப்படி தொகுக்கப்பட்டுள்ளது.)

தகவல்: அகில இந்திய கட்டுனர் சங்கம், தென்னக மையம், சென்னை.





தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!

0 comments:

Redhils Real Estate Agency Buying Ad Selling Land Plot Chenai Redhils வீடு மனை வாங்க விற்க ,,,,,

வீடு  மனை  வாங்க  விற்க  ,,,,,

எங்ககிட்ட ,,வங்க ,,,,
'
சென்னை  ரெட்ஹில்ஸ் ,, எடபாளயம் ,அலமாதி ,,, சோழவரம் ...

காந்தி நகர் ,,, திருவள்ளூர் ஹை ரோடு ... மற்றும் ... வடசென்னை ...

பகுதி ..லக்ச்மி புரம் ..பொத்தூர் ,,ஆவடி  திருமுல்லை வாயால் ..

மற்றும்  சுற்றுவட்டார ,,பகுதி இல் ...

வீடு  மனை ,,நிலம்  பட்டா ..நிலம் ..approved நிலம் ..கமர்சியல் ..நிலம் .....

விவசாய  ,நிலம் ... வங்க  விற்க ....

அணுகவும் .... நன்றி ....

அபுதாகிர் ..சென்னை  ரெட்ஹில்ஸ்  9884342786///9551994407



0 comments: