Tamil news. Tamil real estate news. tamil vastu news. tamil real estate agent news.tamil entertainment.Tamil cinema news. read the tamil Special news and tips on Experts. | Read the Tamil Special news headlines நம்ம வீடு
 .நம்ம வீடு.காம் தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

எட்டு சதவிகிதத்திற்கு மேல் இருந்த ஜி.டி.பி.யை ஐந்து சதவிகிதமாக குறைத்தது, வெங்காயம், தக்காளியைக்கூட சாதாரண மனிதர்கள் வாங்கிச் சாப்பிட முடியாதபடி விலை உயர்த்தியது என ஐக்கிய முற்போக்குக் கூட்டணி செய்த சாதனைகள் பல. இந்தப் பட்டியலில் இன்னொரு முக்கியமான சாதனையும் இப்போது சேர்ந்திருக்கிறது. எக்கச்சக்கமான கறுப்புப் பணத்தை ரியல் எஸ்டேட் துறையில் பாயவிட்டதன் மூலம் இன்றைக்கு வீடு விலை உச்சத்தை அடைந்து, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சகட்டுமேனிக்கு குறையலாம் என்கிற ஆபத்தை வெற்றிகரமாக உருவாக்கியதுதான் அந்தச் சாதனை.
கடந்த பத்து ஆண்டுகளாகவே ரியல் எஸ்டேட் விலை கன்னாபின்னாவென்று எகிறி, பெரும் லாபம் கிடைத்ததால், கட்டட கான்ட்ராக்ட்டர்கள் என்று மட்டும் இல்லாமல், தொழில் அதிபர்களும் தங்கள் பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தனர். தொழில் போர்வையைப் போட்டுக்கொண்டு, வங்கிகளில் பெரும் தொகையைக் குறைந்த வட்டிக்கு கடனாக வாங்கி, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து கொள்ளை லாபம் பார்த்தனர். இதனால் மனைகளின் விலை புயல் வேகத்தில் உயர்ந்தது. ஆனால், தொழில்கள் முடங்கின.
விளைவு, ஏழைகள் மட்டுமல்ல, நடுத்தர மக்கள், நாணயமான அதிகாரிகள் எல்லோருக்கும் சொந்த வீடு என்கிற கனவு தகர்ந்து போனது. பணக்காரர்கள், அந்நிய முதலீட்டாளர்கள் வாங்க... விற்க... இரண்டாவது வீடு, மூன்றாவது வீடு வாங்க... விற்க... என தேவைக்கு என்று இருக்கவேண்டிய ரியல் எஸ்டேட், இன்று ஒரு விலை பொருளாக (commodity) மாறியதுதான் நாட்டின் பெரும் துயரம்.
ஏகத்துக்கும் உயர்ந்த ரியல் எஸ்டேட்களின் விலை பல பெரிய தொழில்களையும் விரட்டி அடித்தது. இந்தியாவில் தொழிற்சாலை ஆரம்பித்து நாலு காசு லாபம் பார்க்கலாம் என்று வந்த பல நிறுவனங்கள் இடங்களுக்குச் சொல்லப்படும் விலையைக் கண்டு அதிர்ந்து ஓடிவிட்டன.
தொழில் வளர்ச்சியின்
Real Estate Agency
 மூலாதாரமான இடத்தை அரசு கையகப்படுத்துவதைகூட விவசாயிகள் அனுமதிக்க மறுக்கின்றனர். பூமி விளைந்து தங்களைக் காப்பாற்றும் என்பதற்காக அல்ல; வித்து காப்பாற்றும் என்பதால்தான். அரசு கையகப்படுத்தினால் அடிமாட்டு விலைதானே கிடைக்கும். ஏக்கர் ஒரு கோடி வரை விற்பனையாகும் விவசாய நிலத்தின் வழிகாட்டு மதிப்பு 5 லட்சம், 6 லட்சம் ரூபாய் என்றுதானே இருக்கிறது. இதுவரை வழிகாட்டு விலை கொடுத்த அரசு, இன்று நான்கு மடங்கு அதிகம் தரவேண்டும் என்கிறது.  அமெரிக்காவில் ஓர் ஏக்கர் விவசாய நிலம் விலை 1,000 டாலர். அதாவது, 65,000 ரூபாய். ஆனால், ஆண்டிபட்டியில் 5 லட்சம்  ரூபாய்! விளங்குமா இந்த நாடு? ரியல் எஸ்டேட்டில் அமெரிக்காவையே அடிச்சுட்டோம்லன்னு வேண்டுமானாலும் நாம் பீத்திக்கலாம்.
கடந்த பத்தாண்டுகளில் அரசியல்வாதிகள், பெரிய அரசு அதிகாரிகள், தங்களது லஞ்சப் பணத்தையும், பெரும் முதலாளிகள் தங்களது கறுப்புப் பணத்தையும் பதுக்கிப் பாதுகாக்க ரியல் எஸ்டேட் பூலோக சொர்க்கமாக மாறியதால், உற்பத்தி அல்லாத துறையில், அனைத்து மூலதனங்களும் முடங்கின. விளைவு, விவசாயம் 1.8% வளர்ச்சி வீழ்ச்சி; தொழில் 0.8% வளர்ச்சி வீழ்ச்சி; ஆனால், ரியல் எஸ்டேட் மட்டும் 9% அமோக வளர்ச்சி. ஒரு பொருளாதாரத்திற்கு விவசாயமும், தொழில் துறையும் 
அந்நிய முதலீடுகள், அற்றகுளத்து அருநீர் பறவைகள்போல... வந்தன, லாபம் பார்த்தன.. பறந்துவிட்டன. சில முதலீடுகள் இன்று வானுயர்ந்த கட்டடங்களாக உயர்ந்து நிற்கின்றன. கடைவிரித்தாகிவிட்டது கொள்வாரில்லை. 20 - 25% ப்ளாட் விலை சரிவு... விற்பனை சரிவு... பொருளாதாரத்தை, விவசாயப் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த வேண்டிய பணம், இன்று கட்டடங்களாக முடங்கிக்கிடக்கின்றன.
என்றும் வளர்ச்சி தொடரும் என்று எண்ணி... 2, 3 என மனைகள் வாங்குவதற்காக வங்கிகளில் கடன் பெற்றவர்கள், குடும்பச் செலவு கூடிவிட்டதால் கடன் கட்டமுடியாமல் விழி பிதுங்குகின்றனர். கடனை வசூலிக்கவும் முடியாமல், ப்ளாட்களை விற்கவும் முடியாமல் தடுமாறுகின்றன பல வங்கிகள்.
இந்த அரசாங்கம் உண்மையில் நாட்டு மக்கள் மீது அக்கறைகொண்ட அரசாக இருந்திருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்? இன்னும் இரண்டு வருடங்களுக்கு யாரும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யக் கூடாது... அந்நிய முதலீட்டிற்கு ரியல் எஸ்டேட்டில் அனுமதி இல்லை என்றல்லவா கறாராகச்  சொல்லி இருக்க வேண்டும். ஆனால், மாப்பிள்ளை செத்தால் என்ன, பொண்ணு செத்தால் என்ன மாலைப் பணம் கிடைச்சா போதும் என்றல்லவா இந்த அரசாங்கம் நினைத்தது.  
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில் பன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்த அரசாங்கம் நிலங்களை கூறுபோட்டு விற்கத்தானே செய்தது? நாளைக்கு அந்நிய நாட்டு முதலீடு அள்ளிக்கொண்டு வருமெனில் இன்னுமொரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்கி, அங்கு கஞ்சா வளர்த்து, அதையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தாலும் ஆச்சர்யமில்லை. இந்த அரசாங்கத்திற்கு வேண்டியதெல்லாம் அந்நிய முதலீடு மட்டும்தானே!
ஆக மொத்தத்தில், விலை ஏறும், விலை ஏறும் என்று ஒன்றுக்கு இரண்டாக வீட்டை வாங்கிப் போட்டவர்கள் இனி குமிழ் (Bubble) உடைந்து, விலை இறங்கப் போவதை எப்படித்தான் தாங்கிக்கொள்ளப் போகிறார்களோ! நினைத்தாலே பாவமாக இருக்கிறது!
வீடு அல்லது அடுக்கு மாடி குடியிறுப்பு கட்டுவதற்கே சதுர அடிக்கு ருபாய் 1500 முதல் ருபாய் 1700 ஆகும்பொழுது, சிங்கிள் பெட்ரூம் பிளாட் 7-9 லட்சத்துக்கு, டபுள் பெட்ரூம் பிளாட் 12-15 லட்சத்துக்கு - சென்னை சிட்டி லிமிட்டுக்குள் - கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு.
தற்பொழுது இருக்கும் விலையில் இருந்து 5% - 10% விலை குறைவாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.குமிழ் உடையாமல் இருக்கும்போதும், குமிழே இல்லாமல் இருக்கும்போதும், வீடில்லோதொரின் எண்ணிக்கை அதிகம். அதனால் விலை ஏறியது இறங்குவதற்கான வாய்ப்பு இல்லை. ஏற்றம் இல்லாமல் இருக்கலாம்.

அமெரிக்காவின் பரப்பளவு அதிகம், மக்கள் தொகை குறைவு அதனால் அப்படி.

வாங்கவே ஆளில்லாத இடங்கள் கூட இந்தியாவில் உண்டு அதை பிடித்து வேலி போட்டவன் எல்லாம் கோடீஸ்வரன் இன்று.

8 லட்ச ரூபாய்க்கு flat வந்தால் இந்திய சுபிட்சமடைந்ததாக அர்த்தம்.One reason investment money flows into real estate is because there is no carrying cost. So government should introduce a 2-3% annual property tax on all properties land other than primary house and in-use agriculture land. This tax revenue can be spend locally on schools and other infrastructure. This is how its done in US.

Anyway this is a really good article. People should realize real estate and gold investments are essentially dead money and it will not help in real economic growth (that is production)
நிதர்சனமான உண்மை. தற்போதைய வீட்டு விலை என்பது ஒரு நீர்க்குமிழி. உதாரணமாக சென்னையில் சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மெண்ட் 9 லட்சம் ரூபாய்க்கு தர முடிந்தால், அதை 25 லட்சத்துக்கு விற்கும் அவலம் முடிவுக்கு வரப் போகிறது. அமெரிக்காவில் சப் பிரைம் லோனுக்கு வந்த கதிதான் வீட்டு விலைக்கு வரப் போகிறது.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சென்னை சிட்டி லிமிட்டுக்குள் வரும் 2015ஆம் வருடம் சிங்கிள் பெட்ரூம் பிளாட் 7-9 லட்சம், டபுள் பெட்ரூம் பிளாட் 12-15 லட்சம் - நான் சொல்வது, புறநகர் அல்ல; சென்னை சிட்டி லிமிட்டுக்குள் - கிடைக்கும்.பொருளாதாரத்தை, விவசாயப் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த வேண்டிய பணம், இன்று கட்டடங்களாக முடங்கிக்கிடக்கின்றன

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில் பன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்த அரசாங்கம் நிலங்களை கூறுபோட்டு விற்கத்தானே செய்தது? நாளைக்கு அந்நிய நாட்டு முதலீடு அள்ளிக்கொண்டு வருமெனில் இன்னுமொரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்கி, அங்கு கஞ்சா வளர்த்து, அதையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தாலும் ஆச்சர்யமில்லை. இந்த அரசாங்கத்திற்கு வேண்டியதெல்லாம் அந்நிய முதலீடு மட்டும்தானே!


விற்பனை சரிவு ஓகே ....எங்கப்பா வீட்டு விலை 20% குறைஞ்சு இருக்கு?





    அடிப்படையாக இருக்க வேண்டும்.  ஆனால், இங்கு எல்லாமே தலைகீழாக இருந்தால், பொருளாதாரம் சீட்டுக்கட்டுபோல சரியாமல் என்ன செய்யும்?
    Share on Google Plus

    0 comments: