Tamil news. Tamil real estate news. tamil vastu news. tamil real estate agent news.tamil entertainment.Tamil cinema news. read the tamil Special news and tips on Experts. வாரிசு சேட்டன்கள்! | Read the Tamil Special news headlines நம்ம வீடு
 .நம்ம வீடு.காம் தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

வாரிசு சேட்டன்கள்!

மலையாள சினிமாவில் இது வாரிசுகள் காலம். அதிலும் ஃபாசில் பையன் ஃபஹத்தும் மம்மூட்டியின் மகன் துல்ஹர் சல்மானும் பிரமாதம்.
சமீபத்திய ரிலீஸ் 'ஏ.பி.சி.டி.’ படம், கிட்டத் தட்ட சூப்பர் ஸ்டாரின் 'தம்பிக்கு எந்த ஊரு’ டைப் கதைதான். 'அமெரிக்கன் பார்ன் கன்ஃபியூஸ்டு தேஸி’ என்பதன் சுருக்கமே ஏ.பி.சி.டி.. அமெரிக்காவில் ஜாலியாய்ச் சரக்கடித்து பொழுதைக் கழிக்கும் மிடில் கிளாஸ் ஃபேமிலி பையனாக நடித்திருக்கிறார் துல்ஹர் சல்மான். பொறுப்பு வரட்டும் என இந்தியாவுக்கு அனுப்பிவைக்கிறார் தந்தை. இந்தியாவுக்கு வந்ததும்தான் தெரிகிறது அவனது பேங்க் அக்கவுண்ட்டை அவனது தந்தை முடக்கி வைத்திருக்கிறார் என்று. அப்புறம் என்ன? எளிமையான வாழ்க்கை வாழ்வதற்காக இந்தியா வுக்கு வந்திருக்கிறேன் என சீன் போட்டு அப்படியே மீடியா அட்டென்ஷனும் கிடைக்க, பாப்புலர் 'யூத் ஐகான்’ ஆகிறார். அதன் பிறகு அரசியல்வாதிகளுக்கும் அவருக் கும் நடக்கும் உரசலும் காமெடி க்ளைமாக்ஸு மாய் படம் நகர்கிறது. ஏற்கனவே 'உஸ்தாத் ஹோட்டல்’ படத்தில் இதேபோல ஃபாரின் ரிட்டர்ன் ஆசாமியாக நடித்தவர்தான் துல்ஹர். ஆனால் இந்தப் படத்தில் இவர் காட்டி இருக்கும் பாடி லாங்குவேஜ் ஆச்சர்ய மூட்டுகிறது. இது கொஞ்சம் காஸ்ட்லி படம்தான். ஆறரைக் கோடியாம். ஆனால், இப்பவே பத்து கோடி வசூல் அள்ளிவிட்டது.
பதிலுக்கு ஃபஹத் ஃபாசில் 'ஆர்ட் டிஸ்ட்’ என்ற படத்தில் மைக்கேல் ஆக்னெலோ என்ற கலைவெறி கொண்ட ஓவியன் கேரக்டரில் நடித்திருந்தார். கலைஞனின் வாழ்க்கையில் வரும் ஈகோ, காதல் மற்றும் விபத்து அவனை எப்படி எல்லாம் மாற்றுகிறது. இறுதியில் அவன் என்ன ஆகிறான் எனப் பேசுகிறது. 'ஒளிப்பொரு’ படத்தில் வலைப்பதிவராக சமூகத்தில் மாற்றம் கொண்டு வருபவராக நடித்திருந்தார் ஃபஹத். படம் மோசமான திரைக் கதையால் சுமாராக ஓடினாலும் இன்றைய யூத் அதிகம் புழங்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் வலைப்பூவை வைத்து ஹீரோ கேரக்டரை உருவாக்கி இருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் துல்ஹரின் 'நீலவானம் பச்சக்கடல் சுவர்ணபூமி’ படமும் ஃபஹத்தின் 'நார்த் 24 காதம்’ படமும் அண்மையில் ரிலீஸ் ஆகியது. இரண்டும் பயணத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட கதைகள். இரண்டுமே வெவ்வேறு ட்ரீட்மென்ட்டால் ஹிட்!
இவர்கள் இருவருக்கும் போட்டியாக சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத இன்னொரு வாரிசும் கலக்கி வருகிறார். அது ஆசிஃப் அலி.
'டிராஃபிக்’, 'சால்ட் அன்ட் பெப்பர்’, 'ஆர்டினரி’, 'ரெட் ஒயின்’ போன்ற படங் களில் நடித்திருந்த ஆசிப் அலி அண்மையில் ரிலீஸான 'ஹனி பீ’ படத்தில் இளசுகளைக் குறிவைத்து ஸ்கோர் பண்ணுகிறார். இவரது தந்தை சௌகத் அலி தொடுப்புழா நகரின் முன்னாள் முனிசிபல் சேர்மன். (இதை எழுதும் நானும், படிக்கும் நீங்களும்கூட வாரிசுதானே மக்கா!)  
ஓ.கே... இப்படி இளம் வாரிசுகள் வித்தியாச மான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து கொஞ்சம் சீனியரான பிருத்விராஜுக்கு (இவரும் வாரிசு தான்... முன்னாள் மலையாள நடிகர் சுகுமாரனின் மகன்)  செம டஃப் கொடுத்தாலும் அசராமல் 'மும்பை போலீஸ்’ என்ற ஆக்ஷன் படத்தில் நடித்து இந்த வருடம் இருவருக்குமே தண்ணி காட்டினார். 'மும்பை போலீஸ்’ மலையாள த்ரில்லர் சினிமா வரலாற்றில் புது அத்தியாயம் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிறது. இந்த வருடத்தின் மிகப் பெரிய பம்பர் ஹிட்டும் அடித்தது. இவ்வளவுக்கும் ஸ்ட்ரிக்ட்டான போலீஸ் ஆபீஸராக மிடுக்குடன்  வரும் பிருத்விராஜ் ஓரினச் சேர்க்கையாளராகவும் நடித்திருந்தார். (ஆத்தீ! சஸ்பென் ஸையே உடைச்சுட்டேனே!) படத்தில் அவர் கேரக்டர் அவ்வளவு அழகாக வடிவமைக்கப்பட்டிருந்ததும் ஒரு நிஜ போலீஸ் புலனாய்வு எப்படி எல்லாம் இருக்கும் என்பதையும் படம் டீட்டெய்லாகக் காட்டியது குறிப்பிடத் தக்கது.
ஆல் தமிழ் வாரிசுகளே... அலெர்ட்!

Share on Google Plus

0 comments: