Tamil news. Tamil real estate news. tamil vastu news. tamil real estate agent news.tamil entertainment.Tamil cinema news. read the tamil Special news and tips on Experts. | Read the Tamil Special news headlines நம்ம வீடு
 .நம்ம வீடு.காம் தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

ஐ.பி.எல். போட்டிகளில் அந்தந்த மாநில மக்களுக்குத் தங்கள் மாநிலத்துக்கு விளையாடும் வீரர்களைத்தான் பிடிக்கும். ஆனால், எல்லா மாநில மக்களுக்கும் பிடித்த வீரர்... கிறிஸ் கெய்ல். காரணம், கெய்லின் அதிரடி பேட்டிங். புனே வாரியர் அணிக்கு எதிராக 17 பந்துகளில் 50 ரன், 30 பந்துகளில் 100 ரன், 20/20 கிரிக்கெட்டில் இதுவரை யாரும் எட்டாத உச்சபட்சமாக 175 ரன்கள் என கிறிஸ் கெய்ல் அன்று ஆடியதெல்லாம் இதுவரை கிரிக்கெட் ரசிகர்கள் பார்க்காத ருத்ரதாண்டவம். பவுலர்கள், ஃபீல்டர்கள், ரசிகர்கள், சியர்கேர்ள்ஸ் என அனைவரையுமே சிக்ஸர், பவுண்டரி மழையால் டயர்டாக்கிவிட்டார் கிறிஸ் கெய்ல். ஒரே போட்டியில் மூன்று உலக சாதனைகளைச் சாத்தியப்படுத்திய கெய்ல் பற்றிய டிட்பிட்ஸ் இங்கே...
  கிறிஸ்டோபர் ஹென்றி கெய்ல் என்பதே முழுப் பெயர். கெய்ல் என்றால், 'புகழுக்குத் தகுதியானவன்’ என்று அர்த்தம். ரைட்டு விடு!
 கெய்ல் எதிலுமே வித்தியாசமானவர். இடது கை பேட்ஸ்மேன். ஆனால், வலது கை பவுலர். 1999-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில்தான் அறிமுகமானார் கெய்ல். டெஸ்ட் போட்டியில் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த உலக சாதனைக்குச் சொந்தக்காரர்.  
 6 அடி 3 அங்குல உயரம். 98 கிலோ எடை. அவ்வளவு உயரத்தில், அவ்வளவு பவரோடு அடிப்பதால் பந்துகள் மைதானத்தைத் தாண்டிப் பறக்கின்றன. கிறிஸ் கெய்ல் அதிகபட்சம் 126 மீட்டர் தூரம் பந்தைப் பறக்கவிட்டிருக்கிறார். அதிகபட்ச வேகம், மணிக்கு 173 கி.மீ.  
 ''சின்ன வயதில் மூங்கில் மட்டையைப் பேட்டாகவும், தேங்காயைப் பந்தாகவும் வைத்து விளையாடுவாராம்.  முழுத் தேங்காய்களையே சிதறடித்தவனுக்குப் பந்தைப் பறக்கவிடுவது லாலிபாப் விஷயம்தான்'' என்கிறார் அவரது தந்தை. கெய்லுக்கு இரண்டு சகோதரர்கள். மூத்த சகோதரருடன் இணைந்து 'டியூட்டி ஃப்ரைடேஸ்’ என்னும் பொழுதுபோக்கு நிறுவனம் நடத்திவருகிறார்.
 மைதானத்தில் அதிரடி ஆட்டம் ஆடும் கிறிஸ் கெய்லைப் போன்று கூலான மனிதரைப் பார்க்க முடியாது. எப்போதும் சிரிப்பு, ஆட்டம் எனக் கலகலப்பாக இருப்பார். 'மர்மர்’ என்னும் இதய வால்வு நோயால் பாதிக்கப்பட்ட போதும் உற்சாகம் இழக்கவில்லை. 2005-ல் ஆஸ்திரேலியாவில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ''இந்த வாழ்க்கை கடவுள் கொடுத்தது. அதனால், ரசித்து வாழ்கிறேன். எனக்கு யார் மீதும் எப்போதும் கோபம் கிடையாது... வராது. இனிமேல் எப்போதும் கோபப்பட மாட்டேன்'' என்றார் கிறிஸ் கெய்ல் அறுவை சிகிச்சைக்குப் பின்.
 மனிதாபிமானி.. சென்ற ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரில் கெய்ல் அடித்த சிக்ஸர் ஒன்று 11 வயதுப் பெண் குழந்தையின் மூக்கில் பட்டு, மூக்கை உடைத்துவிட்டது. மேட்ச் முடிந்த பின் அதைப் பற்றிக் கேள்விப்பட்ட கெய்ல், மருத்துவமனைக்குச் சென்று அந்தக் குழந்தையை நலம் விசாரித்ததுடன், அன்றைய போட்டியில் தான் வென்ற 'ஆட்ட நாயகன்’ பதக்கத்தை அவளுக்கே பரிசாகக் கொடுத்தார்.
 மேற்கு இந்தியத் தீவுகள் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, ஒன்றரை ஆண்டுகள் விளையாடாமல் இருந்தார். அவர் இல்லாத காலகட்டத்தில் 47 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, வெறும் 14 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. வேறு வழியில்லாமல் கிறிஸ் கெய்லின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து, இறுதியாக அணியில் சேர்த்துக்கொண்டது நிர்வாகம்.  
 தன்னுடைய பலம் எதுவோ அதில்தான் விளையாடுவார். அதிரடியாக 
Share on Google Plus

0 comments: