Tamil news. Tamil real estate news. tamil vastu news. tamil real estate agent news.tamil entertainment.Tamil cinema news. read the tamil Special news and tips on Experts. இதுற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி ! | Read the Tamil Special news headlines நம்ம வீடு
 .நம்ம வீடு.காம் தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

இதுற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி !

பாராசூட்டில் டைவ் அடித்துக் கொண்டே திருமணம் செய்து கொள்வது, தண்ணீருக்கு அடியில் குழந்தை பெற்றுக்கொள்வது இப்படி வித்தியாசமா எதையாவது செய்றதே வெள்ளைக்காரனுக்கு வேலையாப்போச்சு. அந்த வகையில், ஒரு பெண்ணிடம் 'நான் லவ் பண்ணுவேன்னு நினைக்கலை... ஆனா நடந்துடு மோனு பயமா இருக்கு’னு நகரும் டிரெய்ன்ல நடந்துக்கிட்டே காதலைச் சொல்லாம, ஹெலிகாப் டரில் பறந்து சொல்லியிருக்கார் ஒருத்தர். ’இதுல என்ன விசேஷம்னுதானே கேக்கிறீங்க. இல்லாம எப்படி?
அயர்லாந்தைச் சேர்ந்த லியாமுக்கு, நர்ஸாக வேலைபார்க்கும் மெலிசா மோஸ்கூட செம லவ்ஸ். இருவரும் காதலித்து ஒருவழியா நிச்சயதார்த்தமும் முடிவாகும்போது, புதுசா ஒரு தடவை மெலிசாகிட்ட காதலைச் சொல்ல ணும்னு நம்ம ஹீரோவுக்கு ஆசை. வழக்கமா கொடுக்கிற ரோஜாவோட அவங்ககிட்ட போய் நிற்க மனசு இடம் கொடுக்கலை. அதனால தன்னோட டாடி டானியையும் கூட ரெண்டு பேரையும் துணைக்குக் கூட்டிக்கிட்டு, பகக்த்துல இருக்கிற தோட்டத்துக்குப் போய், இருக்கிற தொட்டிச் செடிகளை எல்லாம் வார்த்தைகளாக அடுக்கியிருக்கிறார்கள். மறுநாள் தன்னுடைய முதலாளியிடம் 'என்னோட காதலை வித்தியாசமா சொல் லணும்னு ஆசைப்படுறேன். அதுக்கு ஒரு ஹெலிகாப்டரை அரேஞ்ச் பண்ணிக் கொடுத்தீங்கன்னா, ரொம்ப உதவியா இருக்கும்’ என கசிந்து உருக, காதலுக்கு மரியாதை செய் கிறோம் என்கிற நல்ல எண்ணத்தில் ஹெலிகாப்டரைக் கொடுத்திருக்கிறார் முதலாளி.
அவ்வளவுதான், தன் காதலி மெலிசா மோஸை ஹெலிகாப்ட ரில் ஏற்றிக்கொண்டு தோட்டத் தில் 500 அடிக்கு அடுக்கி வைக்கப்பட்ட ' வில் யூ மேரி மீ மெலிசா’ என்ற வார்த்தைகளைக் காதலிக்குக் காட்டி, மெலிசி யாவை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்திருக்கிறார் லியாம். கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு வானத்திலேயே அதை ரசித்துக்கொண்டிருந்த மெலிசா, கீழே இறங்கி வந்ததும் வழக்கம்போல 'இட்ஸ் எ வொன்டர்ஃபுல் எக்ஸ்பீரியன்ஸ்’ என்று பேட்டி கொடுத்துவிட்டு, 'லியாம் என் மேல இவ்வளவு லவ் வெச்சிருக்கிறதைப் பார்த்து என் தோழிகள் எல்லாரும் பொறாமைப்படப்போறாங்க!’ என்று பூரித்திருக்கிறார்.
எங்க ஊரு ரியல் எஸ்டேட்காரங்க பார்த்தா, 'இவ்வளவு இடம் இருக்கே, பிளாட் போட்டு விக்கலாமே’னு யோசிச்சிருப்பாங்க!
- கே.ஜி.மணிகண்டன்
Share on Google Plus

0 comments: