Tamil news. Tamil real estate news. tamil vastu news. tamil real estate agent news.tamil entertainment.Tamil cinema news. read the tamil Special news and tips on Experts. பெரிய நடிகர்கள் எனக்குத் தேவையில்லை ! | Read the Tamil Special news headlines நம்ம வீடு
 .நம்ம வீடு.காம் தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

பெரிய நடிகர்கள் எனக்குத் தேவையில்லை !

பலபேரு பி அண்ட் சி சென்டர்ல படம் ஓடாதுன்னு எழுதியிருந்தாங்க. அதான் நானே வண்டியை எடுத்துக் கிட்டு கோயம்புத்தூர், திருச்சி, மதுரை யில எல்லாம் போஸ்டர் ஒட்டி, கொஞ்சம் பப்ளிசிட்டி கொடுக்கலாம்னு வந்திருக் கேன்'' என ஆரம்பித்த மிஷ்கின்,  வித்தியாசமான மனிதர்தான்.
''ஏற்கெனவே சாரு நிவேதா, 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் ஷாஜி, அடுத்த படத்துல ஜெய மோகனுடன் இணையறதா செய்தி... தொடர்ந்து இலக்கிய நண்பர்களோட இயங்குவதற்கு எதுவும் காரணம் இருக்கா?''
''சாருநிவேதாவை இப்போ நான் பார்க்கிறதே இல்லை. சுருக்கமாச் சொல்லணும்னா, நாங்க ரெண்டு பேரும் 'டச்’லேயே இல்லை. தயவுசெஞ்சு பழசையெல்லாம் தோண்டி எடுக் காதீங்க. ஜெயமோகன் என் படத்துல வொர்க் பண்ணப்போறதா வந்த செய்தி உண்மை கிடையாது. அவரும் நானும் நண்பர்களா இருந்தாலும், இதுவரை சேர்ந்து வொர்க் பண்ற ஐடியா வந்தது இல்லை.''
''இருட்டும் வன்முறையும் உங்க படத்துல எக்கச்சக்கமா இருக்கே, ஏன்?''
''நான் தனிமையையும் இருட்டையும் ரொம்ப விரும்புறவன். வன்முறை நம்ம வாழ்க்கையோட ஒவ்வொரு நொடியிலும் கலந்திருக்கு. ரோட்டுல போறப்போ யாரையாவது திட்டுறது, வீட்டுல இருக்கிற புருஷன் தன் பொண்டாட்டி யைத் திட்டுறது, ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கலைனு குழந் தையை அம்மா திட்டுறதுனு ஆரம்பிச்சு, ஒரு நாளைக்கு எக்கச்சக்கமான வன்முறையை உணர்ந்துக்கிட்டு தான் இருக்கோம். பேப்பர் படிக்கிற எல்லாருக்குமே நம்ம வாழ்க்கையில் எவ்வளவு வன்முறைகள் நடந்துட்டி ருக்குனு தெரியும். அதையெல் லாம் சுருக்கி, இரண்டரை மணி நேரம் ஓடுற சினிமாவுல ஒரு பகுதியா நான் வன்முறை யைச் சொல்றேன்னா, 'ரொம்ப கம்மியா சொல்றோமே’னு நான்தான் வருத்தப்படணும்!''
''உங்க படங்களெல்லாம் 'காப்பி’ங்கிற விமர்சனம் இருக்கே?''
''ஒரு படத்தை அப்பட்டமா சீனுக்கு சீன் எடுக்கிறதுதான் காப்பி. மத்தபடி இங்கே எல்லாக் கதையும், எல்லா படமும் இன்ஸ்பிரேஷன்ல வந்ததுதான். விமர்சனம் பண்றவங்களுக்கு நல்லது, கெட்டது எல்லாத்தையும் சுட்டிக்காட்டுறதுக்கு உரிமை இருக்கு. அவங்க என் படத்தைப் பார்த்துட்டு மோசமாத் திட்டுனாலும் சரி, ஓஹோனு புகழ்ந்தாலும் சரி, எதையுமே நான் கண்டுக்கிற தில்லை. இந்தப் படம் ஓடலைன்னா அடுத்த படம்னு ஓடிக்கிட்டே இருப்பேன்.''
''ஒரு படம் தோல்வி அடைஞ்ச பிறகு 'அந்த படத்தைப் பண்ணது என்னோட தப்பு, அது முழுமையான படமே இல்லை’னு சொல்றீங்க. ஏன் அந்தப் படம் எடுக்கும்போதே காம்ப்ர மைஸ் ஆகாம இருந்திருக் கலாமே?''
''ஆக்சிடென்ட் ஆனாத்தாங்க எங்கெங்க வலிக்குது, வலி எப்படி இருக்குனு சொல்ல முடியும். 'இப்படி ஆக்சிடென்ட் ஆனா, இப்படி வலிக்கும்டா’னு வார்த்தையில சொல்ல முடியுமா என்ன? திரைக் கதையும் அந்த மாதிரிதான்!''
''பெரிய நடிகர்கள் இருக்கிற படங்களுக்குத்தானே ரசிகர்களோட எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு. அப்படி இருக்கும்போது, கொஞ்சம் வித்தியாசமான முயற்சிகளுக்கு அவங்களையும் பயன்படுத்திக் கலாமே?''
''அதான் இல்லை. அப்படி பண்ணும்போது அது வேற மாதிரியான கதையா மாறிடும். சின்னச் சின்ன நடிகர்களை வெச்சுப் பண்ணும் போதுதான் கதை தனியா தெரியும். கொடிக்குதான் சப்போர்ட் தேவைப்படுமே தவிர, ஆலமரத்துக்குக் கிடையாது. வளரும்போதும் சரி, வளர்ந்ததுக்கு அப்புறமும் சரி புயல், மழை, வெயில் எல்லாத்தையும் தாங்குற ஆலமரமாதான் நானும், என்னோட கதையும் இருக்கணும்!''

Share on Google Plus

0 comments: