Tamil news. Tamil real estate news. tamil vastu news. tamil real estate agent news.tamil entertainment.Tamil cinema news. read the tamil Special news and tips on Experts. தொலைத் தொடர்புக்கு உள்ளேயே இரு! | Read the Tamil Special news headlines நம்ம வீடு
 .நம்ம வீடு.காம் தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

தொலைத் தொடர்புக்கு உள்ளேயே இரு!

ஆளுமைத் திறன்

    தொலைத் தொடர்புக்கு உள்ளேயே இரு!
    04 (18/04/2013)
    அடுத்தடுத்து பலக
    ட்டத் தேர்வுகள் அடங்கிய பரீட்சை அது. மனநலவியல் பேராசிரியர் ஒருவருடன் அந்த அறைக்குள் நீங்கள் நுழைகிறீர்கள். உள்ளே இரண்டு நபர்கள் நிர்வாணமாக அமர்ந்திருக்கிறார்கள். உங்கள் சங்கடம் போக்க, அவர்கள் இருவர் மீதும் பெட்ஷீட்டைப் போர்த்துகிறார் பேராசிரியர்.
    'இவர்களில் ஒருவர், மல்டிநேஷனல் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சி.இ.ஓ. இன்னொருவர், அதே நிறுவனத்தில் துப்புரவுத் தொழிலாளி. இவர்களில் யார் சி.இ.ஓ... யார் தொழிலாளி என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்!' என்கிறார்.

    இருவரும் ஒரே உயரம், நிறம், வயதினர். இருவர் சிரிப்பிலும் ஏறக்குறைய வித்தியாசம் இல்லை. கண்கள் உங்களை நேருக்கு நேர் பார்க்கின்றன. நீங்கள் திணறுகிறீர்கள். உங்களுக்கு உதவுவதற்காக இருவர் மீதும் இருக்கும் பெட்ஷீட்டை முட்டி வரை உயர்த்துகிறார் பேராசிரியர். இருவர் பாதங்களை வைத்தும் ஆட்களை அடையாளம் காண முடியவில்லை. மீண்டும் பெட் ஷீட்டைப் பிடிக்கக் கீழே குனிகிறார் பேராசிரியர். அடுத்து நடக்கப்போவதை நினைத்து நடுங்கி, நீங்கள் கண்களை மூடிக்கொள்கிறீர்கள். சில நொடிகள் கழித்துத் தயக்கத்துடன் கண்களைத் திறக்க, இருவரின் தலை முதல் மார்பு வரை பெட்ஷீட் இறக்கப்பட்டு இருக்கிறது. 'ஊப்ப்ப்ஸ்!' என்று பெருமூச்சுவிடுகிறீர்கள். ஆனால், அப்போதும் உங்களால் 'யார் சி.இ.ஓ', 'யார் க்ளீனர்?' என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

    'நன்றி. நீங்கள் இருவரும் கிளம்பலாம்!' என்று பேராசிரியர் அந்த நிர்வாண நாயகர்களுக்கு விடை கொடுக்கவும், சடாரென பெட்ஷீட்டால் தங்களை மறைத்துக்கொண்டு வாசல் நோக்கி நடக்கிறார்கள். வெளியேறும் முன், திரும்பும் முதல் நபர், 'நல்லவேளை இந்த டெஸ்ட் முடிந்ததே என்று நீங்கள்சந்தோஷப்பட்டு இருப்பீர்கள் நண்பரே. உங்கள் அடுத்த பரீட்சையாவது இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!' என்று புன்சிரிப் போடு விடைபெறுகிறார். இரண்டாமவர், 'என்னால் உங்களுக்கு உதவ முடிந்ததற்கு நன்றி!' என்று சொல்லி, கதவருகே தயங்கி நிற்கிறார். பேராசிரியர் சில ரூபாய் தாள்களை அவர் கையில் திணிக்க, கண்களில் மின்ன லுடன் இடத்தைக் காலி செய்கிறார்.

    பேராசிரியர் அர்த்தமுடன் உங்களை நிமிர்ந்து பார்க்க, 'முதல் நபர்தான் சி.இ.ஓ. இரண்டாமவர் க்ளீனர்!' என்கிறீர்கள் வெற்றிப் புன்னகையுடன்.

    இதில் இருந்து நீங்கள் பெற வேண்டிய மெசேஜ்... உங்கள் நிறம், அழகு, உயரம், ஆடைகள், இளமை போன்ற புறக் காரணிகள் மற்றவர்களுடனான உங்கள் உறவை எவ்விதத்திலும் பாதிக்காது. நீங்கள் எதிராளியை எதிர்கொள்ளும் விதம், பழகும் பாங்கு, ரியாக்ட் செய்யும் தொனி போன்றவைதான் அவருடனான உங்கள் தொடர்பை இயல்பாக்கும். அப்படி ஒரு நபருடன் முதல் சந்திப்பிலேயே இயல்பாக, 96 ட்ரிக்குகளைச் சொல்லித் தருகிறார் லெய்ல், தனது 'How to instantly connect with anyone' புத்தகத்தில். அதில் இருந்து சில புக்மார்க்குகள்!

    கண்ணைப் பார்... சிரி!

    அடர்ந்த காட்டில் இரண்டு புலிகள் நேருக்கு நேர் சண்டையிடுகின்றன. நெருப்பு மின்னும் விழிகளோடு இரண்டும் ஒன்றையன்று மூர்க்கமாக முறைக்கும். கண்ணுக்குக் கண் நேர்க் கோடாகத்தான் அவற்றின் பார்வை பயணிக்கும். எந்தப் புலி அசந்து கண் சிமிட்டுகிறதோ, அல்லது பார்வையை ஒரு கணம் திசை தப்பவிடுகிறதோ... அது காலி. நொடியும் காத்திருக்காமல் சரேலெனப் பாய்ந்துவிடும் கில்லி புலி. பார்வைக்கு அந்த பவர் முக்கியம். ஆம், எதிராளியின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். கண் பார்த்துப் பேசும் கலைக்குச் சில சிம்பிள் டிப்ஸ் இதோ...

    எதிராளியின் கண்கள் என்ன நிறம் என்று கண்டு பிடியுங்கள். (உங்கள் நெருக்கமான நண்பர்களில் மூன்று பேரின் கருவிழி நிறங்களையாவது நினைவு கொள்ள முடிகிறதா உங்களால்?) நிறத்துக்குப் பிறகு கண்களின் வடிவத்தைக் கண்டுபிடியுங்கள். இரண்டு கண்களுக்கும் இடையிலான இடைவெளியை அளந்து பாருங்கள். கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருக்கிறாரா? அணிந்திருந்தால் என்ன கலர்?

    இதயத்தைத் தொடுங்கள்!

    கண்ணோடு கண் நோக்குவதற்கு அடுத்து மிக முக்கியமானது கைகுலுக்கல். மைக்ரோசாஃப்ட் நிறுவ னத்தின் மிக உயர்ந்த பதவிக்கான நேர்காணல் அது. இரண்டு திறமைசாலிகள் இறுதிக் கட்டம் வரை விடாமல் முன்னேறி, சளைக்காமல் மல்லுக்கட்டுகிறார்கள். தகுதி, திறமை, நேர்மை, புத்திக்கூர்மை என அனைத் திலும் ஒருவருக்கு நிகர் மற்றொருவர். ஒருவரைத்தான் தேர்ந்தெடுத்தாக வேண்டும். இன்டர்வியூ செய்தவர் அறையைவிட்டு வெளியேறி, 'இரண்டாம் நபருக்கு அப்பாயின்மென்ட் லெட்டர் கொடுங்கள்' என்றார். 'எதனால் முதலாமவரை விலக்கினீர்கள்?' என்று கேட்டேன். 'சிம்பிள். அவருடன் கைகுலுக்கியபோது ஒரு நடுக்கம் தெரிந்தது. ஆனால், இரண்டாமவரின் கைகளில் நம்பிக்கையும் அன்பும் அழுத்தமாகப் பதிந்திருந்தது!' ஒரு 'ஹேண்ட்ஷேக்' சமயங்களில் உங்கள் எதிர்காலத்தையே ஷேக் செய்யும் என்பதற்கு மிகச் சின்ன உதாரணம் இது!

    அழுத்தமாகக் கை குலுக்குங்கள் என்பதும் அடிப் படை மேனெஜ்மென்ட் பாடங்களுள் ஒன்றுதான். ஆனால், அது எப்படி? இதற்கும் ஒரு சுலப வழிஒன்று இருக்கிறது. எதிரில் இருப்பவருடன் கைகுலுக்கும்போது உங்கள் ஆள்காட்டி விரலால் அவரது மணிக்கட்டு நரம்பை மிருதுவாக அழுத்திக்கொடுங்கள். (பல்ஸ் பார்க்க மருத்துவர்கள் உங்கள் மணிக்கட்டில் அழுத்திப் பிடிப்பார்களே... அதேதான்!) அந்த நரம்பு நேரடியாக இதயத்துக்கு ரத்தம் பாய்ச்சும் மகா தமனி. அது உணரும் எந்த உணர்வும், இதயத்தாலும் அழுத்தமாகவே உணரப்படும். நண்பர்களிடையே இதை முதலில் பழுகுங்கள். உஷார்... 'ஃபெதர் டச்' என்பார்களே... அப்படி இருக்க வேண்டும் உங்கள் அழுத்தம்!

    அடக்கி வாசி மாப்ள!

    பள்ளி, கல்லூரிக் காலங்களில் அடிக்கடி புதுப் புது நபர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அந்த மாதிரி யான தருணங்களில், டாப் அடிக்க வேண்டியிருக்கும். அப்போது யார் என்ன பேசினாலும், உடனே முந்திக்கொண்டு கமென்ட் அடிக்கும் பழக்கத்தைத் தவிர்த்திடுங்கள். அடிக்கடி நீங்கள் ஏதேனும் சொல்லிக்கொண்டே இருந்தால், உங்கள் கருத்துக்களுக்கு அங்கே மதிப்பு இல்லாமல் போகக் கூடும். அதுவே, அரட்டை ஆரம்பித்து முதல் 15 நிமிடங்களுக்கு நீங்கள் 'சைலன்ஸ் மெயின்டெய்ன்' செய்துபாருங்கள். உங்கள் அமைதி அவர்களை உறுத்தி, 'என்னடா ஆச்சு... எதுனாசொல்லு?' என்று உங்களிடம் கருத்துக் கேட்பார்கள். நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். அந்தச் சமயம் உங்கள் வார்த்தைகளுக்கு அதிக மரியாதை இருக்கும். இது நண்பர்களுடன் அரட்டையடிக்க மட்டுமல்ல; ஆலோசனைக் கூட்டம், வகுப்பறை, குடும்ப விசேஷம் என எந்தச் சூழலுக்கும் பொருந்தும்!

    தாமதத்துக்கு நோ தாம்தூம்!

    மீட்டிங், வகுப்பறை, ஆலோசனைக் கூட்டம் போன்றவற்றுக்குச் சரியான நேரத்துக்குச் செல்லுங்கள். தவிர்க்க முடியாமல் தாமதமாகிவிட்டால், மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்ததும் 'எக்ஸ்கியூஸ் மீ', 'என்னை எல்லாரும் மன்னித்துவிடுங்கள்!' என தாம்தூம் என உங்கள் வருத்தத்தைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டாம்.

    அமைதியாக உங்கள் இருக்கையை ஆக்கிரமித்து, மீட்டிங்கின் போக்குக்குக் காது கொடுங்கள். எங்கேனும் நீங்கள் குறுக்கிடும் சமயம், 'மன்னிக்கவும் இந்த டாபிக் பற்றி நீங்கள் ஏற்கெனவே விவாதித்துவிட்டீர்களா என்று தெரியவில்லை. நண்பனுக்கு ஆக்சிடென்ட். அவனை மருத்துவமனையில் சேர்த்து, ரத்தத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு வருவதற்குள் மீட்டிங்கின் ஆரம்ப நிமிடங்களைத் தவறவிட்டுவிட்டேன். அதனால் நான் எனது கருத்தை இப்போது பதிவுசெய்கிறேன்!' என்று தொடர்ந்து உங்கள் கருத்தைப் பதிவு செய்துவிடுங் கள்.

    இதனால் உங்கள் மேல் இருக்கும் கோபம் தணிந்து, பிறர் உங்களுக்கு உதவ ஆர்வமாக விசாரிக்கவும் செய்வார்கள். பாலீஷாக உங்கள் வருத்தத்தைப் பதிவு செய்தது போலவும் ஆகிவிடும்!
Share on Google Plus

0 comments: